TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஒரு வாரத்தில் ரூ.117 கோடி வசூல் எந்திரனின் சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்து, சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இது குறித்து இன்று வெளியான செய்திக்குறிப்பில் ஒரு வாரத்திற்கான வசூல் பட்டியல் காண்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த ‘தபாங்’ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது. மேலும் ‘தபாங்’ திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எந்திரன் படத்தின் வெற்று வசூல் பற்றியே செய்திகள் வருகின்றன ஆனால் படத்தின் கதையும், கதைத்தரமும் பற்றி சிந்திக்க விடாமலே புனையப்படும் செய்திககள் குறித்து பலர் விவாதித்தும் வருகிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*