TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நான் ரவுடியா? ராஜபக்சேவிடம் சண்டை போடவேண்டுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் இந்திய நாடாளுமன்ற குழுவுடன் இலங்கை சென்று வந்தார்.

இந்த பயணத்தின் போது அவர் ராஜபக்சேவிடம், அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்ததற்கு நேருக்கு நேர் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து விட்டு வந்து இங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்;கண்டனம் தெரிவிக்கிறார் என்று

கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, ‘’ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்?என்ற கேள்விக்கு,

’’எதுவும் செய்யவில்லை; செய்யவும் முடியாது. நான் தனியாக எதுவும் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் 5 பேர் இருந்தால்தான் குரூப். 8 பேர் இருந்தால்தான் பார்ட்டி. நான் தனியாளாக இருந்து எதுவும் செய்துவிடமுடியாது. அப்படி இருந்தும் போராடி சில சமயம் பேசியிருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

இலங்கையில் ராஜபக்சேவை சந்தித்தபோது, ‘நல்ல வேளை இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இல்லை. இருந்திருந்தால் இவரையும் மேலே அனுப்பியிருப்போம்’ என்று சொன்னார். இதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்?

’’சிரிச்சுக்கிட்டேன்; அவ்வளவுதான். அவை நாகரிகம் கருதி அப்படி நடந்துகொண்டேன். டி.பாலுவுடன் ராஜபக்சே பேசிக்கொண்டிருந்தபோது என்னைக்காட்டி அப்படி சொன்னார்.’’

ராஜபக்சே கேட்டபோது மவுனமாக இருந்துவிட்டு இங்கே வந்த இரண்டாவது நாளே சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் ராஜபக்சேவை அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தீர்கள். இது கபட நாடகம் என்று விமர்சனம் இருக்கிறதே?

பிரபாகரனை காலிபண்ணிவிட்டேன் என்று ஆணவத்தில் அப்படி சொன்னார். பிரபாகரனுக்கு நான் நெருக்கமாக இருந்தது தெரியும் என்கிற அர்த்தத்தில் தான் அப்படிச்சொன்னார். அதை நான் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.

இங்கிருந்து 10 பேர் சென்றிருந்தோம். அதில் நான் தான் சிறுவன். நான் அதிக பிரசங்கி தனமாக பேசமுடியுமா. எனக்கென்று ஒரு பக்குவம் இருக்கு. முதிர்ச்சி இருக்கு. அதையும் தாண்டி நான் என்ன ரவுடியா? அவருடன் சண்டை போடமுடியுமா?”

நீங்கள் இலங்கை சென்றிருக்க வேண்டாம் என்ற கருத்து நிலவுகிறதே?

அவர்(ராஜபக்சே) இப்படி கமெண்ட் அடிப்பார் என்று எனக்கு தெரியுமா. என் மக்களை சந்திக்கவே நான் சென்றேன். எங்கள் குழுவுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் அனுமதிப்படிதான் ஒவ்வொருவரும் பேசினோம்.

ராஜபக்சே உங்களுக்கு பணம் கொடுத்து வாயை அடைத்துவிட்டார் என்று பேசப்படுகிறதே?

’’நான் மட்டுமல்ல; இங்கிருந்து சென்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்சே வீட்டில் தேனீர் கூட குடிக்கவில்லை. வெளியுறுவுத்துறை அமைச்சர் இல்லத்தில் சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பியபோது ஒரு நீளமான கவர் கொடுத்தார்கள். பிரித்துப்பார்த்தால் அது டீத்தூள் பாக்கெட். மற்றபடி எனக்கு மட்டுமல்ல; வேறு யாருக்குமே எதுவும் கொடுக்கவில்லை.’’

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*