TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அன்புள்ள அண்ணா! – மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்

நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன்.

நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. ‘நல்லாயிருக்கீங்களா… எப்படி

இருக்கீங்க’ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள்

கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக்

கிடக்கிறோமண்ணா.

உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா…நான், என் அம்மா, என்

தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான்

அடைக்கப்பட்டோம். இங்கு வந்த மூன்றாவது நாள் என் அண்ணாவை இயக்கத்தை சேர்ந்தவர்ன்னு சொல்லி இழுத்துக்கிட்டு

போய்விட்டது சிங்கள ஆர்மி. என் அண்ணாவுக்கு 23 வயசு இருக்கும். என் அண்ணா இயக்கத்தை சேர்ந்தவனில்லை.

முல்லைத்தீவு மருத்துவமனையில் பணியாளனாக இருந்தான்.

இறுதி கட்டத்தில் நடந்த போர், அதன் பிறகு சித்தரவதைக் கூடங்களாக மாறிவிட்ட நலன்புரி முகாம்கள், அதில்

அடைத்து வைக்கப்பட்ட எங்கட சனங்களுக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் இந்த உலகத்துக்கு தெரிந்த மாதிரி

உங்களுக்கும் தெரிந்திருக்கும் அண்ணா. அன்னைக்கு நடந்ததையெல்லாம் இன்னைக்கு நினைவு படுத்தி உங்களையெல்லாம்

சோகப்படுத்த விரும்பலை.

ஆனா, முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட எங்க சனத்தோட நிலைமைகள் என்னன்னு இந்த உலகத்துக்கு தெரியுமா அண்ணா?

எந்த கொடுமைகள் தமிழ் பொண்ணுங்களுக்கு நடக்கக்கூடாதுன்னு தேசிய தலைவர் இயக்கம் கட்டினாரோ… அந்த

கொடுமைகள் இன்னைக்கு தடையில்லாம நடக்குது. செத்து செத்து பிழைக்கிறோம் அண்ணா. அதைச் சொல்லத்தான் இந்த

கடிதத்தை எழுதறேன். இந்த கடிதம் உங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ… தெரியாது. ஆனா, ஏதோ ஒரு

நம்பிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறன். நம்பிக்கைங்கிற ஒத்த வார்த்தை இன்னும் எங்கட சனங்க மனசுல

இருக்கிறதாலதான் இன்னமும் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கினம்.

6 மாதங்களுக்கு முன்பு முகாமிலிருந்து முல்லைத்தீவுக்கு 1500 பேர்களை கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போனார்கள்.

அவர்களோடு நாங்களும். முல்லைத் தீவு, ஒரு பசுமையான பிரதேசம். இன்னைக்கு பொட்டல் காடாக கிடக்கிறது.

வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள், மோட்டார் செட்டுகள், மருத்துவமனைகள் எல்லாம் இடிந்துபோய் சுடுகாடு மாதிரி

கிடக்கிறது. என்னையும் தாத்தாவையும் இழுத்துக்கிட்டு எங்க வீட்டைத் தேடி ஓடினாள் அம்மா. வீடு இருந்த

அடையாளமே தெரியலை. எல்லாம் சிதிலமடைந்து போயிருந்தது. எல்லா சனங்களும் இப்படித்தான் ஓடிஓடி

அலைஞ்சாங்க. யாருக்கும் எதுவும் கிடைக்கலை. ஆனா எங்கு பார்த்தாலும் ஆமிகாரன் நின்னுக்கிட்டு இருந்தான்.

மீள் குடியேற்றம் செய்து மக்களை குடியமர்த்தியிருக்கோம்னு சிங்கள அரசு சொல்லுது. ஆனா முல்லைத்தீவில் அப்படி

எதுவும் செய்யப்படலை அண்ணா. ஒரே ஒரு தகர சீட் கொடுத்தார்கள். அதை வைத்து எங்களையே வீடுகட்டிக்க

சொன்னது ஆமி. ஆமிக்காரனே….’நீ போய் அந்த இடத்துல கட்டிக்க… நீ இந்த இடத்த எடுத்துக்கோ’ன்னு பாகம்

பிரிச்சு கொடுத்தான். யாரோட இடத்தை எவன் பாகம் பிரிச்சு கொடுக்கிறதுன்னு கோபம் கோபமாக வந்தது அண்ணா.

ஆனா கோபத்தை காட்டமுடியுமா?

