TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எந்திரன் திரைப்படத்திற்கு ஆதாரம் வழங்கிய சுஜாதாவின் நூல்!

எந்திரன் திரைப்படத்திற்கு ஆதாரம் வழங்கிய சுஜாதாவின் முக்கிய நூல்!

எந்திரன் சுஜாதாவின் விஞ்ஞான நூல் ஒரு பார்வை.

எந்திரன் திரைப்படத்திற்கான கதையை வடிவமைத்தபோது தொழில்நுட்ப விஞ்ஞான சிந்தனைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் காலஞ்சென்ற எழுத்தாளர் சுஜாதா. ரோபோ என்று வைக்கப்பட்ட பெயரை மாற்றி எந்திரன் என்று பெயர் சூட்டிவிட்டு சுஜாதா இறந்துவிட்டார். எந்திரன் படத்தின் பிற்பகுதியை நிறைவு செய்ய அவர் உயிருடன் இருக்கவில்லை.

தினமணியில் சுஜாதா வெளியிட்ட எந்திரன் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகள் 1989ல் கி.பி.2000 க்கும் அப்பால் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 21 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்ட விடயங்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டவை ஆனாலும் பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழுக்கு புதிதாக இருந்துள்ளன. இக்கட்டுரைகள் பற்றிய ஓர் அறிமுகத்தை இங்கே தருகிறோம்…

கட்டுரை 01. உயிரன அமைப்பின் நுட்பவிதிகள் : நம் உயிரணுக்கள் மாலிக்யூல்கள் என்று சொல்லக்கூடிய அணுக்கூட்டங்கள் என்றுதான் சொல்லலாம். ஆனால் இந்தக் கூட்டங்களில்தான் எத்தனை விந்தைகள். ஜெனட்டிக் கோடு என்னும் உயிர் ரகசியம் புரதங்களில் அடங்கியுள்ள விதிகளை இது விளக்குகிறது.

எந்திரன் வீடியோக்களைக் காண இங்கே அழுத்தவும்.

கட்டுரை 02. காயமில்லாத வலி! வலி இல்லாத காயம் : -273 டிகிரியை அப்ஸல்யூட் ஜீரோ என்பார்கள். இதற்கு மேல் குளிர் இல்லை. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரேகன் காரில் போகும்போது சுடப்பட்டார். துப்பாக்கிக் குண்டு பின்பக்கமாக பாய்ந்துவிட்டது ரேகனுக்கு வலிக்கவே இல்லையாம். உயிர்வாழ்வின் எச்சரிக்கைகளில் ஒன்று வலி…

கட்டுரை 03. கி.பி.2000 ற்கும் அப்பால் : கி.பி.2000 ற்கும் அப்பால் உலகம் எப்படி அமையப்போகிறது என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள ஆம்னி என்ற விஞ்ஞானப்பத்திரிகை தரும் தகவல்.. மாற்றுக்கிரக உயிர்களுடன் தொடர்பு கொள்வது 21ம் நூற்றாண்டிலும் சாத்தியமில்லை.. டெஸ்டியூப் பிள்ளைகள் அதிகம் பிறக்கும்.. ஜனத்தொகையில் கால்பங்கினர் வேலைக்குப் போகாமல் வீடுகளில் இருந்தே கணினிகளில் பணி புரிவர். சுறுசுறுப்பு, வாழ்நாள் நீடிப்பு, புத்திசாலித்தனம் போன்றவற்று மருந்து வந்துவிடும். பாடசாலைகளில் ஆசிரியர் இருக்கமாட்டார் ரோபோவே ( எந்திரன் ) படிப்பிக்கும். எதிர் காலத்தில் ரெம்ப நாட்கள் ரெம்ப சந்தோசமாக மனிதன் வாழ்வான்.

கட்டுரை 04. கம்யூட்டர் மொழிகள் பலவிதம் : கம்யூட்டர் என்பது பாரதி பாட்டில் இருக்கிறது.. சின்னக் குழந்தைக்கே சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன். காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும் இரவில் பகலில் எந்நேரமானாலும் சிரமத்தைப் பாராமல் தேவரீர் தம்முடனே சுற்றுவேன், தங்களுக்கோர் துயரமுற்றால் காப்பேன், கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே.. இதுபோன்றதே கம்யூட்டர் மொழியின் அடிப்படையாகும்.

