TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ரமலத் பிரபுதேவா ஆர்ப்பாட்டம் – நயன்தாரா கைது…?

தமிழ் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்துக்காரர் முதல் இந்தியாவின் பெரிய நகரத்தில் இருப்பவர் வரை அனைவரும் இன்று விவாவதிக்கும் சர்ச்சை பிரபுதேவா நயன்தாரா திருமண விஷயம்தான்.

இந்த விவகாரம் தென்னிந்திய திரைவட்டாரத்தையே இன்று பரபரப்பாக்கி வருகிறது. அரசல் புரசலாக கிசுகிசுக்கப்பட்டு வந்த இவர்கள் பிரச்சினை… நயன்தாராவுடனான திருமணம் பற்றி கடந்த மாதம் பிரபுதேவா பேட்டி அளித்ததில் இருந்து சூடுபிடிக்க ஆரம்பித்தது.

அதுவே இன்று நயன்தாராவின் போஸ்டருக்கு மகளிர் அமைப்பினர் தீவைத்து எரித்து போராட்டம் நடத்தும் அளவுக்கு படுவேகமாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுவரை மௌனமாக இருந்த ரமலத்தும் இப்போது ஆர்ப்பாட்டம் செய்து, வழக்கும் தொடுத்துவிட்டார்.

தமிழ் நாட்டில்தான் இப்படி என்றால், ஆந்திராவில் இன்னும் காரசாரமாகிவிட்டது இந்தப் பிரச்சினை.

அண்மையில், சவுத் ஸ்கோப் பத்திரிகை, சினிமாக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ‘சிறந்த ஜோடி (தம்பதியர்)’ என்னும் விருதை பிரபுதேவா – நயன்தாரா இருவருக்கும் வழங்கி இந்தப் பிரச்சினையில் நெய்யை ஊற்றி விட்டது.இதனால்,திருமணமே ஆகாமல் கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு ‘சிறந்த ஜோடி’ விருதா… ? என்ற சாடல்கள் ஏகத்துக்கும் கிளம்பின.

இந்தப் பிரச்சனை ஓயும்முன்னே இன்னொரு சிக்கலும் சிக்கெடுக்கத் தொடங்கியது தெலுங்கு திரையுலகில். பாலகிருஷ்ணா ராமராக நடிக்கவிருக்கும் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்னும் படத்தில் சீதையாக நயன்தாரா நடிப்பதாக இருந்தது.

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த நயன்தாரா சீதையாக நடிப்பதா…? என ஆவேசத்தின் உச்சத்திற்கே போய் விட்டது தெலுங்குத் திரையுலகம். கடைசியில் இந்தப் படத்திலிருந்தே நீக்கப்பட்டார் நயன்.

அந்தப் படத்தில் நடிக்க தடை ஏற்பட்டது போல, நயன்தாரா பிரபுதேவா சேர்ந்து ஊர் சுற்றுவதற்கும் இப்போது தடை ஏற்படப்போகிறது.

இவ்வளவு பிரச்சனைகள் பூகம்பமாக வெடித்துவரும் நிலையில், எத்தனை தடங்கல்கள் வந்தாலும் நயன்தாராவுக்கும், எனக்குமான திருமணம் டிசம்பரில் நடப்பது உறுதி என்று கூறிவிட்டார் பிரபுதேவா.

இதனால் இதுவரை பொறுத்துப் பொறுத்து பார்த்த ரமலத், இருவர் மீதும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டார்.

இது குறித்து அவர் அளித்த மனுவில்… “நயன்தாராவும், பிரபுதேவாவின் கும்பத்தினரும் இந்த இரண்டாம் கல்யாணத்திற்கு என்னை வற்புறுத்தி மிரட்டுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். நயன்தாராவை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டால் அவரையே நம்பி வாழும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.

இதனால், டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அவர்களின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அவர்கள் இருவரும் உல்லாசமாக ஊர் சுற்றவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், சேர்ந்திருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.

மேலும், அவர்கள் தங்களை கணவன், மனைவி என்று அறிவிக்கவும் தடை விதிக்க வேண்டும்.” இப்படி அதில் குறிப்பிட்டிருந்தார் ரமலத்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம் நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 19ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த வழக்கு குறித்து பிரபுதேவா – நயன்தாரா என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்…?. ரமலத்துக்கு, அவர்கள் இருவரும் செய்த துரோகத்திற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்… ? என்பதுதான் அனைவரின் கேள்வி.

இதற்கான விடை…?

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*