TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆட்கடத்தல் பற்றிய பேசப்படாத விடயங்கள்

சுயவிருப்பு வெளியேற்றங்கள் வேறு ஆட்கடத்தல் வேறு நன்கு அறிந்த விடையங்கள் இருப்பினும் இரண்டையும் ஓரே அர்த்தத்தில் பாவிப்பது வழமையாகி விட்டது. தமது நாட்டில் வாழ முடியாத நிலை தோன்றும் போது வெளியேற வேண்டிய கட்டாயம் தோன்றுகிறது. இது தான் சுயவிருப்பு வெளியேற்றம்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பிற நாடொன்றிற்கு ஆசை காட்டி அழைத்துச் செல்வதை ஆட்கடத்தல் என்று சுருக்கமாகக் குறிப்பிடுவார்கள். குறைந்த நேர வேலை நல்ல ஊதியம் வளமான வாழ்வு போன்ற உத்தரவாதங்கள் வழங்கப்படுகின்றன.

அதை நம்பி கடன்பட்ட பணத்தை இடைத் தரகரிடம் செலுத்தியபின் நாடு கடந்து சென்றால் உத்தரவாதங்கள் பொய்யானவை என்று ஏமாற வேண்டியுள்ளது. இது தான் ஆட்கடத்தல் என்று சட்டம் கூறுகிறது. இப்படி மோசம் போனவர்கள் கொத்தடிமைகளாகப் பிற நாடுகளில் அல்லற்படுகிறார்கள்.

மிக அண்மையில் அமெரிக்காவின் சட்ட நிபுணர்களை நிமிர்ந்து உட்கார வைத்த ஆட்கடத்தல் சம்பவம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. பசுபிக் கடலில் இருக்கும் அமெரிக்க மாநிலம் ஹாவாயில் இந்த ஆட்கடத்தல் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இந்த மாநிலத்தில் குடியேறிய லாவோஸ் நாட்டைச் சேர்ந்த அலெக் மற்றும் மைக் சகோதரர்கள் நாளடைவில் ஹாவாய்த் தீவுகளின் இரண்டாவது மிகப் பெரிய விவசாயப் பண்ணைக்குச் சொந்தக்காரர்களாக உயர்ந்து விட்டார்கள். இவர்கள் புகுத்திய விவசாய நடைமுறைகள் முன்மாதிரியாகத் திகழ்ந்ததோடு சிறந்த இலாபத்தையும் அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது.

தெற்கு ஆசியாவின் மிக வறிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் இந்தச் சகோதரர்களின் தாய்நாடு இவர்களுடைய குடும்பப் பெயர் சூ என்பதாகும் சூ சகோதரர்கள் இப்போது மதிப்பிற்குரிய அமெரிக்கப் பிரசைகளாகி விட்டனர் அதனால் அவர்கள் அமெரிக்கச் சட்டங்களுக்கு உட்படுகின்றனர்.

இவர்கள் லாவோசில் இருந்து விவசாயத் தொழிலாளர்களைத் தமது பண்ணைக்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் கொண்டு வருவார்கள் ஆனால் ஊதியம் வழங்க மாட்டார்கள் மிக மட்டமான உணவைக் கொடுப்பார்கள் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுத் தவறினார்கள்.

இந்த மூன்று குற்றச் சாட்டுக்களும் சூ சகோதரர்கள் மீது சுமத்தப் பட்டுள்ளன விவசாயப் பண்ணை இலாபகரமாக இயங்குவதற்கு அவர்கள் கடைபிடித்த சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன.

அலெக், மைக் சகோதரர்கள் தமது பண்ணையை இன்னொரு நடவடிக்கைக்குப் பயன்படுத்தியதையும் அமெரிக்க குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர் லாவோஸ், வியற்னாம், கம்போடியா போன்ற நாட்டவர்களை மறைத்து வைப்பதற்கும் தமது பண்ணையைப் பயன்படுத்தியுள்ளனர்

இப்படி மறைத்து வைத்திருப்பவர்களிடம் இருந்து பெருந்தொகை பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களைத் தக்க நேரத்தில் அமெரிக்கப் பெரு நிலப்பரப்பிற்க்குள் நுளைத்து விடுவார்கள் அமெரிக்கச் சட்ட நிபுணர்கள் பார்வையில் இந்தப் பண்ணை ஆட்கடத்தலுக்கும் திருட்டுத்தனமாக வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்குள் தள்ளுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதி மன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட சூ சகோதரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது வழக்கு நிலுவையில் இருக்கிறது ஆனால் அலெக் மைக் சகோதரர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டாம் என்ற குரல் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 44 தொழிலாளர்களைத் தாய்லாந்துத் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் ஹாவாய்த் தீவுகளுக்குக் கொண்டு வந்தபின் அவர்களிடம் கடும் வேலை வாங்கிய பிறகு அமெரிக்காவுக்குள் அனுப்பும் மையமாகப் பண்ணையைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

