TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியாவில் வெடித்த சீனாவின் ”குண்டுகள்”

இந்தியாவில் தீபாவளி என்றாலே பட்டாசுத் திருவிழா என்று தான் அர்த்தம்.

தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை தீபாவளியன்று பட்டாசுச் சத்தங்களால் அதிரும்.

இந்தமுறையும் தீபாவளியன்று பட்டாசுகள் தான் கலக்கின.

ஆனால் அவை இந்தியத் தயாரிப்பானவை அல்ல.

சீனத்துப் பட்டாசுகள் தான் வடமாநிலங்களை அதிகம் கலக்குக் கலக்கியிருக்கின்றன.

இந்தியாவில் சிவகாசி தான் பட்டாசுக்குப் பெயர் பெற்ற இடம்.

ஆனால் சீனா தான் பட்டாசுகளின் பிறப்பிடம்.

சிவகாசியா சீனாவா என்ற போட்டி தான் இந்தமுறை தீபாவளியன்று ஏற்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரத்தை குறிவைத்து அடிப்பதில் சீனா மிகவும் கில்லாடியாகவே இருக்கிறது.

மிகப்பெரிய சந்தை வாய்ப்புள்ள நாடாக இருப்பதால் தனது உற்பத்திகளை கள்ளச் சந்தை வழியாக இந்தியாவுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறது சீனா.

தரம்- தரமின்மை பற்றியெல்லாம் சீனா சிந்திப்பதேயில்லை.

தமது சரக்கு விற்றுத் தீர்ந்தால் சரி என்பது தான் அதன் கொள்கை.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 5, 10 ரூபாவுக்கெல்லாம் வாங்கலாம்.

நிச்சயமாக அந்த விலையில் இந்திய உற்பத்தியாளர்களால் விற்கவே முடியாது.

கூலி, மூலப்பொருள் செலவு, போக்குவரத்துச் செலவு, விற்பனையாளரின் இலாபம் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால் அவர்களுக்குத் தலை சுற்றும்.

ஆனால் சீனாவால் அது முடிகிறது.

எங்கிருந்தோ கொள்கலன்களில் ஏற்றி விடப்படும் இவை பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குள் வருகின்றன.

அவை சில்லறை வியாபாரிகளின் கைகளுக்குப் போய் விட்டால் அதைத் தடுக்க யாராலும் முடியாது.

அவ்வப்போது சென்னை, தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் சீன விளையாட்டுப் பொருட்கள், போலியான அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றுடன் சில கொள்கலன்கள் மாட்டிக் கொண்டன.

இப்படிச் சிக்கினால் தான் சிக்கல்.

இல்லையேல் சீனச் சரக்குகள் இந்தியர்களிடம் தாராளமாகவே புழங்கும்.

தரமில்லை, ஆபத்தானது என்றெல்லாம் சொல்லித் தான் இந்திய அதிகாரிகள் அவற்றை மடக்குகிறார்கள்.

ஆனால் உண்மை அது மட்டுமல்ல.

குறைந்து விலைக்கு இவற்றை விற்று சீனா நடத்தும் இந்தப் பொருளாதாரப் போரை முறியடித்து உள்ளூர் உற்பத்தியை பாதுகாப்பது தான் அவர்களின் ஒரே நோக்கம்.

எல்லா வடிவங்களிலும் சீனாவின் உற்பத்திகள் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டன.

இந்தியப் பொருளதாரத்துக்குப் பேரிடியாக இவை அமைந்து வருகின்றன.

இந்தநிலையில் தான் சீனத்துப் பட்டாசுகளின் வடிவத்திலும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது பிரச்சினை.

பங்களாதேஷ் வழியாக சீனா மிகத் தாராளமாகவே பட்டாசுகளை அனுப்பி விட்டது.

இந்தியாவின் நாடித் துடிப்பை சரியாகக் கணித்து சீனா மேற்கொண்ட இந்த்த் தாக்குதல் உள்ளூர் பட்டாசுத் தொழிலுக்கு பெரும் சவாலாகி விட்டது.

