TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“ரத்த சரித்திரம்” வன்முறை அதிகமுள்ள படமா?

பாலிவுட்டின் பிரபலமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் படம் ‘ரத்த சரித்திரம்’. ஒரே நோத்தில் மூன்று மொழிகளில் உருவாகிறது ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியைப் பின்னணியில் வைத்து உருவாக்கப்பட்ட இப்படம், ஒரு முறைகேடான அரசியல் தலைவரின் வாழ்க்கையை சித்திரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாரித்தாலா ரவீந்திரா என்ற அந்த முரட்டு மனிதனின் கதையே இது. அந்த கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த இருவருக்கும் நடக்கும் யுத்தமே ரத்த சரித்திரம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘உதயம்’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த ராம்கோபால் வர்மா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். நிழல் உலக வாழ்க்கையை திரைக்கதையாக பண்ணுவதில் முன்னணியில் இருக்கும் வர்மா, இந்த முறை சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். அனல் கக்கும் பார்வையும், மிரட்டும் விழிகளுமாக காட்சி தரும் சூர்யாவின் கண்கள் மிக்க் கூர்மையானவை” என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் வர்மா.

Tv Show, Comedy, HD Song and Tamil Movie Blu Ray: CLICK HERE

“இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு எரிமலை போல இருந்தது. கொடுத்த கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்க வைக்கும் ஆற்றல் இவரைப் போல ஒரு சிலருக்குத்தான் உண்டு” என்றும் கூறியிருக்கிறார். இந்த இயக்குநருக்கு ‘காட்பாதர்’ என்ற படம்தான் இதுமாதிரியான நிழல் உலகங்கள் பக்கம் செல்வதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அதுபோலவே இந்தப் படமும் சரியான கருத்தையும் உணர்வையும் கொண்ட படம் என்று சொல்கிறார்.
இது வன்முறை அதிகமுள்ள படமா? என்றால் “வன்முறைக்கான காரணம் அதைவிடப் பெரியது” என்று ஒரு வரியில் பதில் சொல்கிறது படத்தரப்பு.


சூர்யாவுக்கு எப்படி? “இதுவரையில் நான் நடித்த படங்களில் மிகவும் கடினமான நடிப்புபையும் ஆற்றலையும் கோரிய படம் இதுதான்” என்று பெருமிதப்படுகிறார். எந்திரன் காய்ச்சல் அடங்கிய பிறகு இந்தப் படம் திரைக்கு வரலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*