TamilSpy

பொழுது போக்கு இணையம்…

செந்தமிழன் சீமானுக்காகவே உருவான பாடல்

‘பசங்க’ படத்தின் நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து களவானி படத்தின் வெற்றியுடன் விமல் நடித்துவரும் ‘கலிங்கத்துப்பரணி’ பல தடங்கல்களைத் தாண்டி படப்பிடிப்புக்களத்தில் படுவேகம் காட்ட ஆரம்பித்துள்ளது.

படம் தொடங்கவேண்டிய நேரத்தில் விமல் சம்பளத்தை உயர்த்தி கேட்டு வீம்பு பண்ணியதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து வைக்கும் நிலைக்கேபோனது. சங்கம் சமாதனம்படுத்த ஒரு வழியாக கடந்த சிலதினங்களுக்கு முன் சுமுகமாக ஆரம்பிக்கப்பட்டது கலிங்கத்துப்பரணி. இந்தச் சங்கதி அனைவரும் அறிந்த சங்கால பழசுதான்.

ஆனால், ஏகப்பட்ட சிக்கல்களை கடந்து தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் சில காட்சிகளை எடுக்காமல் சீமானுக்காக காத்திருக்கபோகிறார் இயக்குனர் ஐந்து கோவிலான் என்பதுதான் திரைவட்டாரத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு சங்கதி.

இது பற்றி இயக்குனர், “ இந்தக் கதையை எழுதும்போதே அதில் ஒரு கதாபத்திரத்தில் சீமான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். படத்தை நினைத்த மாதிரி உடனே தொடங்க முடியாமல் போனது. அதே நேரம் சீமான் சிறை செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு வருடம் ஆனாலும் அவருக்காக ஒதுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அவர் வந்து நடிப்பார். அதுவரைக்கும் காத்திருப்போம்.” என உறுதியாக கூறிவருகிறாராம் ஐந்து கோவிலான்.

இதுமட்டுமில்லாமல், சீமானுக்காக பாடல் ஒன்றும் ஏற்கனவே உருவாக்கிவிட்டார்களாம். ஏ.கே.மூவிஸ் தயா‌ரிக்கும் ‘கலிங்கத்துப் பரணி’ படத்தின் இசை – பூ படத்தில் ஹிட் பாடல் தந்த வெற்றி இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன். ஒளிப்பதிவு – கல்லூரி, ரெட்டைச்சுழி படங்களின் கேமராமேன் செழியன்.

கலிங்கத்துப் பரணி என்றாலே வீரம் போற்றுதல்தான். தலைப்புக்கு ஏற்ப படமும் அதிரடி ஆக்‌ஷன் படம்தானாம். (அதனாலதான்…தொடங்குவதற்கு முன்பே சம்பளச் சண்டையை ஆரம்பித்துவிட்டாரோ விமல்).

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*