உங்க ஊரில் ஆடு மாடுகள் அடைச்சி வைக்க ஒரு பட்டி செய்திருப்பாங்க இல்லையா அண்ணா… அது மாதிரி பன

ஓலைகளால் வேயப்பட்ட மட்டைகளை வைத்து ஒரு பட்டியை அமைச்சிகிடுச்சி எங்கட சனம். அந்த பட்டிக்குள்லே…

சதுரமா மண் சுவரை நாலா புறமும் எழுப்பி அதன் மேல தகர சீட்டை கிடத்தி சின்னதா ஒரு குடிலை

கட்டிக்கிட்டாங்க. நாங்களும் அப்படியே ஒரு பட்டியும் அதுக்குள்ளே ஒரு குடிலையும் உருவாக்கிட்டோம். இந்த பட்டியும் குடிலும்

சில இடங்களில் பக்கத்தில் பக்கத்திலும் பல இடங்களில் தூரம் தூரமாகவும் இருக்கும்.

ஒரு டீக்கடை பெட்டிக்கடை கூட இங்கு இல்லை. எங்கட சனத்துக்கிட்ட யாரிடமும் காசும் கிடையாது. 10 நாளைக்கு

ஒரு முறை ஆர்மி வண்டியில் அரிசி, பருப்பு, காய்கறிகள் வரும். ஒரு குடிலுக்கு 1 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு

தருவாங்க. காய்கறிகல் கொஞ்சமே கொஞ்சம் தருவாங்க. உப்பு மட்டும் வரவே வராது. இன்னைக்கு வரைக்கும்

முல்லைத்தீவில் எங்கட சனம் உப்பு போடாமத்தான் சாப்பிடுது அண்ணா. ஒரு கிலோ அரிசியும் அரை கிலோ பருப்பும்

எத்தனை நாளைக்கு வந்து விடும்? பட்டினியும் பசியுமாகத்தான் எங்க நாட்கள் நகர்ந்துக்கிட்டு இருக்கு.

இப்போ முல்லைத்தீவில் 2000-த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆமிகாரன் நின்னுக்கிட்டு இருக்காங்க. அதே மாதிரி

முல்லைத்தீவில் தமிழ் இளைஞர்கள் ஒருத்தரும் இல்லையண்ணா. முல்லைத்தீவு முழுக்க பொண்ணுங்களும் அவங்களோட

அம்மாக்களும் வயதான தாத்தா பாட்டிகளும் மட்டும்தான் இருக்காங்க. இளைஞர்களையெல்லாம் வெவ்வேறு முகாம்களுக்கு

கடத்திட்டாங்க.

ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு

படுத்துக்கிடந்தேன். என் தாத்தா வெளியே படுத்திருந்தார். அப்போ 3 ஆமிக்காரன் பன ஓலையை பிரிச்சி எரிஞ்சிட்டு

உள்ளே வந்தான்கள். ஒவ்வொருத்தன் கையிலயும் பெரிய அளவிலான் துப்பாக்கி இருந்தது. அதை பார்த்த என் தாத்தா

எழுந்து, எதுக்கு உள்ளே வர்றீங்கன்னு பயத்துடன் கேட்டார். அப்போ ஒருத்தன், ‘இன்னைக்கி அந்த பொண்ணை (என்னை)

பார்த்தேன். அவளை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இன்னைக்கு ராத்திரி அவ எங்களுக்கு வேணும். அதான் வந்தோம்’ என்று

சொல்ல, அந்த சத்தத்தை கேட்டு நானும் என் அம்மாவும் வெளியே வந்தோம். 3 ஆமிக்காரன்களை பார்த்து அம்மா மிரண்டாள்.

எதுக்கு இங்க வந்தீங்கன்னு சத்தம் போட்டாள் அம்மா. அப்போ ஆமிக்காரன்களின் காலைப் பிடிச்சிக்கிட்டு…’வேணாம்…

வேணாம்…அவ சின்ன பொண்ணு… விட்டுடுங்க…’ன்னு கெஞ்சினார் என் தாத்தா. நானோ பயந்துபோய் என் அம்மா சேலைக்குள்ளே

புகுந்துகிட்டேன். தாத்தாவை எட்டி உதைச்சி தன் காலை உருவிக்கிட்ட ஆமிக்காரன்….’நாங்க வந்துட்டோம் ரொம்ப

பசியா இருக்கு… சாப்பிட்டுட்டுத்தான் போவோம்ங்கிறதின் அர்த்தம் அப்போதைக்கு எனக்கு விளங்கலையண்ணா.

