ரஜினி கமல் இணைந்து நடிக்கும் புதிய படம்.
ரஜினி – கமல் இவரையும் இணைத்து 500 கோடியில் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு சன் நிறுவனம் தயாராகி வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கும் ஷங்கரே இயக்குநராக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எந்திரன் போல அதிக இலாபத்தை குறிவைத்து சன் களமிறங்கியுள்ளது. ஆனால் கமல் – ரஜினி இருவரையும் கட்டி மேய்ப்பது, ஒட்டி நடிக்க வைப்பது இலகுவான காரியமல்ல என்கிறார்கள் மற்றவர்கள். சன் நிறுவனம் ஒரு தூண்டிலைப் போட்டுள்ளது. மீன்கள் சிக்குமா என்றும் பார்க்கிறது. ஏற்கெனவே ரஜினிக்கு எந்திரன் படத்தின் அனுபவங்கள் இருப்பதால் நிலமை சிக்கலாகவே இருக்கும்.

Category: Cinema
Tag: ரஜினி கமல்