TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அஜீத்துக்கு பதில் அதர்வா? கௌதம் மேனன்!!

ஒவ்வொருமுறை கௌதம் மேனன் படம் துவங்கும் போதும் அதில் அஜீத் நடிக்கிறார் என்ற செய்திகள் வரும். ஆனால் என்ன குழப்பம் வருமோ அதில் அஜீத் நடிக்க மாட்டார்.

குறிப்பாக சூர்யாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த ‘காக்க காக்க’ படத்தின் கதையை அஜீத்திடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டார் கௌதம். அந்த படம் முதல் அஜீத்துடன் சேர்ந்து படம் பண்ண எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் கௌதம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் டபுள் ஷாட் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌதம். இதனை இந்தியிலும் இயக்க முடிவெடுத்துவிட்ட கௌதம், இப்போது இயக்குனராக ‘நடுநிசி நாய்கள்’, தயாரிப்பாளராக ‘வெப்பம்’ , ‘அழகர்சாமியின் குதிரை’ என படு பிசியாக இருந்துவருகிறார்.

இவர் அடுத்து இயக்கயிருக்கும் ‘துப்பறியும் ஆனந்த்’ படத்தில் அஜீத் நடிப்பது உறுதி என்று முடிவாக இருந்த நிலையில். தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகிவரும் ‘மங்காத்தா’ படத்தில் நடிக்க சென்றுவிட்டார் அஜீத். இதனால் ரொம்பவும் அப்செட்டான கௌதம், அஜீத்துக்காக நான் காத்திருக்க மாட்டேன். நண்பர் சூர்யா போன்ற நல்ல நடிகர்களுக்கு வேண்டுமானால் காத்திருக்கலாம், அஜீத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என ஒரே போடு போட்டார் கௌதம். இதெல்லாம் நமக்கு தெரிந்த செய்திதானே, இப்போ புது மேட்டருக்கு வருவோம்…

‘துப்பறியும் ஆனந்த்’ படத்தில் அஜீத்துக்கு பதிலாக சூர்யா தான் நடிப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தில் அதர்வாவை நடிக்க வைக்கப்போகிறார் கௌதம் என தகவல்கள் கசிகின்றன. ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் ஏற்கெனவே ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் அதர்வா. தன் தந்தை முரளியின் மறைவிற்கு பின்னர் அதர்வாவிற்கு நல்ல படங்கள் அமைய வேண்டும் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த நிலையில் ‘பாணா காத்தாடி’ படத்தில் குப்பத்து ராஜாவாக வந்து கலக்கிய அதர்வா அடுத்து கௌதம் மேனனின் ஸ்டைலிஷான க்ளாசி ஹீரோவாக திரையில் அசத்தப் போகிறார் என்பது சந்தோஷமான விஷயம்.

இதுபற்றி திரைவட்டாரத்தில் விசாரித்தபோது கௌதம் மேனன் படத்தில் அதர்வா நடிக்க இருப்பது உண்மைதான். கௌதம் மேனனின் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தில் அதர்வாவை நடிக்க வைக்க நீண்ட நாளாகவே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, ஆனால் எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்று சொல்கிறார்கள்.

சினிமாவை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இப்போதைக்கு ஸ்டடீசில் கவனம் செய்து வருகிறார் அதர்வா. சினிமாவில் நடித்தாலும் படிப்பை நல்லபடியாக முடித்துவிட வேண்டும் என்பது தான் அவர் அப்பா முரளியின் ஆசையும் கூட. ஆனாலும் கௌதம் மேனன் படத்தின் வாய்ப்பு வரும்போது விட்டுவிட முடியுமா என்ன?!

தன் அடுத்த படத்தின் ஹீரோ அதர்வா தான் என்ற சந்தோஷமான செய்தியை ரகசியமாக வைத்திருக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அதை விரைவில் வெளியே சொன்னால் எல்லோரும் சந்தோஷப்படுவாங்க… சீக்கிரம் பாஸ்!!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*