TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா குற்றவாளி என்றால் அவரை நியமித்தவர்கள்

பொன்சேகா குற்றவாளி என்றால் அவரை நியமித்தவர்களும் குற்றவாளிகாளே!.

கடந்த ஜனதிபதி தேர்தலில் ஆரூடம் கூறப்பட்ட பல விடயங்கள் இன்று நிஜமாகியுள்ளனா. அவற்றில் முக்கியமான மூன்று விடயங்களை இங்கு கூறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, ஜனதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும், மக்களுக்கு கொடுக்கும் எந்த ஆணையையும் நிறைவேற்ற மாட்டார்களென்பது. தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சா, மக்களுக்கு கொடுத் வாக்குறுதியின் பிரகாரம் தனது நிறைவேற்று ஜனதிபதி பதவியை இல்லாது செய்வதற்கு பதிலாக, பாரளுமன்றத்தில் தனக்கு ஆதரவாக கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பலத்தை பாவித்து, அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொண்டு, தனது பதவியை மிகவும் பலப்படுத்தியுள்ளார்.

அடுத்து, ஜனதிபதி வேட்பாளர் சரத் பொன்சேக்கா இறுதியில் பாரளுமன்ற உறுப்பினராக நிர்பந்திக்கப்படுவரெனவும், அவ்வேளையில் ராஜபக்சா அரசு பொன்சேக்கவை குற்றவாழிக் கூண்டில் ஏற்றுவார்களெனவும் கூறப்பட்டது. இன்று சரத் பொன்சேக்காவுக்கு முப்பது மாதம் கடூழீயச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நாம் ஒவ்வொரு தடவையும் சர்வதேச பிரதிநிதிகளுடன் தமிழீழ மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகள் பற்றி உரையாடும் வேளையில், அவர்களது பதில் ‘சிறிலங்காவில் எந்த அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத காரணத்தினால், சிறிலங்க அரசு தமிழ் மக்களுக்கு எத்தவொரு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க முடியாதுவுள்ளது’ என்பார்கள்.

உண்மையை கூறுவதனால,; பிரித்தானியவின் தற்போதைய பாதுகாப்புக் செயலாளர் திரு லீயோன் பொகஸ்;, சிறிலங்காவில் இனப்பிரச்சனையை தீர்க்கும் நோக்குடன், 1997ம் ஆண்டு சிறிலங்காவின் இரண்டு பெரிய அரசியல் காட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மக்கள் முண்ணனிக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த பதினைந்து வருடங்களாக ‘மூன்றில் இரண்டு பெரும்பான்மை’ என்ற விடயத்தில் சில உண்மைகள் இருந்தாலும், உண்மையில் இதுவல்லா காரணம் என்பதை ராஜபக்சாவும் அவரது அரசாங்கமும் கடந்த மாதம் தாம் மேறகொண்ட 18வது திருத்தச் சட்டம் மூலம் நிரூபித்து விட்டார்கள்.

‘வண்டிலுக்கு முன் மாட்டை கட்டுவது’ போல், பல சகப்தங்களாக மனித பலியும் இரத்த களரியும் கொண்ட இனப் பிரச்சனைக்கு, எந்தவித தீர்வும் காணத ராஜபக்சா, அரசு பாரளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பலத்தை தனது பதவிக்கு பலம் சேர்த்துள்ளார்.

பொன்சேக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா?

சரத் பொன்சேக்கா 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 2009ம் ஆண்டு யூலை மாதம் வரை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக கடமையாற்றி, அதன் பின்னர் கூட்டுப்படைத் தளபதியாகவும் பதவி வகுத்துள்ளார். அப்படியானால் ஓர் ஜனநாயக நாட்டின் சம்பிரதாயங்களுக்கு அமைய, பொறுப்பற்ற மோசடிகள் ஊழல்கள் நிறைந்த தளபதியை சேவைக்கு நியமித்த ஜனதிபதியும், பாதுகாப்புச் செயலாளருமே முதலில் பொறுப்பேற்க வேண்டும்.

