TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்திய வெளிவிவகார அமைச்சரின் நம்பிக்கையும் சிறிலங்காவின் நிலைப்பாடும்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதாக இந்திய இணய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தாய்லாந்தின் புகாட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய வெளிவிகார அமைச்சர்கள் மாநாட்டின் போது இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மூன்று இலட்சம் தமிழ் பொதுமக்களை மீளக் குடியமர்த்துவது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு தாம் கோரியதாக எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியைப் போன்று 180 நாட்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்த தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரது சிந்தனை இவ்வாறிருக்க, அகதிகள் மத்தியில் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முற்றாக வேர் அறுக்கப்படும் வரையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படமாட்டார்கள் என சிறிலங்கா நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.

வடபகுதியில் உள்ள முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கொழும்பு திரும்பியுள்ள அமைச்சர், அது தொடர்பாக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

போரின் முடிவில் படையினரால் மீட்கப்பட்ட 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலையில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த முகாம்களில் உள்ளவர்களின் நலன்களையிட்டு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களினதும் நலன்களையிட்டும் நாம் அக்கறைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் இடம்பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*