TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நெடியவன், உருத்திரகுமாரன் ஆகியோரை நாடுகடத்த முடியாது

நெடியவன் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோரை நாடுகடத்த முடியாது என சிங்களத்திடம் அமெரிக்காவும் நோர்வேயும் உறுதியாக தெரிவித்து விட்டன.

புலம்பெயர்வாழ் தமிழர்களைத் தற்போது கட்டுப்படுத்தும் நெடியவன் என்பவர் நோர்வேயிலும் நாடுகடந்த தமிழீழ அரசினது பிரதமரான உருத்திரகுமாரன் அமெரிக்காவிலும் வாழ்ந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இருவரையும் கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்துமாறு தொடர்புடைய இரண்டு நாடுகளையும் சிறிலங்கா கோரியிருந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் பயங்கரவாதம்சார் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற உறுதியான ஆதாரங்கள் எதுவுமின்றித் தங்களால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாது என அமெரிக்காவும் நோர்வேயும் மறுப்புத் தெரிவித்துவிட்டன.

எனினும் சிறிலங்காவிற்கும் இணைத்தலைமை நாடுகளுக்குமான இடைத்தரகராக மீண்டும் எரிக் சொல்கெய்ம்

“நான் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவிற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டியிருக்கிறது” என்கிறார் நோர்வே நாட்டினது அனைத்துலகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்காவினது தோற்றுப்போன அமைதி முயற்சிகளின்போது இடைத்தரகராகச் செயற்பட்டவருமான எரிக் சொல்கெய்ம்.

அண்மையில் நியூயோர்க்கில் வைத்து அதிபர் ராஜபக்சவினைச் சந்தித்து உரையாடியிருந்த அமைச்சர் சொல்கெய்ம் நோர்வேயில் அதிக பிரதிகள் விற்பனையாகும் ஒப்தன்போஸ்ரன் [Attenposten] என்ற செய்தி இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சொல்கெய்மினது இந்த அறிவிப்பினையடுத்து குழம்பிப் போயிருக்கும் புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் தங்களது அதிருப்தியினை வெளியிட்டிருக்கிறார்கள்.

“அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டிய தேவை எழுந்திருக்கிறது” எனக் கூறிக்கொண்டு சனவரி மாதம் சொல்கெய்ம் கொழும்புக்கு பயணம் செய்வதன் நோக்கம்தான் என்ன என புலம்பெயர் வாழ் தமிழர்கள் மாத்திரமல்லாது அரசாங்கத்துடன் இணைந்திருப்போர் உள்ளிட்ட நாட்டினது தேசியவாதிகள் கேள்வியெழுப்புகிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*