TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஹீரோக்கள் மீது என்ன கோபம் – கொதிக்கும் கரு.பழனியப்பன்

இயக்குனர் கரு.பழனியப்பனின் படங்கள் எப்போதும் அதிக சோகம் இல்லாமல் அதிக வன்முறையும் இல்லாமல் நிதானமான நிலையில் மனதை வருடுவதாக இருக்கும் என்பதே சினிமா ரசிகர்களின் கருத்து. அந்த வரிசையில் அவர் இயக்கிய பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் முக்கிய இடம் வகிப்பவை.

இப்போது இயக்குனர் கரு.பழனியப்பன் தானே இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மந்திரப் புன்னகை. இந்தப் படத்தின் கதாநாயகி மீனாட்சி. சமீபமாக இந்தப் படத்தைப் பற்றி பேசிய கரு.பழனியப்பன், “பொதுவாக இயக்குனர் நடிகராகும் போது, நான் ஒரு கதை வைத்திருந்தேன் அதை எல்லா நடிகர்களிடமும் சொன்னேன். ஆனால் கதை நன்றாக இருக்கிறது என்று சொன்னார்களே தவிர அதில் நடிக்க முன்வரவில்லை. அதனால் நானே நடிக்க முடிவெடுத்தேன் என்று சொல்லுவார்கள்.

ஆனால் எனக்கு அப்படி எந்த அனுபவமும் இல்லை. எனக்கு எப்போதும் நடிகர்கள் மேல் புகார்கள் இருந்ததில்லை. ஏனென்றால் அவர்கள் மேல் எனக்கு எந்த கோரிக்கைகளும் இருந்ததில்லை. கோரிக்கைகள் இருந்தால் தானே புகார்கள் இருக்கும்,” என்றார்.

ஆனால் மந்திரப் புன்னகை டிரைலர் பார்த்த யாராலும் அவர் சொல்வதை ஏற்க முடியாது. டிரைலரின் ஒரு காட்சியில் ‘சார் உங்க பையன் ரொம்ப மக்கு’ என்று ஒருவர் சொல்ல… அதற்கு சந்தானம், ‘மக்கா இருந்தா என்னடா? நானே படம் எடுத்து அவனை ஹீரோவாக்கிட்டு போறேன்’ என்று பதில் சொல்லுவார். இதனால் மீண்டும் கரு.பழனியப்பன் மீது கேள்விகள் பாய்ந்தன. இதற்காகத் தான் நான் முன்பே என் விளக்கத்தை சொன்னேன், அது படத்தில் வரும் ஒரு காட்சியே தவிர எனக்கு ஹீரோக்கள் மீது எந்த கோபமும் இல்லை என்று மீண்டும் மழுப்பினார்.

ஆனால் அவர் படத்தில் எந்த ஹீரோவும் நடிக்க முன்வராத காரணத்தினால்தான், ஹீரோக்களை ‘மக்கு’ என விமர்சிக்கிறார் கரு.பழனியப்பன் என்று செய்திகள் பரவிய நிலையில் உள்ளன. இது பற்றி மீண்டும் கரு.பழனியப்பன் விளக்கம் தருகையில், “நான் கதை முடித்த பின் கதாநாயகனை தேடுவதே இல்லை. தயாரிப்பாளரைத் தான் தேடுவேன். ஏனென்றால் அவர்கள் தான் படம் முடியும் வரை நம்மோடு இருப்பவர்கள். அவர்களின் சந்தோஷம் தான் எனக்கு முக்கியமாக தெரியும்.

இந்தப் படத்திற்கும் அப்படித்தான் நடந்தது. கதை சொல்லி முடித்த பின் என்னை கதாநாயகனாக நடிக்க தயாரிப்பாளர் தான் வற்புறுத்தினார். இந்த கதையை நான் எந்த ஹீரோவிடமும் சொல்லவில்லை,” என்று இது பற்றி கேட்பவர்களிடம் கொதிக்கிறார் கரு.

சமீபமாக கரு.பழனியப்பனை பற்றி பேசிய சசிக்குமார், “என்னை ஹீரோவாக நடிக்க சொல்லி கரு.பழனியப்பன் கேட்டார், ஆனால் அப்போது நான் இயக்குனராக இருந்த நிலையில் அதை மறுத்துவிட்டேன். அதன் பிறகு, சில காரணங்களுக்காக நாடோடிகள் படத்தில் ஹீரோவாக நடித்தேன். இதனால் கரு.பழனியப்பன் சார் என்மீது கோபப்படுவார் என நினைத்தேன். ஆனால் அதற்கு பதிலாக என்னை பாராட்டினார். எந்த கோபமும் இல்லாமல் என்னிடம் பழகுகிறார் என்றார்.

மூன்று பெண்கள் ஒரு மனிதனின் வாழ்வை எப்படி மாற்றுகிறார்கள் என்ற கதையை கொண்டதாம் மந்திரப் புன்னகை. பொதுவாக வித்தியாசமான கதை என்று சொல்லுவார்கள். ஆனால் இது வழக்கமான கதை தான் என்று வித்தியாசமாக பேசிய கரு.பழனியப்பன் மந்திரப் புன்னகையால் மயக்க இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஹீரோக்கள் மீது கோபமா? இல்லையா… என்பது படம் வந்தால் தெரியும்.

வரட்டும் பாத்துருவோம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*