மற்றைய ஜனநாயக நாடுகளில் நடப்பது போன்று, மோசடிகள் நிறைந்த தளபதிக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்த அடுத்த நிமிடமே, சிறிலங்காவின் ஜனதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் தமது பதவிகளை ராஜினமா செய்திருக்க வேண்டும். இப்படியாக ஒன்றும் நடைபெறத பட்சத்தில், சிறிலங்காவின் சட்ட மாஅதிபர், இவர்கள் இருவர் மீதும் உடனடியாக சட்ட நடவடிககை எடுக்க ஒழுங்குகள் செய்ய வேண்டும்.

இவ்வேளையில் சிறிலங்காவின் எதிர்காட்சியினர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் சரத் பொன்சேக்காவின் சிறைத் தண்டனையினை சாதகமாக பாவித்து தமது கட்சியை கட்டி எழுப்ப முயற்சிக்கின்றார்கள்

இராணுவ புரட்சி என்பது உண்மையா ?

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை இலங்கையில் ஒர் இராணுவ புரட்சியும் (1962ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி), இரு வகுப்புவாத கிழர்;ச்சிகளும் (1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி, 1987-1989) நடைபெற்றுள்ளனா. இவை மூன்றும் தோல்வியிலேயே முடிந்தனா.

அண்மை காலங்களில், அயல் நாடு ஒன்றினால் சிறிலங்காவில் இராணுப புரட்சி நடைபெறக்கூடிய சாத்வீக கூறுகள் இருப்பாதாக கூறப்பட்டது. மிக அண்மையில் நடைபெற்ற ஓர் ஊடாகவியலாளர் மாகாநாட்டில், சரத் பொன்சேக்கா, இராணுவம் கிளர்ந்து எழக்கூடிய சாத்வீக கூறுகள் இருப்பாதாக கூறியுள்ளார். இவ் முன்னேச்சரிக்கைகளை நாம் கண்டும் காணதவர் போல் இருக்க முடியாது.

1971, 1987-1989ம் ஆண்டுகளில் தெற்கில் நடைபெற்று தோல்வியடைந்த கிழர்;ச்சிகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் தற்பொழுது எங்கே? 1971ம் ஆண்டு கிழர்ச்சியாளார்களில் ஒருவரையும், 1987-1989ம் ஆண்டு கிழர்ச்சியின் ஒரு சிலரை மட்டுமே நாம் தற்பொழுது வெளிப்படையாக காணக்கூடியாதாகவுள்ளது. அப்படியானால் மற்றையோர் யாவரும் எங்கு என்பதை சிறிலங்கா அரசு நன்றாக அறிந்துள்ளது.

இலங்கை தீவில் ஏறக்குறைய முப்பது வருடங்களாக நடந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் அரசு எந்தவித விதிமுறைகளை, தகமைகளை கடைபிடியாது, தெற்கில் யுத்தத்திற்கான ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அரசாங்கத்தை ஆயுத முனையில் கவிழ்க்க எண்ணியிருந்த தெற்கில் உள்ள சகல இளைஞர்களும் இவ் அரிய சந்தர்ப்பத்தை சரியான முறையில் பாவித்து தம்மை சகல படைகளிலும் இணைத்துக் கொணடனர்;.

இவ்விடயத்தை நன்கு தெரிந்து கொண்ட காரணத்தினலேயே சரத் பொன்சேக்கா, கடந்த ஜனதிபதி தேர்த்தலில், ஓர் பொது வேட்பாளாராக எந்த அரசியல் கட்சியையும் சராது போடடியுட்டார். ஆனால் பாரளுமன்ற தேர்தலில் பொன்சேக்கா ஐக்கிய தேசிய கட்சியில் இணையாது, ஜே. வி . பி. யுடனும், ஜே. வி . பி.யுடன் நெருங்கிய உறவை கொண்ட காட்சிகளுடன் மட்டுமே இணைந்து தேர்தலில் போட்டியிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்கா, பாகிஸ்தான், பிஜி போன்ற பல நாடுகளில் – மோசடி, குடும்ப ஆட்சி, கபடத்தனமான நீதித்துறை, சர்வதிகாரம்போன்றவற்றை கொண்ட அரசாங்கங்களின் ஆட்சிகள் இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டுள்ளது. ஆகையால் சிறிலங்காவில் இதுவரையில் ஓர் இராணுவ புரட்சி ஏற்படவில்லையெனில் அது வியப்புக்குரிய விடயமே. யாருக்கு தெரியும்! புரட்சியாளர்கள், ஆசிய நாடு ஒன்றின் ‘பச்சை’ விளக்குக்குகாக பொறுத்திருக்கிறார்களோ தெரியவில்லை!

