TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எந்திரன் திரைப்படமும் ஒஸ்லோவும்: இ.மகேசன்

எந்திரன் திரைப்படமும் ஒஸ்லோவும் – நோர்வேயிலிருந்து இ.மகேசன்.

எந்திரன் திரைப்படம் ஒஸ்லோவில் நடைபெற்ற கோப்பிக்கடை உரையாடல்கள் சித்திரங்களாக..

நோர்வே கொலேசியம் திரையரங்கில் நள்ளிரவு 12.00 மணிக்கு எந்திரன் படம் காண்பிக்கப்பட்டது. இந்தப் படம் அள்ளிக் குவிக்கும் வெள்ளிப் பணம் குறித்த செய்திகள் தமிழகத்தில் இருந்து குவிந்த வண்ணமுள்ளன. இதற்குள் எந்திரன் உண்மைகளை எழுத முடியாமல் செய்த எந்திரனாகவும் மாறியுள்ளான். கூகுள் இணையத்தளத்தில் எந்திரன் பற்றி குறைவாக எழுதினால் அது உடனடியாக அழிக்கப்பட்டுவிடுமளவிற்கு எந்திரன் பலம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். இதேவேளை வெளிநாடுகளில் ஆளுக்கு ஆள் கலாநிதிமாறன்களாக மாறி எந்திரனுக்காக கட்டப்பஞ்சாயத்து செய்வதாக வேறுசில செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் தான் ஒஸ்லோவில் நேரடியாகக் கண்டதை சிறிய சித்திரங்களாக்கி தருகிறார் நோர்வே இ.மகேசன். இவை அனைத்தும் பொது மக்கள் உரையாடல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. திரைப்படம் ஒன்று வெளிவந்த பின் அது ரசிகர்களுக்கு சொந்தமாகிவிடும்.. அவர்கள் தமது கருத்துக்களைக் கூற உரிமை இருக்கிறது என்பதால் இங்கே தரப்படுகிறது.

சித்திரம் பேசுதடி 01

ஒருவர்: எப்படியிருக்கு படம் ?

மற்றவர்: இதைவிட கார்டுன் நெற்வோர்க், டிஸ்னி சனலை வீட்டில் இருந்து பார்த்திருக்கலாம்.

சித்திரம் பேசுதடி: 02

ஒருவர்: ரஜினிகாந்த் ஏன் ஐஸ்வர்யாராய்க்கு உதட்டில் முத்தம் கொடுக்கவில்லை.. இந்தியில் கெர்தசத்ரோசனுக்கு உதட்டு முத்தம் கொடுத்தவர்தானே.. ?

மற்றவர்: ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் கன்னத்தில் முத்தமிடும்போது ஒரு தகப்பனுக்கு மகள் முத்தமிடுவது போலவே இருக்கிறது. ஒரு காதலன் காதலியாக இருவரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்குள் உதட்டில் முத்தமிட்டால் நல்லாவா இருக்கும்.

சித்திரம் பேசுதடி: 03

ஒருவர்: ரஜினிகாந்த் இனியாவது அமிதாப்பச்சனைப் போல வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்க வேண்டும். அவரிடம் நல்ல நடிப்புத்திறன் இருக்கிறது. கல்லூரி மாணவன், காதலன் காதலி விளையாட்டுக்கள் அவருக்கு சரிவராது. அவர் பேரப்பிள்ளைகளை கண்டவ ஒருவர், விஞ்ஞானியாக மட்டும் நடித்திருக்கலாம். ( கோப்பியை உவிந்து இழுக்கிறார் )

சித்திரம் பேசுதடி: 04

ஒருவர்: றோபேட் நெருப்பில் இருந்து காப்பாற்றுவது போன்ற காட்சி மோசமான ( பாறதுல் – ஏமாற்று வேலை ) காட்சியாகும்.

மற்றவர்: இறுதிப்பகுதி இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ரான்ஸ்போமர் ஆங்கிலப்படத்தின் ஈயடிச்சான் காப்பி.. இதற்குள் இரண்டு நகைச்சுவை நடிகர்கள் ஒப்புக்கு மாரடித்துள்ளனர்.

சித்திரம் பேசுதடி: 05

ஒருவர்: 1980 களில் வெளியான 2001 ன் விண்வெளி யாத்திரை என்கின்ற ஆதர் சி கிளாக்கின் திரைப்படத்தையும் ரான்ஸ்போமரையும் சேர்த்து குழைத்து புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊத்தியிருக்கிறார்கள், அதுவும் வெறிக்காத கள்ளு.

மற்றவர்: எனக்குப் பக்கத்தில் ரெண்டுபேர் கொறட்டை விட்டு நல்ல தூக்கம் 250 குறோணரைக் கொடுத்து இங்கு வந்து ஏன் தூங்க வேண்டும்.

சித்திரம் பேசுதடி: 06

ஒருவர்: படம் பாக்க வந்த சனம் ஏதோ பெரிதாக தரப்போகிறார்கள் என்று கைகளைக்கூட தட்டாமல் அதிர்ச்சியில் இருக்குது..

மற்றவர்: படம் முடிஞ்சாப்பிறகும் சனம் அதிர்ச்சியிலைதான் போகுது.. படத்திலை என்ன இருக்கெண்டு தெரியாத அதிர்ச்சி போல..

இப்படி பேசிக் கொண்டார்கள்.. இவை எந்திரன் முடிந்ததும் ஒஸ்லோவில் ஒரு கோப்பிக்கடையில் போன சித்திரங்கள்..

இன்னும் சித்திரங்கள் வரும்..

இ.மகேசன் 15.10.2010

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema
  • kanesh says:

    pooooooonkada

    October 19, 2010 at 00:04

Your email address will not be published. Required fields are marked *

*