உள்ளூர் பட்டாசுத் தொழில் என்றால் சாதாரணமில்லை.

அது பல நூறு கோடி ரூபா வருமானத்தைத் தேடித் தருவது.

பலகோடி மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது.

இப்படிப்பட்ட இந்தியாவின் பட்டாசுத் தொழிலுக்குத் தான் சீனா உலை வைக்கத் தொடங்கி விட்டது.

வட மாநிலங்களில் பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக சிவகாசிப் பட்டாசுகள் அங்கு அனுப்பத் தாமதம் ஆகியது.

அந்த இடைவெளிக்குள் சீனா தமது பட்டாசுகளை பங்களாதேஷ் வழியாக அனுப்பி வைத்தது.

வட மாநிலங்களில் இம்முறை சீனப் பட்டாசுகளுடன் தான் தீபாவளி.

இதனால் சிவகாசிப் பட்டாசுகளின் மவுசு குறைந்து போய் விட்டது.

அதுவும் இந்தியர்களை எப்படியெல்லாம் வசப்படுத்தலாம் என்று சீனா நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

அதற்கேற்ப சரக்குகளை அனுப்பி வைத்தது.

சச்சின் றொக்கட், டோனி வெடி, லக்ஸ்மன் பட்டாசு என்று கிரிக்கெட் நட்சத்திரங்களின் பெயர்களுடன் வந்தன சீனப் பட்டாசுகள்.

அவை மட்டுமல்ல ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், சாருக்கான், கத்ரினா கைப் என்று சினிமா நட்சத்திரங்களின் பெயர்களையும் சீனர்கள் விட்டு வைக்கவில்லை.

அதைப் பார்த்துப் பிரமித்துப் போன வட மாநிலத்தவர்கள் சீனப் பட்டாசுகளில் அபாயமுள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாங்கிக் கொளுத்தித் தள்ளினர்.

சிவகாசிப் பட்டாசுகளை விட அவர்களுக்கு இவை நல்ல தீனியாகவும் அமைந்து விட்டனவாம்.

அதிகமான சத்தம், அதிகமான வர்ணஜாலங்களைக் காண்பித்த சீனப் பட்டாசுகளிடம் இந்தியர்கள் உண்மையில் மயங்கித் தான் போயினர்.

அதுமட்டுமல்ல விலையும் உள்ளுர் பட்டாசுகளை விட மலிவோ மலிவு.

4000 ரூபா வென்று பக்கற்றில் போடப்பட்டிருந்த சீனப் பட்டாசுகளை வெறும் 400 ரூபாவுக்கு வாங்கியதாக வேறு அவர்கள் பலரும் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

இது மற்றொரு பிளஸ் பொயின்ற்.

தீபாவளிக்கு முதல் நாள் ஆபத்தான சீனப் பட்டாசுகளை குறைந்த விலையில் விற்க சிலர் திட்டமிடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பொலிசார் எச்சரித்தனர்.

ஆனால் ஆபத்தைப் பற்றி யாரும் கவலைப்படவேயில்லை.

குறைந்த விலையில் நிறைய பட்டாசுகளை வாங்கிக் கொளுத்துவதில் தான் அவர்களின் ஆர்வம் இருந்தது.

இதன்காரணமாக இந்தியப் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த வருடங்களில் சீனத்துப் பட்டாசுகள் தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தப் போகின்றன.

போகிற போக்கைப் பார்த்தால் இந்தியக் கோவில்களில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமத்தைக் கூட சீனா கள்ளமாக அனுப்பி விடும் போலிருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News
  • John says:

    Very good China, keep it up. If you can completely collapse the Indian economy. All the people of the North East will support you willingly and wholeheartedly for what India has been doing do the minority. There is no democracy and people want democracy.

    November 11, 2010 at 04:38
  • Jim Tolstoy says:

    Best wishes to china, please send more of this kind and different things for the poor who are not able to celebrate any festivals

    November 11, 2010 at 04:43

Your email address will not be published. Required fields are marked *

*