நிட்சயமாக இராணுவ புரட்சி என்பது, முப்பது ஆண்டு யுத்தத்தை பார்க்கிலும், மிக மோசமானதாகவே ராஜபக்சாக்களுக்கு அமையும். காரணம், எதிரிகள் இவர்களுடன் பயணம் செய்பவர்களாகவும், தினமும் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்பவர்களாகவும், இவர்களுடன் சேர்ந்து வசிப்பவர்களாகவும் இருக்க முடியும்.

‘முட்டைகளை;’ யாவற்றையும் ஒரே பெட்டியில் வைப்பது மிக ஆபாயமானது என்பார்கள். நிட்சயம் ராஜபக்சாக்கள் இதை அறிந்தவர்களாகவும் தெரிந்தவர்களாகவும் இருப்பதனால் தான், தமக்கு மிக ஆபாத்தில் பாவிக்கக்கூடிய ஓர் குலிப்படையை – கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோருடன் வேறு சிலரையும் தம்வசம் சேர்த்து வைத்துள்ளார்கள்.

18வது திருத்தச் சட்டம்

காலங்கள் வெற்றிகரமாக உருண்டோடினால் – சரத் பொன்சேக்கா சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றோர் எதிர்கொண்ட அவல நிலையை மகிந்த ராஜபக்சா தவிர்த்துகொள்ள விரும்புவாரேயானால், இவர் தனது இரண்டாவது ஜனதிபதி பதவி காலத்துடன் அரசியலிருந்து ஒதுங்க வேண்டும்.

இதேவேளை அடுத்த ஜனதிபதி தேர்தலுக்கு பல வருடங்கள் இருப்பதனால், எதிர்கட்சிகள் தொடர்ந்தும் ராஜபக்சா தனது மூன்றாவது தடவைக்கு தேர்தலில் போட்டிட தயார்செய்கிறாரென அலட்டி காலத்தை கழிப்பதை நிறுத்தி, ஜனதிபதி தேர்தலில் வெற்றிகொள்ளக் கூடிய ஓர் பொது வெட்பாளரை தற்பொழுதே தயார்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்சாவை எதர்கொள்ளக் கூடியவரானால் அது நிட்சயமாக அந்தப் பெண்மணியாகவே இருக்க முடியும்! ஆனால் இப்பெண்மணியையும் ராஜபக்சாக்கள் விட்டுவைப்பார்களா என்பதே தற்போதைய ஆய்வாளர் மேற்குலகின் சந்தேகம்.

எது எப்படியாயினும் – மகிந்த ராஜபக்சா தேர்தலில் வெற்றி பெற்றலென்னா, சரத் பொன்சேக்கா சிறை சென்றலென்னா, ராஜபக்சாவும் அப்பெண்மணியும் மூன்றவது தடவை ஜனதிபதி தேர்தலில் களம் இறக்கினாhல் தான் என்னா – தெற்கில் உள்ள முதுபெரும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கு ஓர் இனப்பிரச்சனை உள்ளது என்பதை ஏற்கனவே மறந்துவிட்டார்கள். இவர்கள் யாவரும் கூடிய விரைவில் கூறவிருப்பது என்னவெனில், ‘தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை வழங்குவதற்கு, சிறிலங்காவில் தமிழ் மக்களின் சனத் தொகை மிகவும் குறைவாக காணப்படுகிறது’ என்பார்கள்.

இச் சந்தர்பத்தில், மிகவும் சரளமாக மனப்படம் செய்த உரையை, ஐக்கிய நாடுகள் சபையில் ஜனதிபதி ஆற்றியமைக்காகவும,; அதை பாலித்த கோகணவும் லலிம் வீரதுங்காவும் ஒத்துப்பார்த்தமைக்காகவும் எனது வாழ்த்துகளை இவர்களுக்கு கூற விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் வீடியோக்கள் இதற்கு நல்ல பிரசித்தம் கொடுத்துள்ளனா. இதே வீடியோவில், ராஜபக்சா உரையாற்றும் வேளையில,; ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தில் எத்தனை ராஜதந்திரிகளுகம் முக்கிய புள்ளிகளும் கூடியிருந்தார்களென்பதையும் யாவரும் காணலாம்.

ச. வி. கிருபாகரன் – பிரான்ஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*