மூணு பேரில் ஒருத்தன் என்னையும் ரெண்டு பேர் என் அம்மாவையையும் பிடித்து இழுத்தனர். என் தாத்தா, ஒரு கட்டையை

எடுத்து வந்து அவன்களை அடிக்க பார்த்தார். ஆனால் ஒருத்தன் அதனை தடுத்து என் தாத்தாவின் காலில்

துப்பாக்கியால் அடிக்க, அவர் அப்படியே விழுந்துவிட்டார். அதற்குள் இன்னும் 3 பேர் வந்து விட்டனர். எங்களை தூரமாக ஒரு

இடத்துக்கு இழுத்துப் போனார்கள். எவ்வளவோ திமிறியும் போராடியும் பார்த்தோம். முடியவில்லை. சுட்டு கொன்னுடுவோம்னு

மிரட்டினார்கள். நிலவு வெளிச்சம் படர்ந்த இடத்துக்கு இழுத்துப்போய்……?

இன்னைக்கு நான் 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அண்ணா. என் அம்மா சித்தபிரமை பிடித்த மாதிரி இருக்கிறாள்.

தாத்தா செத்துப்போயிட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறேன். என்னை மாதிரி இங்கு 13,

14 வயசு பொண்ணுங்க நிறைய பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள் அண்ணா. சிங்கள ஆமி காடைகள் பெண்களை

நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எங்க குடிலுக்கு அருகில் இருக்கும் குடிலில் ரெண்டு பொண்ணுகளோடு ஒரு தாய் இருக்கிறார். ஒரு வாரமா எதுவும்

சாப்பிடவில்லை அவர்கள். காரணம் ஆமி கொண்டு வந்த பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. குறைவாக பொருட்கள்

வந்ததால் பத்தவில்லை. அதனால் அவர்களுக்கு அரிசியும் பருப்பும் கிடைக்கவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு,

அரிசி தருவதாக கூறி அந்த பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய்… தங்களின் இச்சையை

தீர்த்துக்கொண்டனர். அதே சமயம் அம்மாக்கள் பலர், தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அரிசிக்காகவு,

ரொட்டிக்காகவும் சிங்கள ஆமிக்காரனின் இச்சைக்கு விருப்பப்ட்டே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். பகல் என்றோ இரவு என்றோ

பாராமல் தங்களுக்கு இச்சை வரும்போதெல்லாம் தமிழ் பொண்ணுங்களை – அதுவும் சின்ன சின்ன பொண்ணுங்களை

கற்பழித்துகொண்டிருக்கிறார்கள். ஆமிகாரனின் இந்த கொடுமைகளால் தாயும் மகளும் கர்ப்பமாக இருக்கும் அவலமும் இங்கு

இருக்கு அண்ணா. சின்ன வயசுலயே வயித்துல பிள்ளையை சுமக்கும் கொடுமையை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கீங்களா?

கர்ப்பத்தை கலைக்க முடியாமலும் கருவை சுமந்துகொண்டும் நான் படுற அவஸ்தையை வார்த்தையால் எப்படி

விவரிக்கிறதுனு புரியல் அண்ணா.

இங்கு ஒரு மருத்துவமனை மட்டும் இருக்கு. அதில் ஒரே ஒரு மருத்துவச்சி. ஆனா போதுமான மருத்துவ

உபகரணங்கள் எதுவும் இல்லை. என் வயித்துல வளரும் சிங்களவனின் கருவை கலைச்சிடலாமுன்னு மருத்துவமனைக்கு

போனேன். ஆனா மருத்துவச்சி கலைக்க மறுத்துட்டாள். காரணம்…. இலங்கையில் கருவை அழிப்பது

சட்டவிரோதமாம். அதனால் கருவை கலைக்க முடியாதுன்னு கூறிவிட்டாள் மருத்துவச்சி. கரு வளரும்… அதை

முறையா பராமரிக்கலைன்னா உயிருக்கு ஆபத்துன்னும் சொல்லி பயமுறுத்துறா மருத்துவச்சி. இந்த கொடுமைகளை

அனுபவிக்கிறதுக்கு போரிலேயே நாங்க செத்துப்போயிருக்கலாம் அண்ணா.

வெளியிலயும் நடமாட முடியவில்லை. 20 அடிக்கு ஒரு ஆமிக்காரன் நிக்கிறான். நடந்து போனா… கூப்பிட்டு வச்சு

கிண்டலும் கேலியும் பேசறான். 10 நாளைக்கு முன்னால தண்ணி எடுத்து வர… வெளியே வந்தேன். நடந்து போய்க்கிட்டு

இருந்தேன். ஒரு இடத்தில் ஒரு அக்காவை வழி மறிச்சி கேலி பேசின ஆமிக்காரன், அந்த அக்காவின் உறுப்புகளை தொட்டு

தொட்டு ஆபாசமாக நடந்துக்கிட்டான். அவன் கையை தட்டிவிட்டு அழுதுகொண்டே இருந்தது அந்த அக்கா. தட்டிவிட்ட

அந்த கையை ஒரு ஆமிக்காரன் துப்பாக்கியால் அடித்தான். அந்த நேரம் என்கிட்ட ஒரு துப்பாக்கி இருந்திருக்க வேண்டும்.

