TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கே.பி மாமாவுக்கு பகிரங்க கடிதம்: நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

ஹாய் கே.பிமாமா,

மீண்டும் நான் தான்,

சிறீலங்கா அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க, அவர்களின் சொகுசு பங்களாவில் நீங்கள் இளைப்பாறும்போது, தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் எவ்வாறு இருக்கின்றனர் தெரியுமா மாமா?

காலையில் எழுந்ததும், மகிந்தாவின் படத்தை வணங்கிவிட்டு, சிறீலங்காவின் தேசிய கீதத்தை ஓதிவிட்டு, சிறீலங்கா அரசுக்கு ஆதரவான வாக்குறுதிகளை வழங்கிவிட்டே காலை உணவை அவர்கள் உண்ண முடியும்.

30 வருடங்களாக தமது தேசியத் தலைவரை வணங்கி, எமது தேசத்தின் விடுதலை கீதத்தை இசைத்து, எமது மக்களின், தமிழ் இனத்தின் விடுதலைக்கான உறுதிமொழிகளை எடுத்துவிட்டு, பயிற்சிக்கு செல்லும் போராளிகளுக்கு இது மிகப்பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பாணும், பருப்பும், பாலும் கொடுத்துவிட்டால் போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள்;. கடந்த 33 வருடங்களாக நாம் எமது விடுதலைக்கு செலுத்திய விலைகள் என்ன? என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது பழிவாங்கும் உணர்வில் குழிதோண்டி புதைத்துவிட்டீர்களா?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை மாமா!! உங்களை தன்வசப்படுத்தியோ அல்லது அதிக பணச் செலவில் ஊடகவியலாளர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் என்றபோர்வையில் தனது கைக்கூலி தமிழர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பியோ புலம்பெயர் தமிழ் சமுகத்தை இன்றுவரை அசைக்க முடியாதது கோத்தபாயா கண்ட முதல் தோல்வி.

அந்த தோல்வியை வெற்றிபெற வைக்கவே இரவு பகலாக உங்கள் தூக்கத்தை தொலைத்து புலம்பெயர் நாடுகளில் இருந்து சில கொத்தடிமைகளை நீங்கள் விலைகொடுத்து வாங்கியிருந்தீர்கள், அவர்களுக்கு என சில ஊடகங்களையும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றீர்கள்.

ஆனால் 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் எமது தேசத்தின் தலைவர் உரைத்த வாசகங்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு மக்களின் மனதிலும் பசுமரத்து ஆணிபோல ஆழப்பாய்ந்துள்ளது. அதாவது “புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் ஈழவிடுதலைப்போராட்டம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது”.

அதனை அவர்களிடம் இருந்து புடுங்குவது இலகுவானதாக இருக்காது, நீங்கள் தலைகீழாக நின்றாலும், இந்தியாவுக்கு அப்பால் உங்களின் வன்முறைகள் பயன்தரப்போவதில்லை.

காசு கொடுத்து வாங்கப்படும் கொத்தடிமைகளுக்கும் ஒரு எல்லை உண்டு, அவர்களால் உங்களுக்கு விசுவாசம் காண்பிக்க முடியுமே தவிர, தமிழ் சமூகத்தை தன்பக்கம் திருப்ப முடியாது.

புலம்பெயர் தமிழ் சமூக்தில் துரோகிகளின் எண்ணிக்கை வர வர அதிகமாகி வருவதாகவும், மகிந்தாவுக்கும், கருணாநிதிக்கும் ஆதரவு தரும் புலம்பெயர் நரிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் எனது நண்பன் ஒருவன் என்னிடம் தெரிவித்தான்.

நான் கவலைப்படவில்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை, ஏனெனில் இன்று உலகில் 80 மில்லியன் தமிழ் மக்கள் இருந்தபோதும், தமது இனத்திற்காக போராடி, இந்த உலகத்தின் பார்வையை தமிழ் இனத்தின் மீது திருப்பிய தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

வெறும் 2 மில்லியன் தான். மிகுதி 78 மில்லியன் தமிழ் மக்களும் புறம்போக்கு நிலங்களாக இந்த உலகத்தை நிரப்பிக் கிடக்கின்றனர். எனவே எமக்கு துரோகிகளின் எண்ணிக்கையோ அல்லது எதிரிகளின் எண்ணிக்கையோ முக்கியமானதல்ல, எம்மில் போராடும் மக்களின் உளவுறுதி தான் முக்கியமானது.

அதே நண்பன் தான் மேலும் ஒரு தகவலையும் என்னிடம் தெரிவித்தான், அண்மையில் நீங்கள் உருவாக்கியுள்ள வடக்கு – கிழக்கு அபிவிருத்தி இணையத்தளத்தில் “கஜனி” படத்தில் நமால் ராஜபக்சாவின் அன்பு பைங்கிளி, அசின் அக்காவின் குத்தாட்ட பாட்டுக்கு, தடுப்பு முகாம்களில் உள்ள போராளிகளை நடனம் ஆட விட்டு நீங்கள் ரசித்தீர்களாம்.

அதனை படம் பிடித்து இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறீர்களாம். “சுட்டும் விழிச்சுடரே” என ஆரம்பிக்கும் அந்த பாடலுக்கு போரளிகள் பலவந்த நடனம் ஆடுவது தனது நெஞ்சை அடைக்கும் துக்கமாக மாறியதாக அவன் கூறும்போது நானும் ஒரு தடவை கலங்கி விட்டேன்.

