TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேசியத் தலைவரின் பிறந்த நாளென்று “தமிழன்” குளிர்பானம்

தேசியத் தலைவரின் பிறந்த நாளான நேற்று சுவிற்சர்லாந்தில் ‘தமிழன்’ என்று பெயரிடப்பட்ட ஒரு ஆரோக்கிய பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பானத்தை சாந்தி குழு என்ற தனியார் நிறுவனமே உற்பத்தி செய்து வெளிவிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரின் பெயர்களின் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களைக் குறிப்பதே சாந்தி (San + Thi = Santhi) என்பதாகும்.

இப்பானத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை தமது நிறுவனம் நிர்வகிக்கும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி நடத்துவதற்கு முற்றுமுழுதாகப் பயன்படுத்தப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிதி மூலம் தமிழ் மக்களின் ஜனநாயகத் தேவைகளை வலுப்படுத்தலாம் என்று அந்நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பானத்தில் பண்டாரவன்னியனின் (குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்) படம் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டாரவன்னியனே வன்னியின் இறுதி மன்னராவார். இவர் 1801 இல் பிரிட்டன் காலனித்துவப் படையுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
  • Thangavel says:

    Super.My best wishes to them

    November 30, 2010 at 06:26

Your email address will not be published. Required fields are marked *

*