TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புதிய பயிற்சியில் புலிகள், அதிரும் காடுகள்

Pulikal
“”பயத்தை மறைக்க நினைப்பவன் நடுராத்திரியில் காட்டுவழியில் பாட்டு பாடிக்கொண்டே செல்வதுபோலத்தான் இருக்கிறது ராஜபக்சே அரசின் நடவடிக்கைகள்” என்கிறார் அந்த ஈழத்தமிழர். கொழும்பில் வாழ்ந்து ஈழத்தில் உள்ள அரசாங்க வதை முகாம்களுக்குச் சென்று, அங்கு தமிழர்கள் படும்பாட்டை சகிக்க முடியாமல் வெளியேறி, வன்னிக்காடுகள் வரை சென்று திரும்பியுள்ள அவர், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது பயோ-டேட்டாவைத் தவிர்த்துவிட்டு நம்மிடம் விரிவாகப் பேசினார். Continue reading

தமிழரின் அவலத்தில் ஐ.நா. செயலரின் நிலை! ‘இன்ன சிற்றி பிரஸ்’ எழுப்பும் கேள்விகள்

Ban Ki Moonஇலங்கை விவகாரம் தொடர்பாக சீன, இந்திய தலைவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட முக்கியமான தரப்பினருடன் தான் கலந்துரையாடி இருப்பதாகவும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பான் கீ மூன் இதனைத் தெரிவித்திருப்பதாக அந்த ஊடக அமைப்பின் நிருபர் மத்யூ ரஸல்லீ தெரிவித்திருக்கிறார். Continue reading

“தமிழீழம் மலரும்’ -பேசுகிறார் பிரபாகரன்!

sweetdreams

காணும்பொழுதெல்லாம்உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வி, “ஈழம் இனியும் சாத்தியமா?’தர்மத்தை சூதுவெல்லும், தர்மம் மறுபடியும் வெல்லும். ஈழம் வரும்.

கடந்தஈராயிரம்ஆண்டுகளில் மக்கள் சமூகங்களையும் நாகரீக வளர்ச்சியையும்அதிகமாகப்பாதித்தவை போர்களும் நாடு பிடித்தல்களும்தான். வரலாற்றின்மிகப்பெரியநாடுபிடித்தல், ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று லத்தீன் அமெரிக்காஎனப்படும்தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தம் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தநிகழ்வு. பூர்வகுடி திராவிடர்களுக்கும் ஐரோப்பிய Continue reading

வன்னி வதை முகாம்கள்: 180 நாள் கணக்கு என்று தொடங்கும் என்று முடியும்.

Vanni Makkalபிள்ளையார் தனது தாய் உமாதேவியிடம் நச்சரித்தாரம் எனது திருமணம் எப்போது என்று. அவரின் ரோதனை தாங்காத தாயார் இந்தா சுவரில் எழுது நாளைக்கு உனக்குத் திருமணம் என்று சொன்னாராம். அப்படியே பிள்ளையாரும் செய்தாராம். மறுநாள் பிள்ளையார் வந்து திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது என்ன எழுதி இருக்கிறாய் என்றுபார் என்றாராம். நாளைக்கென்றுதானே எழுதி இருக்கிறாய். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றாராம். இப்படி பிள்ளையாருக்கு இன்றுவரை தாயார் சொல்லிவருகிறாராம்.

இப்படித்தான் வன்னியில் உள்ள வதை முகாம்களின் அடைக்கப் பட்டுள்ள தமிழர்களின் கதியும். மே மாதத்தில் சொன்னார்கள் இன்னும் 180 நாட்களுக்குள் இவர்கள் மீள்குடியேற்றப் பட்டுவிடுவார்கள் என்று. இந்தியாவும் வீரம் பேசியது. Continue reading

அனுஷாந் இந்திரகாந்த் மரணம் தொடர்பாக இரு இளைஞர் நீதிமன்றத்திலே ஆஜர் (காணொளி இணைப்பு)

tn_anushanthanரொறன்ரோ காவல்துறையினர் அனுஷாத் இந்திரகாந்தன் கொலை தொடர்பாட இரு இளைஞர்களை நீதிமன்றத்திலே ஆஜர் செய்தனர். ரொறன்ரோவை சேர்ந்த்த 21 வயதுடைய Vikas Dahiya மற்றும் மார்க்கம் நகரைச் சேர்ந்த்த 19 வயதுடைய Antriksh Singh ஆகிய இருவருமே மேற்படி இளைஞர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முதன்மை நிலை கொலைக் குற்றச்சாட்டு (First Degree Murder) சாட்டப்படுள்ளனர். இந்தக் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த மரணான இளைஞரின் உறவினர் காவல்துறையின் செயல்பாடு திருப்தி தருவதாக உள்ளதாக தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த காவல்துறையினர், முன்விரோதம் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர். Continue reading