இவர்கள் தரப்பில் ஏற்பட்ட வழக்கறிஞர்களின் வாதங்கள் எடுபடவில்லை ஹாவாய்த் தீவின் பிரபலங்கள் அவர்களைத் தண்டிக்க வேண்டாமென்று தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கின்றனர் இரு முன்னால் ஆளுநர்கள் பல சமூக நலத் தொண்டர்கள் விவசாயத் துறை சார்ந்தவர்கள் தேவைப்பட்டால் குற்றப் பணம் அறவிடுங்கள், சிறைத் தண்டனை மாத்திரம் வேண்டாம் என்று மனுச் செய்துள்ளனர்.

இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டால் பண்ணையைக் கவனிக்க ஆளில்லாமல் போகலாம் அதனால் ஹாவாய்த் தீவுகளில் உணவுப் பற்றாக்குறை நிட்சயம் ஏற்படும் என்று மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர். வெள்ளையர்களின் ஆதிக்கம் நிலவும் அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவை குடியேறிகளின் நாடுகள். இன்று இந்த நாடுகள் குடியேறிகளின் வருகையை மட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன வெள்ளையர்கள் அல்லாதோர் பெரும் எண்ணிக்கையில் உள்வந்தால் தங்கள் ஆதிக்கம் பறிபோகலாம் என்ற அச்சம் வெள்ளையர்களுக்கு உண்டு.

கனடாவில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆய்வுத் தகவலின் படி இன்னம் சில வருடங்களில் இரு முக்கிய கனடா நகரங்கள் வெள்ளையர் அல்லாதொர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடுமாம் அதனால் நாட்டின் பாரம்பரிய அரசியலில் அடிப்படை மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டாம்.

புதிய அவுஸ்ரேலிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக பென்னி வொங் என்ற சீன வம்சாவழிப் பெண் பதவியேற்றுள்ளார் இவர் மலேசியாவில் பிறந்தவர் இளம் வயதில் அவுஸ்ரேலியாவில் குடியேறியவர் இவருடைய தந்தை மலேசியாவின் சிறந்த கட்டிடக் கலை நிபுணர்களில் ஒருவராவார்.

ஒரு நாடு தனது குடிமக்களைத் தெரிவு செய்யும் உரிமையை சீனாவிடம் கையளித்து பிரித்தானியா வெளியேறிய போது அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கச் சீனா மறுத்து விட்டது ஆனால் சீனர்களை அமெரிக்காவுக்குள் திருட்டுத்தனமாகக் கடத்திச் செல்லும் ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பாக நியூயோர்க் நகரில் படுமோசமான சூழலில் சீனத் தொழிலாளர்கள் மறைந்து வாழ்கிறார்கள் இந்தத் தொழிலாளர்களை வியர்வைத் தொழிலாளர்கள் என்பார்கள்.

சீனா எவ்வளவு தான் செழிப்புற்று வளர்ந்தாலும் அமெரிக்காவுக்குள் திருட்டுத்தனமாகவேனும் நுளையும் கனவு இன்னும் மறையவில்லை ஒரு சிறிய அறையினுள் மூன்று அல்லது அடுக்குகள் கொண்ட கட்டில்களில் பல சீனர்கள் நியூ யோர்க் நகரின் பாழடைந்த பகுதிகளில் உறங்குகிறார்கள்.

செல்வாக்கு மிகுந்த சீன முதலாளிகள் இவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை வாங்குகிறார்கள் எதையும் தாங்கும் இதயத்துடன் அமெரிக்ராகும் கனவுடன் இந்த மனிதர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

அமெரிக்கக்கனவு, கனடாக்கனவு என்பன ஏதிலிகள் மனதில் நிரந்தரம் குடிகொண்டுள்ளன அமெரிக்காவின் அடிவயிற்றுப் பகுதியான தென் மாநிலப் பெருந்தோட்டங்கள் மெக்சிக்கோ எல்லையால் வரும் அனுமதி இல்லாத கூலித் தொழிலாளர்களில் தங்கியுள்ளன.