இல்லையே. ரொம்ப நேரம் ஆபாசமா நடந்துகிட்ட ஆமிக்காரன்… இன்னைக்கு ராத்திரிக்கு வீட்டுக்கு வருவேன்… என்று சொல்லி

அனுப்பி வைத்தான். பயந்துகொண்டே அந்த அக்காள் ஓடினாள்.

இப்படி அவனுங்க கொடுமைகளை செய்யும்போதுகூட அவன்களிடம் ஒரு பயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒருமுறை

ரெண்டு பேர் பேசிக்கிட்டிருந்ததை கேட்டேன். அந்த பேச்சில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பாதாகவும் நம்

அரசாங்கம் நம்மளை ஏமாத்திக்கிட்டு இருப்பதாகவும் பேசிக்கொண்டனர். தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக

அவர்கள் நம்புவதால் வந்த பயமாகக்கூட இருக்கலாம். சாலைகளை செப்பனிட்டு தருவதற்காக

சைனாகாரன்களையும் நிறைய இங்கு இறக்கி விட்டிருக்காங்க. அவன்களும் ஆமிக்காரன்களோடு சேர்ந்து எங்களை

நாசப்படுத்திக்கிட்டு இருக்காங்க அண்ணா. மீள் குடியேற்றம்ங்கிற பேரில் முகாமிலிருந்து முல்லைத்தீவுக்கு கொண்டு

வந்து விட்டாங்க. ஆனா முல்லைத்தீவே ஒரு முகாமாகத்தான் இப்போ இருக்கு. இங்குள்ள எங்கட சனங்கள்

ஊமைகளாகவு, மனநோயாளிகளாகவும் இருக்கிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் பேசியே பல நாட்கள் ஆகின்றன். சிரிப்பை

தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது அண்ணா. தமிழர்கள் எல்லாம் அவரவர்கள் சொந்த இடங்களில்

குடியமர்த்தப்பட்டிருப்பதாக சிங்கள அரசு சொல்வதை நம்பாதீர்கள். வதைமுகாமில் அனுபவித்த அத்தனை

இடர்களையும் முல்லைத்தீவுக்குள அனுபவித்துக் கொண்டி இருக்கிறோமண்ணா.

முல்லைத்தீவுக்குள் ஒரு தொண்டு நிறுவனமோ, செஞ்சிலுவை சங்கமோ, ஊடகமோ எதுவும் இங்கே வரமுடியாது. வரவும்

இல்லை. வருவதற்கு அனுமதி கொடுக்கவும் மறுக்கிறது சிங்கள அரசாங்கம். என்ன பாவம் அண்ணா நாங்கள் செய்தோம்.

தமிழராய் பிறந்ததை தவிர நாங்கள் செய்த பாவம்தான் என்ன?

ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். முல்லைத் தீவிலிருந்து இந்தக் கடிதம் வெளியே வந்து

உங்கள் கைகளுக்கு கிடைக்குமானால் முல்லைத்தீவில் நடக்கும் அவலத்தை வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா.”
இப்படிக்கு
சிங்களவன் கருவைச் சுமக்கும் அபலை
அதீதி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News
 • appu says:

  oh my god when u will wake up.

  October 21, 2010 at 06:50
 • John says:

  Oh, you rotten Tamils, where is your Tamil blood? Didn’t your mother feed you with milk? What a shame on you people for you all for allowing us this sufferings? How can I tell anyone we are Tamils and we have nearly 90 million all over the world? Our race is being destroyed and you remain a mute spectator. Where shall we go for comfort? Our land is confiscated and our people are killed and tortured, who are going to save them? Tamils please awake and the time is this.

  October 21, 2010 at 17:02
 • பாரதியார் says:

  அதீதியின் கதையை படிக்க இரத்தம் கொதிக்கிறது. தமிழர்கள் நாம் உலகெங்கிலும் பரந்து வாழ்கிறோம், ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இனவெறிச்சிங்களவன் மஹிந்தவாலும் துணைபோன துரோகி கருணாநிதியாலும் இழைக்கப்பட்ட பஞ்சமா பாதகங்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லையே! தமிழன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.

  கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழனே! எப்படி நாம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்க முடியும்? வெட்கி தலை குனிவதைத்தவிர நம்மால் என்ன செய்ய முடியும் ஒற்றுமை இல்லாத தமிழனே?

  October 21, 2010 at 19:06
 • Ravanan says:

  karunanidikku kattungal nakkeranee

  October 25, 2010 at 11:40

Your email address will not be published. Required fields are marked *

*