TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“புழுதி வாரும் வழுதிக்கு ஒரு கடிதம்”

திரு. வழுதி

நாலு சுவர்களுக்க உள்ளே பேசப்பட வேண்டிய விமர்சனங்களை இப்படி புதினத்தில் எழுதி எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உமது புலம்பலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் புதினத்தின் நோக்கம் என்னவென்பதும் எனக்கு விளங்கவில்லை.

இதே புதினம்தான் லெனின்கிராட் போர் பற்றியும், சிங்கள இராணுவம் அகலக் கால் வைக்கிறது, வன்னி சிங்கள இராணுவத்தின் புதைகுழியாக மாறப் போகிறது என மனம் போன போக்கில் எழுதிய பரபரப்புக் கட்டுரைகள், அரசியல் களங்கள் முதலியவற்றையும் வெளியிட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது. Continue reading

நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…

அண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க’, ‘ஒழிக’எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே

நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்த கிறக்கத்துடனும் என்னால் உச்சரிக்கப்பட்டதையுணர்ந்து நிறுத்திக்கொண்டேன். ஏதோவொரு கணத்தில் வெறுமையும் உண்மையும் சூழ்ந்துகொண்டநிலையில் அயர்ச்சி மேலிட மௌனமாக அந்தக் கூட்டத்தில் நடந்துபோனேன். Continue reading

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மீது சிறிலங்கா சீற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை கடினமானதாக்கி உள்ளதால் சிறிலங்கா சீற்றமடைந்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா நாட்டின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க “அவருடைய அறிக்கைகள் இந்த நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டும் விடயத்தை எமக்குக் கடினமானதாக்கி உள்ளன. அத்துடன் அவரின் அலுவலகத்துடன் நெருக்கமாகச் செயற்படுவதையும் கடினமானதாக்கி உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். Continue reading

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழர்களே கட்சி, சாதி, மதங்களை கடந்து ஒன்றுபடுங்கள்

தமிழ்மக்களே மிகவும் விழிப்பாக இருங்கள். இப்பொழுது எதிரி, தமிழன் என்ற போர்வையில் தமிழனுக்காக எழுதுவது போன்ற கட்டுரையின் ஊடாக விஷக் கருத்துக்களை விதைப்பதாக செய்திகளும், அதற்கேற்றாற் போல் கட்டுரைகளும் கூட வருகிறது. இப்படிப்பட்ட கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து விரட்ட வேண்டும்.

உறவுகளே, இன்று நமக்குள் ஒரு கருத்துப் பரிமாற்றங்களும், ஆய்வுகளும், ஏன் விவாதங்களும் கூட அவசியம் தான். இது நமக்கு சில தெளிவுகளைப் பெறவும் அடுத்த கட்ட செயல்பாட்டுக்கும் உதவும். அதனால் அது ஆக்கபூர்வமாகவும் உளவுரன் உந்துதலுக்குமாகவே இருக்க வேண்டும். மாறாக, நம்மை குழப்பமடையச் செய்வதாகவோ சோர்வடையச் செய்வதாகவோ இருக்க கூடாது. Continue reading

புலம்பெயர்வாழ் தமிழ்மக்களே! விழிப்பாக இருங்கள்

தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார். Continue reading