கட்டுரை 05. சூரியன் முகத்தில் கரும்புள்ளிகள் : இதுவரை எரிந்துபோன சூரியன் மொத்தச் சூரியனில் கோடியில் கோடி பாகம் மட்டுமே. ஆகவே நாம் இறந்து போனாலும் சூரியன் இருக்கும். சூரியனில் இருக்கும் கரும் புள்ளிக்குள் நுழைந்தால் ஜில்லென்று குளிராக இருக்கும் என்கிறார்கள். சூரியப் புள்ளிகள் பதினொரு வருடங்களுக்கு ஒரு தடவை கூடிக்குறையும்.

கட்டுரை 06 : உயிர் என்பது என்ன ? : சூரியன் எரிவதையும், நட்சத்திரம் அழிவதையும் கணக்கிடலாம்.. ஆனால் ஒரு மனிதன் இயங்குவதை ஏன் ஓர் எறும்பு நடப்பதை முழுவதுமாய் விவரிக்க ஒட்டு மொத்தமான கணக்குகள் இல்லை. நம்முடைய சிக்கலான உயிரணுக்கள் எப்போது தன்னைத்தானே சரம் பிரித்து இரட்டிப்பாக்கிக் கொள்ளத் துவங்கினவோ அப்போதுதான் உயிரின் ஆரம்பம் ஏற்பட்டது.

கட்டுரை 07. மனதின் அதிசய ஆற்றல்கள் : ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு கலைக்களஞ்சியத்தைப்போல 500 மடங்கை சேகரித்து வைக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் சுமார் 50.000 தகவல்களை மனதில் பதிந்து வைக்க முடியும்.

கட்டுரை 08. ரோபேட்டுக்கள் நம் நண்பர்கள் ஆனால்.. ரோபேட் என்பது செக் மொழியில் இருந்து வந்த வார்த்தை. காரல் சப்பெக் என்பவர் எழுதிய நாடகத்தில் இருந்து புறப்பட்டு உலகப் பொதுவார்த்தையாகிவிட்டது. றேபேட் என்றால் செக் மொழியில் வேலை என்று பொருள். 1982ல் ஜப்பானில் ஒரு ரோபேட் தன் அருகில் வந்த ஒரு தொழிலாளியை கழுத்தைப் பிடித்து திருகிக் கொன்றது. இதுதான் ரோபேட்டால் நிகழ்ந்த முதல் கொலை.

கட்டுரை 09. விஞ்ஞானத்தில் சத்திய வேட்கை : இன்றைக்கு நாம் விஞ்ஞானத்தின் பெயரில் இந்தக் கிரகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம். கேள்வி கேட்க வேண்டும், கேட்க முயல வேண்டும். சயன்ஸ் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தரும்.

கட்டுரை 10. சூப்பர் கம்யூட்டரின் அசுர சாதனை : சினிமா நடிகர்களில் சூப்பர்ஸ்டார் இருப்பதைப்போல கம்யூட்டர்களிலும் இருக்கிறது. ஒரு செக்கண்டில் பத்துக்கோடி ஃபிளாப் செய்யக்கூடியவையே இன்றைய சூப்பர் கம்யூட்டர்கள்.

இதுபோல : 11. கம்யூட்டருக்கு அறிவுண்டா 12. ஆணு உலை வேண்டாம் ஆனால்.. 13. சூன்யத்தின் தோற்றம் 14. கம்யூட்டரில் விளையும் அரிசி கோதுமை, 15. விண்ணில் இருந்து மின்சாரம் 16. ஆற்றலைப்பெற அபொருள் 17. கத்தியின்றி இரத்தமின்றி 18. பூமியில் உயிரினம் அழிய வாய்ப்புண்டா 19. அறிவியலின் அகங்காரம் 20. காளான் போன்ற கம்யூட்டர் பள்ளிகள் 21. அறிவியலா வேதாந்தமா ?

ஆகிய 21 கட்டுரைகள் கொண்ட 125 பக்க நூல் இதுவாகும். எந்திரன் படம் வெளிவரும் வேளையில் அதன் தகவல்கள் எப்படி கட்டப்பட்டுள்ளன என்பதை அறிய ஆவலாக இருப்போருக்கு இந்த நூல் உதவலாம்.

வெளியீடு : அன்னம் புத்தக மையம். 51-1 தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர். சென்னை 17

அலைகள் அறிவுத்தேடல் பிரிவு 01.10.2010

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*