TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தானம்கொடுத்து தமிழில் பிரித்தோதி தகனம் செய்

தானம்கொடுத்து தமிழில் பிரித்தோதி தகனம் செய்யப் பழகுவோம்.

“உன்னையே நீ அறிவாய்” என்ற சோக்கிரட் டீஸின் வார்த்தை மிகப் பெரும் ஆழமான அர்த்த முடையது. உன்னையே நீ அறிவாய் என்பது ஒரு சுயமதிப்பீடாகும்.

தன்னைப்பற்றி தானே அறிந்துகொள்ளும் போதுதான் பலம் எது? பலவீனம் எது? என்பது தெரியவரும். என் பற்றிய சுயமதிப்பீடு என்னிடமில்லையென்றால் அது பேராபத்தாகிவிடும். இந்தநிலை தமிழர்களாகிய எம்மிடம் தாராளமாக உண்டு.எல்லாம் எமக்குத் தெரியும். எம்மைவிட திறமை யானவர்கள் எவரும் கிடையாது.

இந்த நினைப்புத்தான் தமிழினத்தை இந்நி லைக்கு கொண்டுவந்தது. இதற்கு மேலாக, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளத்தெரியாத பலவீனமும் தமிழினத்தின் குருதியோடு கலந்து கொண்டதென்பதைச் சொல்லித்தானாக வேண் டும். இதைவிட ஏதேனுமுண்டா என்று கேட்டால், ஆம், நாம் எதையும் சிறிது காலத்துக்கு மட்டுமே தூக்கி துலாம்பரப்படுத்துவோம். காலம் கடந்ததும் அதைக் கைவிட்டுவிடுவோம்.

இந்தப் பலவீனம்தான் எங்களினத்தை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. எதற்கும் ஒரு முடிபு காணும்வரை எங்கள் சிந்தனையும் முயற்சியும் இருக்குமாயின் நிச்சயம் நாம் வெற்றி பெறமுடியும். பொதுத் தேர்தல் நடந்தபோது தேர்தலில் குதித்த தமிழ் வேட்பாளர்கள் எப்படியயல்லாம் பேசினார்கள். ஆனால் அவர்கள் மிகச் சொற்ப காலத்தில் அதையயல்லாம் மறந்துவிட்டார்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படுவது தொடர்பில் இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது அல்லது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு இலங்கையரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைதனிலும் நடக்கின்றதா? எதுவுமேயில்லை.

தேர்தலில் வெற்றிபெற்ற வர்கள் தங்கள் பாடு. ஒருசிலர் மட்டுமே களத்தில் நின்று மக்கள்பணி செய்கின்றனர். அப்படியானால் இனப்பிரச்சி னைக்கான தீர்வு எங்ஙனம் சாத்தியமாகும்! கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப் படும், தேடுங்கள் கிடைக்குமென்ற யேசுபிரா னின் வார்த்தைகளில் தங்கள் பிரதிநிதிகளைத் தேடும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருக் கின்றனர். என்னசெய்வது? இனப்பிரச்சினை பற்றி நாங்கள் மறந்துவிட்டோம். இனி அதற்கு முன்னுரிமை கொடுக்கமாட்டோம். அட! இப்போ தெல்லாம் யாழ்ப்பாணத்தில் பாதீனியச் செடி தாராளமாக வளர்ந்து நிறைந்து நிற்கின்றன.

எவரும் கவனிப்பதேயில்லை. பாதீனியம் முளைத்த ஆரம்பத்தில் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது பாதீனியத்துடன் பழகி உறவுமாகிவிட்டனர். அதனால் அவர்களுக்கு பாதீனியம் இப்போது பிரச்சினையேயில்லை. இதுபோலத்தான் நாங்களும் இன்னும் சிலகாலம் போக இனப்பிரச்சினையை மறந்து பிரித்தோதப் பழகிவிடுவோம். அதற்கும் சில காலம் போக தானம் கொடுத்து தமிழில் பிரித் ஓதி தகனம் செய்யவேண்டியதுதான்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*