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் தம்பி மரணம்

Mahendramவிடுதலைப் புலிகளின் முன் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் தம்பி மகேந்திரன் புதன்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமானார். டென்மார்க்கில் வசித்துவந்த அவர் மிக மன உழைச்சலுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி மற்றும் போராட்டங்கள் முடிவுக்குவந்தமை என்பன இவரை வெகுவாகப் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இவரின் ஈமைக் கிரிகைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் வந்துள்ளன. இன்று(30) டென்மார்க்கில் நடைபெறும் ஈமைக்கிரிகைகளில் பலர் கலந்துகொண்டுள்ளனர். Continue reading

வெலிக்கடை சிறைச்சாலையில் தவிக்கும் தமிழ் கைதிகள் கோரிக்கை

prisonகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகள் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல், சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவ்வாறான போராட்டம் எதுவும் இடம்பெறவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Continue reading

ராஜபக்சேவிடம் மன்மோகன்சிங் அளித்த உறுதி

Mahinda_Rajapakse_with_Dr__Manmohan_Singhபாராளுமன்றத்தில், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் குறித்து 2 நாட்களாக நடந்த விவாதத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று பதில் அளித்தார்.

அப்போது அவர், ‘’இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களை 6 மாதங்களுக்குள் அவரவர் வீடுகளில் குடியமர்த்துவதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. Continue reading

பெரிய குருவியும், சின்ன குருவியும் உயிர் தப்பியுள்ளார்கள்?.

PKaran_PAmmanசமீபத்தில் புலிகளின் அதி சக்திவாந்த வோக்கி டோக்கியை ஒட்டுக்கேட்ட இராணுவத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் டங்கோ டங்கோ “குருவி” காயப்படவில்லை அகற்றும் நடவடிக்கைக்கு தயார் என்ற வாசகங்கள் இராணுவத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இந்தப் புனைபெயர் பொட்டம்மான் அல்லது சொர்னத்தைக் குறிக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துள்ளனர்.

காடுகளில் இன்னும் சில படையணிகளோடு புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருப்பது தற்போது இலங்கை இராணுவத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதேவேளை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா Continue reading

யாழில் கொள்ளைச் சம்பவம் அதிகரிப்பு – கோண்டாவிலில் கணவனும் மனைவியும் கொள்ளையர்களால் படுகொலை

Jaffnaகோண்டாவில் கிழக்கில் நேற்று புதன்கிழமை அதிகாலை கொள்ளையர்களினால் இளம் தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெறுமதிமிக்க உடைமைகளும் சூறையாடப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக குடாநாட்டில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் இருவர் படுகொலை செய்யப்பட்டமை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Continue reading

அரசசார்பு ஆயுதக் குழுக்களால் தொடர்ந்தும் சிறுவர்கள் கடத்தப்படுகின்றனர் – அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பு குற்றச்சாட்டு

23_02_09_mullaiயுத்தம் முடிவடைந்த போதும் பலவந்தமாக ஆட்சேர்ப்பு, தடுத்து வைத்தல் மற்றும் மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றிற்கான அபாயம் சிறுவர்களுக்கு தொடர்ந்தும் காணப்படுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிறுவர்களை போரில் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான கூட்டணி என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பாதுகாப்பு சபையின் செயற்குழுவின் போது இந்தக் கூட்டணி மேற் குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறது. Continue reading

அரசியல் ஆதாயத்துக்காக ட்ரோலர் மீன்பிடியை அனுமதிக்கும் டக்ளஸ்

douglasட்ரோலர் மீன்பிடியும், ஆழ்கடல் மீன்பிடியும் யாழ் குடாநாட்டின் மீன்பிடி வளங்களை அழிப்பதால், சூழல் பாதுகாப்புக் கருதி பல எதிர்ப்புகளின் மத்தியில் ட்ரோலர் மீன்பிடிக்கு எதிரான தடை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்திய ட்ரோலர்கள் யாழ் குடாநாட்டுக் கடலில் மீன்பிடிக்க வந்தபோது அவர்களையும் எதிர்த்தனர் யாழ் மீனவர்கள். ஆனால் தமது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும், அந்த தடையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீக்கியுள்ளார் என யாழ் மீன்பிடி சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை மீனவர்கள் குடாநாட்டுக் கடற்பரப்பிற்கு வந்து மீன்பிடிப்பது அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Continue reading