TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எயிட்ஸ் நோயை எதிர்க்கவல்ல மரபணு கண்டுபிடிப்பு

எயிட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமி தாக்கத்திற்கு உள்ளாகும் நோயாளிகள் இலகுவில் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும்போதிலும், வெகு சிலர் எச்.ஐ.வி. கிருமித்தாக்கத்திற்கு உள்ளாகிய போதிரும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவதில்லை. இவ்வாறு எச்.ஐ.வி.தாக்கத்திற்குள்ளாகியும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளாகாது இருப்பதற்கு அவர்களின் மரபணுக் கட்டமைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தாக்கத்திற்குட்பட்ட 1000 பேர்களிடம் நடாத்தப்பட்ட ஓர் ஆய்விலிருந்து இது கண்டறியப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. தாக்கத்திற்குட்பட்ட போதிலும் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளாகாத 974 பேரிடம் பெறப்பட்ட அவர்களின் மரபணுக்கள் எயிட்ஸ் நோய்த்தாக்கத்திற்குள்ளான 2648 பேரின் மரபணுக்களுடன் ஒப்பிடப்பட்டு இந்த பரிசோதனை நடாத்தப்பட்டது.

எச். ஐ. வி. கிருமியை எதிர்க்கும் மரபணுக் கட்டமைப்புள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியின் வீரியமிக்க செயற்பாடே இந்த மாற்த்திற்கு காரணம் எனக் கருதப்படுகின்றது. ஆரம்ப கட்ட ஆய்விலிருந்து இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான மரபணுக் கட்டமைப்பிலுள்ள வித்தியாசங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் தெளிவானதொரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கருதும் விஞ்ஞானிகள், இவ்வாய்வின் முடிவு எயிட்ஸ் நோய் மருந்து தொடர்பான ஆய்வுகளை மேலும் வேகப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*