TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்னொரு போருக்குத் தமிழரை தூண்டி விடுகிறதா சிங்கள அரசு?

சுமார் 17 மாதங்களுக்கு முன்னர், மேற்கு நாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது – “புலிகள் இயக்கம், போராட்டம் எல்லாம் அழிந்து விட்டது. போராட்டம் என்று சொல்லிச் சொல்லி தமிழர்கள் நிறைய இழந்து விட்டார்கள்.

இனி அபிவிருத்தி, வசதிகள், வாய்ப்புகள் என்று கிடைப்பதை மக்கள் அனுபவிக்க விட வேண்டும்“ என்று ஒரு திருப்தியோடு கூறினார்.

அவர் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்.

போர் முடிந்துவிட்டது என்பதால் அடுத்து நடக்கப் போவது அபிவிருத்தி என்றளவில் தான் அவரது கருத்து இருந்தது.

“இப்போதைக்கு அப்படித் தான் இருக்கும். காலப்போக்கில் தான் தெரியும்- இதன் விளைவுகள் எப்படியென்று“ எனப் பதில் கூறிவிட்டு இருந்து கொண்டேன் நான்.

இப்போது நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது அந்தக் காலம் வந்து விட்டது போலத் தெரிகிறது.

புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை இல்லாமல் போன இந்த 17 மாத காலத்திலும் என்ன நடந்திருக்கிறது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று பார்ப்பவர்களால் இது சாதகமான மாற்றமா அல்லது பாதகமான மாற்றமா என்பதை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்மக்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதைத் தடுப்பதற்கு யாருக்குமே திராணியில்லை.

யாழ்ப்பாணத்துக்குப் போயுள்ள 200 சிங்களக் குடும்பங்கள் தாங்கள் அங்கு வாழ்ந்ததாகவும், தமக்கு அங்கு காணி தர வேண்டும் என்றும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அவர்களுக்கு காணி வழங்க முடியாது என்று ஒரே குரலில் கூறித் திருப்பி அனுப்புவதற்கு அங்குள்ள தமிழ் அமைச்சராலோ அதிகாரிகளாலோ முடியவில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களாக தெற்கில் வசதிகளோடு வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள்.

போர் முடிந்து 17 மாதங்கள் வரை அங்கு வாழ்ந்த இவர்கள் இப்போது திடீரென யாழ்ப்பாணத்தில் இடம் கேட்கிறார்கள்.

வடக்கில் இந்தியா வீடமைப்பு உதவிகள் கொடுக்கப் போகிறது.

அதை இவர்களுக்கும் கொடுத்து, இலவசமாகவே குடியேற்றங்களை அமைக்கலாம் என்ற நோக்கில் தான் இந்த அவசரம்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதாக கூறிய அரசாங்கம் எந்த அடிப்படை வசதியையுமே செய்து கொடுக்கவில்லை.

ஆனால் வன்னியின் ஒரு பகுதியான ஓமந்தைக்குக் கிழக்கே உள்ள கொக்குவெளி என்ற தமிழ்க் கிராமத்தில் (இப்போது அது கொக்கெலிய ஆகிவிட்டது.) – குடியேற்றப்பட்ட சிங்களவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.


அவர்களுக்கு கல்லால் ஆன நிரந்தர வீடுகள்- ஆனால் தமிழர்களுக்கு வன்னியில் ஓலைக்குடிசைகள் கூடக் கிடையாது.

இந்தளவுக்கும் வன்னியில் வாழ்ந்த தமிழர்கள் அதைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

ஆனால் சிங்களவர்களோ அத்துமீறிக் குடியேறியவர்கள்.

இந்தியாவின் வீடமைப்பு உதவியைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களைக் குடியேற்ற முனைகிறது சிங்கள அரசாங்கம்.

யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க முடியாத நிலையில் வன்னியிலும், கிழக்கிலும் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கின்ற திராணி இப்போது யாருக்குமே இல்லை.

சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் வெற்றி பெற முடிந்தது புலிகளால் மட்டுமே.

அவர்களின் காலத்துக்குப் பிறகு சிங்களக் குடியேற்றங்களை தமிழர்களால் மிரட்சியுடன் தான் பார்க்க முடிகிறதே தவிர, அதற்கு அப்பால் எதையும் செய்ய முடியவில்லை.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என்று வடக்கில் இடம்பெற்று வந்த சிங்களக் குடியேற்றங்கள் இப்போது யாழ்ப்பாணம் வரை வந்து விட்டது.

அரசாங்க அதிகாரிகள் இடமில்லை என்றனர். அரசியல்வாதிகள் இது அத்துமீறல் என்றனர்.

ஆனால் அவர்கள் யாருமே அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை.

அவர்கள் தமது இலக்கை இப்போது மெல்ல மெல்ல அடைந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மூன்று மாத நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அதற்குப் பிறகு காணிகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது.

இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசதரப்பில் காட்டப்பட்டுள்ள பச்சைக்கொடி தான்.


போர் முடிவுக்கு வந்து 17 மாதங்களாகின்ற நிலையில் வடக்கில் அபிவிருத்தி என்பதே நடக்கவில்லை.

சிங்களக் குடியேற்றங்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

புலிகள் என்ற பாதுகாப்பு வளையம் உடைந்து போனதன் விளைவு இது. இதுபோன்று பல முனைகளில் இதன் தாக்கம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

போர் எம்மை அழித்ததும் உண்மை- அதேவேளை எம்மைக் காத்து நின்றதும் உண்மை. இதெல்லாம் அந்த புலம்பெயர் நண்பருக்குத் தெரியாதிருக்கலாம்.

சிங்களக் குடியேற்றங்கள் விடயத்தில் இனிமேல் தமிழர்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற கட்டம் வந்து விட்டது என்பதே உண்மை.

மட்டக்களப்பு கெவுளியாமடுவில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் சிங்களவர்களால் விவசாயத்துக்காக அபகரிக்கப்படுகின்றன.

இதன்காரணமாக கால்நடைகளை நம்பி வாழும்- அவற்றின் மூலம் வருமானம் பெறும் ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதையெல்லாம் கேட்கப் போனால் பிரிவினைவாதி என்று சிங்கள அரசாங்கம் கூறும்.

ஒரே நாடு ஒரே மக்கள் என்று கூறும் அரசாங்கம் தான், பெரும்பான்மைச் சிங்கள இனத்தைக் கொண்டு சிறுபான்மை இனங்களை நசுக்குகின்றது.

இதுதான் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் முளைவிடக் காரணமாக இருந்தது.

அதேசூழலை இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள அரசே ஏற்படுத்தி விடும் போல இருக்கிறது.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தானாக உருவெடுத்ததில்லை- அதை உருவாக்கியது சிங்களப் பேரினவாதம் தான்.

இதை நாம் சொல்லவில்லை- சிங்கள இராஜதந்திரிகளே அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இப்போதும் சிங்களப் பேரினவாதம் செய்கின்ற காரியங்கள் எல்லாமே தமிழரைக் கோபமூட்டி மீளவும் ஆயுதமேந்த வைப்பதற்காகக் கூட இருக்கலாம்.

ஏனென்றால் அது தமிழரின் மக்கள் தொகையை குறைப்பதற்கு அவர்களுக்கு இன்னமும் வசதியானதாகி விடுமல்லவா?

படங்கள்- கொக்குவெளியில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள்

முகிலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
 • kumar says:

  hello, tamilan land cash pay pani vankiran, but avangal vanthi nikrankal, unda amma enga nikra?? makintha family kku kundi naka adkal venumama, ena unda family elam ankaya??

  October 30, 2010 at 22:28
 • Thas says:

  Thamilan
  Well done. Kumar could be CTC or related member.

  November 2, 2010 at 23:14

Your email address will not be published. Required fields are marked *

*