TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“கால் சென்டர்” பெண் ஊழியரை கற்பழித்து கொன்றவர் சிவகுமார்

கால் சென்டர் ஊழியர் பிரதீபாவை கற்பழித்து கொன்ற கார் டிரைவர் சிவகுமாருக்கு, பெங்களூர் கோர்ட்டில் சாகும்வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் குமாரசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் பிரதீபா. 22 வயதான பிரதீபா திருமணம் ஆனவர். கடந்த 2005-ம் ஆண்டில் பெங்களூர் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் அவர் பணியில் சேர்ந்தார். நிகழ்ச்சி நாளன்று பிரதீபா இரவு ஷிப்டில் வேலை பார்த்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது வேன் டிரைவர் சிவகுமார், பிரதீபாவை கடத்திச்சென்று கற்பழித்தார். பின்னர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து பிணத்தை பன்னரகட்டா அஞ்சனாபுரம் என்ற பகுதியில் வீசிவிட்டு சென்று விட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர கொலை சம்பவம் கடந்த 3.12.2005 அன்று இந்த நடந்தது.

இந்த வழக்கில் கார் டிரைவர் சிவகுமாரை போலீசார் கைது செய்து பெங்களூர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 5 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 80 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

கடந்த 6-ந்தேதி அன்று, இந்த வழக்கில் டிரைவர் சிவகுமார் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது. தண்டனை விவரம் 8-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பு நாளான நேற்று காலை, குற்றவாளி சிவகுமார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவருடைய மனைவி சுமா, கொலை செய்யப்பட்ட பிரதீபாவின் தாயார் கவுரம்மா, கணவர் ஸ்ரீனிவாஸ் ஷெட்டி மற்றும் உறவினர்களும் கோர்ட்டுக்கு வந்து இருந்தார்கள்.

சிவகுமாருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி குட்லி நேற்று அறிவித்தார். பிரதீபாவை கற்பழித்து கொலை செய்த டிரைவர் சிவகுமாருக்கு கொலை குற்றத்துக்காக சாகும்வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இந்திய தண்டனை சட்டம் 366 (கடத்தல்) பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தார். 376-வது பிரிவின் கீழ் (கற்பழிப்பு) 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தார்.

தண்டனை விவரம் அறவிக்கப்பட்டதும் சிவகுமாரை பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து போலீசார் அழைத்துச் சென்றார்கள்.

தண்டனை குறித்து பிரதீபாவின் தாயார் கவுரம்மா கூறியதாவது:-

“5 ஆண்டுகள் காத்திருந்த பின் நீதி கிடைத்து உள்ளது. இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும். என் மகள் பிறந்த 15-வது நாளில் என் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு நான் எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையே என் மகளை வளர்த்து ஆளாக்கினேன்.

அந்த ஒரே ஒரு மகள் கொடூரமாக கொல்லப்பட்டாள். என் மகிழ்ச்சி எல்லாம் என் மகளோடு போய்விட்டது. என் மகள் எங்கு இருந்தாலும் அவளது ஆத்மா சாந்தி அடையட்டும். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை“

இவ்வாறு கவுரம்மா கண்ணீர் மல்க கூறினார்.

இதே உணர்வுகளை வெளிப்படுத்திய பிரதீபாவின் கணவர் ஸ்ரீனிவாஸ் ஷெட்டி, குற்றவாளி, தினம் தினம் தனது கொடூர செயலை நினைத்து வருந்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த தண்டனை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய பிரதீபாவின் உறவினர் சீனிவாசன், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட டிரைவர் சிவகுமார் தான் நிரபராதி என்று குறிப்பிட்டார்.

கோர்ட்டுக்கு வந்திருந்த சிவகுமாரின் மனைவி சுமா நீதிபதி கூறிய தீர்ப்பை கேட்டவுடன் கதறி அழுதார். கோர்ட்டை விட்டு வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கும்படி கேட்டனர்.

அப்போது ஆவேசம் அடைந்த சுமா, உரத்த குரலில் `என் கணவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுவிக்காவிட்டால் நான் இங்கிருந்து போகமாட்டேன். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்` என்று கத்தியபடி கூச்சலிட்டார்.

அவரை நிருபர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். உடனே ஆத்திரம் அடைந்த சுமா, நிருபர்கள் மீது தன் ஆத்திரத்தை காட்டினார். “எல்லாமே உங்களால்தான் ஆனது“ என்று தொடர்ந்து கூச்சலிட்டார். சுமாவின் நடவடிக்கை கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்உலகம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*