மெக்சிக்கோ எல்லையைக் கடந்து உள்வருவோரைத் தடுப்பதற்கு அமெரிக்கா எத்தனையோ முயற்சிகள் எடுக்கின்றது ஆனால் உள்நுளைவு தொடர்ந்தபடி இருக்கிறது இரு நாடுகளுக்கும் இடையில இருக்கும் நதியை நீந்திக் கடந்து அனேகம் பேர் அமெரிக்கா வருகிறார்கள்.

வட ஆபிரிக்கர்கள் மொறக்கோ நாட்டிற்க்குள் வந்து அங்கிருந்து கடல் கடந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுளைகிறார்கள் மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது பலர் உயிரிழக்கிறார்கள் எனினும் முருக்க மரத்தில் ஏறும் வேதாளம் போல் அவர்கள் ஐரோப்பா வரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

சட்டங்களையும் தடைகளையும் எவ்வளவு இறுக்கமாகப் போட்டாலும் போய் இறங்கத் தான் வேண்டும் என்று தீர்மானித்தவன் போய்த்தீருவான் இது அனுபவ வாக்கியம் இப்போதெல்லாம் ஈழத்தமிழர்களை நாடோடிகள் என்று ஏளனம் செய்யும் ஊடகப் பண்பாடு சிங்கள தேசத்திலும் பிற நாடுகளிலும் தோன்றியுள்ளது சிங்களவர்கள் நாட்டை விட்டு ஓடிப் பிற நாடுகளில் திருட்டுத் தனமாக வாழ்கிறார்கள் என்ற உண்மையை மறக்கலாகாது.

இத்தாலியில் தலைநகர் ரோம் உட்படப் பெரும் பகுதிகளில் சிங்களவர்கள் வாழ்கிறார்கள் இந்த நாட்டில் தமிழர்கள் மிகக் குறைவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இத்தாலியில் தான் சிங்களவர்கள் மிகக் கூடுதலாக வாழ்கிறார்கள் இவர்கள் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் குடியேறியவர்கள் அல்ல.

பிரிட்டிஸ் ஆட்சி நிலவிய காலத்திலே கொழும்புத் துறைமுகம் பாவனைக்கு வருமுன்னே காலித் துறைமுகம் பாவனையில் இருந்தது அப்பகுதிச் சிங்களவர்கள் கப்பலேறி அவுஸ்ரேலியா நியூசீலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறிவிட்டார்கள் இவர்களுடைய பிறசந்ததியினர் பல்கிப் பெருகியுள்ளனர்.

ஐப்பானின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான ஒசாக்காவில் பெரும் எண்ணிக்கையில் சிங்களவர்கள் வாழ்கிறார்கள் ஒசாக்கா நகராட்சி சிங்களப் பண்பலை வானொலியை அவர்கள் தேவைக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

முன்னாள் அதிபர் சந்திரிக்காவின் கணவர் குமாரத்துங்காவின் உறவினரான அமைச்சர் ஐவன் குமாரத்துங்கா விளையாட்டுத் துறைக்குப் பொருப்பாக இருந்த காலத்தில் ஐப்பானுக்கு சிங்கள இளைஞர்களை இட்டுச் செல்வதில் ஈடுபட்டார் இதன் மூலம் அவர் பெரும் பொருளீட்டினார்.

கொழும்பு ஒரு பிரபல ஆட்கடத்தல் மையம் உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் வரம் பாக்கிஸ்தான் வங்காள தேசம் இந்தியா நாட்டவர்கள் இங்குள்ள முகவர்கள் உதவியடன் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடாவுக்கும் செல்கிறார்கள் ஐp.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட படகுகள் மூலம் தென்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்கள் இன்றும் நடக்கின்றன.

தமிழ் நாட்டு இளைஞர்கள் சிலர் சிறிலங்கா கடவுச் சீட்டுக்களுடன் ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் கோரியுள்ளனர் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் சார்பில் வாதிடப்படுகிறது அவர்களுக்கு சிறிலங்கா கடவுச்சீட்டு வழங்கியது யார் இதற்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற மர்மம் துலங்கவில்லை.

ஈழத்தமிழர்கள் இயல் நாட்டாலம் சர்வதேச சமூகத்தாலும் வஞ்சிக்கப் பட்டுள்ளனர் வேரற்ற மரம் போல் அவர்கள் அலையும் காலம் தோன்றியுள்ளது வாழ வைக்கவும் மாட்டார்கள் வாழ விடவும் மாட்டார்கள் என்பது ஈழத் தமிழனின் கண்ணீர்க் கதை.

செண்பகத்தார் திறனாய்வு பார்வை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*