TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இதுதான் சரியான நேரம் நயன் தாராவுடன் 2 மாதத்தில் திருமணம்

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் தமிழ் திரையுலகில் பரபரப்பாகியுள்ளது. நயன்தாராவை விரைவில் திருமணம் செய் வேன் என்று பிரபுதேவா அறிவித்தார். மும்பையில் “உருமி” படப்பிடிப்பில் இருந்த போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நயன்தாரா அற்புதமான மனித பிறவி. பாலைவனத்தில் சோலைவனமாக தெரிகிறார். அவரோடு தொடர்பு உள்ள எல்லாவற்றையும் நேசிக்கிறேன். என்றெல்லாம் அப்போது புகழ்ந்தார்.

முதல் மனைவி ரம்லத்துடனான தொடர்பையும் முறித்து விட்டார். ரம்லத் தனது இரு மகன்களுடன் அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ஒரு மாதமாக பிரபுதேவாவுடன் தொடர்பு கொள்ள முடியாமல் அவர் தவிக்கிறார். வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதையும் நிறுத்தி விட்டாராம்.

இதையடுத்து ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். “நயன்தாரா எனது கணவருடன் கள்ளக்காதல் வைத்து என்னோடு சேர விடாமல் தடுக்கிறார் என்றும் பிரபு தேவாவை என்னுடன் கோர்ட்டு சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாராவுடன் திருமணம் நடப்பது உறுதி என்று பிரபுதேவா மீண்டும் அறிவிப்பு செய்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எதற்கும் தகுந்த நேரம் என்று ஒன்று இருக்கிறது. நயன்தாராவை பற்றி பேசுவதற்கும் இதுதான் சரியான நேரம். ஏனென்றால் நாங்கள் இருவரும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.

இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்.

நயன்தாரா நடித்து ரிலீசான “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தை பார்த்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடுகிறது. அந்த படத்தில் ஒவ்வொரு அங்குலம் எனக்கு பிடித்திருந்தது. சந்தோஷப் பட்டேன். நானும் ஒரு ரசிகனாக இருந்து அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தேன். அவரைப் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். சொல்லி விட்டேன்.

சல்மானை வைத்து ஏற்கனவே “வாண்டட்” படம் எடுத்தேன். அவரது இன்னொரு படத்தையும் இயக்க அழைப்பு வந்துள்ளது.

அபிஷேக்பச்சன் நடிக்கும் இந்திப்படமொன்றையும் இயக்க பேச்சு நடந்து வருகிறது. எனவே இனிமேல் மும்பையில்தான் அதிகம் தங்குவேன். அதுதான் நல்லது.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*