அசின் சேச்சியின் பாட்டுக்கு குத்தாட்டம் போடவா நாம் போராடினோம்? அதற்காகவா எம் தலைவர் தனது போராளிகளுக்கு பயிற்சி அளித்தார்?

இதனை கேட்ட பின்னரும் உங்களுக்கு நான் எழுதும் கடிதத்தை தொடர்ந்தால் எனக்கு தான் பச்சத்தண்ணியால் தலையில் ஊத்துவான்கள்.

ஆனாலும் இறுதியாக, என்னிடமும் உங்களுக்கு ஒரு பாட்டு உண்டு மாமா.

இது புதிய பாட்டு, இப்ப தான் வந்தது, படம்: “தம்பி அர்சுணா”

“புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே” “ நரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே”

“புல்லைக் கண்டு நடுங்கும் மனிதன் இருக்கும்போதே சாகிறான்” “புல்லைக் கத்தி ஆக்கும் மனிதன் இறந்தபின்னும் வாழ்கிறான்”

“தன்னை மட்டும் காத்துக்கொள்ளும் வாழ்வில் இல்லை நன்மையே”

“தன்னைப் போல பிறரைக்காக்கும் தர்மம் வெல்லும் உண்மையே”

“நீ இறுதிவரை போராடு” “செங்குருதியிலும் நீராடு”

“அர்சுணா

நாங்களும் பாடுவமெல்லே.

முற்றும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
 • John says:

  Get rid of this scoundrel and wolf in the sheep’s cloth K.P. Does he have family members? Is his father a Tamil? Is his mother a Tamil? Did they not feed him with Tamil milk? Shameless creature, his life is sheer waste in this planet. Does he have a chance to read these articles and comments? If so he should hang himself

  September 11, 2010 at 20:32
 • seran says:

  The good think that K.P. had done for the tamils is the help he had given to the government to destroy the LTTE terroristes. If not the LTTE would have destroyed the whole tamil community. Thanks god and to KP. It is then obvious that KP is a true tamilan.

  September 11, 2010 at 22:59
 • santan says:

  puli thalivar manamigu methagu prabakaran vazga

  EELAM VELLUM ATAHI KALLAM SOLLUM

  September 14, 2010 at 07:25
 • santan says:

  engallukkum kallam varum. kallam vanthal vazuvu varum.vazuvu vanthal anaivarium vazavaippom.(thorokikalai thavira)

  santan

  September 15, 2010 at 08:23
 • illamaran says:

  கே.பி ஒரு‍ துரோகியானார், அது‍ சுழ்நிலை என்று‍ கூட எடுத்து‍ கொள்ளலாம், அதுவும் தவறு‍ தான். ஆனால் இந்த Seran போன்ற துரோகிகள், பேடிகள், கேடிகள், அடிவருடிகள், சுயநலவாதிகள், சுந்திரம், சுந்திரப் போரட்டத்தை பற்றி் அறியாதவர்கள், மூடர்கள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், திருட்டு‍ நாய்கள், தமிழ் ஈழ் விடுதலை புலிகளின் வீரம், தியாகம் பற்றி அறியாத, அறிந்திருந்தும், அறியாதது‍ போல் நடிக்கும் பம்மாத்து‍ நடிகன், இனத்துரோகி etc. , etc.,,

  September 15, 2010 at 20:24
 • சேரன் says:

  அரசியலில் அ தெரியாமல் ஏகாதிபத்தியத்திற்கு துணைபோய் சுதந்திர போராட்டம் என்ற பெயரில் அறிஞர்களையும் சரியான போராட்ட பாதையில் போனவர்களையும் போட்டுதள்ளி ஏகாதிபத்திய கைக்கூலியாகி பின்னர் போராட்டத்தையை திசைதிருப்பி அதையும் அழித்து மக்களையும் அழித்த பிரபாகரனுக்கு துணை போன நீங்கள் துரோகிகளா அல்லது தற்போதும் மக்களின் பெலவீனத்தை பயன்படுத்தி அவர்களை திரும்பவும் திரும்பவும் அரசியலே தெரியாது பிழையாக வழிநடாத்தும் உங்களைப் போன்றவர்களை கண்டிக்கும் நாங்கள் துரோகிகளா. உங்கள் மேதகு பிரபா மாமா தமிழர்களை திட்டமிட்டு அழிக்கும்போது ஏன் பிரபா மாமா நீங்கள் நல்லவரா கெட்டவரா என கேட்டிருக்கலாமே. அப்போது கேட்டிருந்தால் அவர் உங்களையும் போட்டுத்தள்ளியிருப்பாரே. அதனால்தான் அதை அப்போது நீங்கள் செய்யவில்லை. இதற்கு பெயர் துரோகமா அல்லது அதற்கு என்ன பெயர்.

  September 17, 2010 at 01:53
 • ravi says:

  seran naai ya piraba theriyumada , unpeyarai soll ean seran solukirai naya

  October 1, 2010 at 21:12
 • Tajuana Blessing says:

  Hands down, Apple’s app store wins by a mile. It’s a huge selection of all sorts of apps vs a rather sad selection of a handful for Zune. Microsoft has plans, especially in the realm of games, but I’m not sure I’d want to bet on the future if this aspect is important to you. The iPod is a much better choice in that case.

  July 3, 2012 at 04:19

Your email address will not be published. Required fields are marked *

*