TamilSpy

பொழுது போக்கு இணையம்…

5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்! புலத்தை நோக்கி நகர்கின்றது!!

தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.

அதை எதிர்கொள்ளச் சிங்கள அரசும் அதன் கூட்டாளி நாடுகளும் தயாராகி விட்டன. இது பிரகடனப் படுத்தப்படாத போர் ஆனால் உண்மையான போர்தான். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளை வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சிறிலங்கா அனுப்புகிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரும் வேரடி மண்ணுமான போராட்ட உணர்வை அழிக்கும் நடவடிக்கையில் இது முக்கிய அங்கமாக அமைகின்றது. படை அதிகாரிகளை அனுப்புவதானது ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் படை நடவடிக்கை என்பதற்குச் சந்தேகமில்லை.

ஈழத் தமிழுணர்வுக்கு எதிரான கருத்துப் போரையும் சிங்கள அரசு தொடங்கியுள்ளது. சிங்கள ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்புகின்றன. அதன் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத சில தமிழ் ஊடகங்கள் இதற்குத் துணை போகின்றனர்.

அனைத்து தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் என்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஐனவரி 2011ல் தலைநகர் கொழும்பில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பரந்துபட்ட பிரசாரத்தின் மூலம் முக்கியத்துவம் கொடுக்கவும் தூதரங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

போர்க் குற்றவாளிகளை தூதுவர்களாக நியமிக்கப்படுவதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இதனால் தூதரங்களிற்கு நியமிக்கப்படும் படை அதிகாரிகளின் விபரங்களை இரகசியமாக மேற்கொள்ளுமாறு தூதரங்களிற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

போர் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்து வரும் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது திரைமறைவில் முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

மே 18, 2009 அதிகாலை அரசியற் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் தமது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாக அலுவலர்களுடன் படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் மொத்தம் 60 பேருக்கு மேல் இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடையுமாறு நடேசன், புலித்தேவன் ஆகியோர் தொடர்பு கொண்ட நோர்வே அரசு, சிறிலங்கா அரசு, செஞ்சிலுவை சர்வதேச குழு, ஐ.நா செயலாளர் நாயக அலுவலகம் என்பன பரிந்துரை செய்திருந்தன.

இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும். என்று சிறிலங்கா அரசு மற்றும் இராணுவ உயர்மட்டத்தினர் நடேசன், புலித்தேவன் ஆகியோருக்கு உத்தரவாதம் வழங்கியதை கொழும்பு இராசதந்திர வட்டராங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தன.

இப்படியாக இருப்பினும் 58ம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஐர் ஜெனரல் சவீந்திர டி செல்வா பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஐபக்சவின் கட்டளைக்கு அமைவாக அனைவரையும் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டார்.

வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் மீதான படுகொலை ஒரு பாரிய போர்குற்றமாகும். இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புடையவர்களான சவீந்திர டி சில்வாவும் கோத்தபாயா ராஐபக்சவும் குற்றவாளிகளாகக் கணிப்பிடப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

ஆனால் சவீந்திர டி சில்வா ஐ.நாவுக்கான சிறிலங்காவின் உதவி நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்வதேச நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் முரணாக இருப்பினும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மறுக்காமல் நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே இன்னுமொரு போர்குற்றவாளியான மேஐர் ஜெனரல் ஐகத் டயஸ் சிறிலங்காவின் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுவிற்ஸர்லாந்து வாழ் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

பிரித்தானியாவுக்கான தூதுவராக கடற்படை வைஸ் அட்மிரல் கரனாகொடவும் மலேசியாவுக்கான தூதுவராக ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழின அழிப்பை தாயக மண்ணில் மேற்கொண்ட படைத் தளபதிகள் தமிழர்களுக்கு எதிரான போரை புலம்பெயர் நாடுகளுக்கு விரிவு படுத்தியுள்ளனர். இதை எமது உறவுகள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டுத் தூதுவர்களை போல் இராணுவப் படைத் தளபதிகள் தமது பணிகளை மேற்கொள்ள மாட்டார்கள். சதித்திட்டங்களையும், தகவல்களையும், குழப்பங்களையும் உருவாக்குவார்கள். ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.

பாரிஸில் 1996ம் ஆண்டு நடந்த சதித்திட்டங்களை போல் மாற்று வடிவிலான சதித்திட்டங்கள் திட்டுவார்கள் என்பதை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும். போர்க் குற்றவாளிகளை நீதி மன்றத்தின் முன்நிறுத்த ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கவேண்டும்.

தமிழீழத்திற்கான எமது இறுதிப் போரில் எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. உலக நாடுகளினுடைய மனித உரிமைகள் சார் வலுவான குரல்களும் வலுவான அமைப்புக்களும் சிறிலங்காவிற்கு முன்னால் செயலிழந்து நிற்கின்றன. சிறிலங்காவுக்கு வலுவான எதிர்ப்புக் காட்டும் போர்க் குணமும் ஓர்மமும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் உண்டு.

போர் தொடங்கி விட்டது. இந்தப் போர் வலுவடைய வேண்டும். இந்தப் போர் உன்மத்தம் பெறவேண்டும். அங்கேயே பிறந்து வளர்ந்து அந்தந்த நாடுகளின் கலாசார வழக்கங்களையும் மொழிகளையும் இயல்புகளையும் அறிந்த இளம் தலைமுறையினர் இந்தப் போரைத் தலைமையேற்று நடத்த வேண்டும். வாழும் நாட்டு மக்கள் பேசுகின்ற மொழிகளிலே பேசும் தகுதி கொண்ட ஈழத்தமிழர்களுக்கு இந்த தகுதி உண்டு.

அந்த நாட்டு மக்கள் எப்படி அரசியலையும் சமூக வாழ்வையும் ஒன்றிணைந்து நடத்துகிறார்களோ அப்படியே நடத்தி அவர்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளும் விதத்தில் வாதங்களை முன்வைக்க வேண்டும். அவர்களுக் கெல்லாம் இந்த நீதி உணர்வையும் இலட்சிய வெறியையும் ஈழ விடுதலைத் தாகத்தையும் அண்மையில் நடந்த இனப் படுகொலை வரலாற்றையும் எடுத்துக் கூறவேண்டும். அப்படிச் சொல்லும் உரிமை ஐனநாயக விழுமியங்கள் நிலவும் புலம்பெயர் நாடுகளில் சாசன ரீதியாக உறுதி செய்யப்படுகிறது.

அப்படிச் சொல்லாமல் விடுவோமானால் அது எமக்கு நாமே தேடிக் கொள்ளும் அவமானமாக அமையும். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறவே மாறாது. ஈழத்தமிழர்கள் நடத்தும் போர் கருத்துப் போராக அமையவேண்டியது தவிர்க்கமுடியாத நிகழ்ச்சி நிரலாகும். கவன ஈர்ப்பு போராட்டங்கள் எமது தரப்பு நியாயப்பாடுகளை உலகிற்கு உணர்த்த நிட்சயம் உதவும்.

ஈழத் தமிழர்களின் தேசியச் சின்னங்களான தேசியக் கொடி, தேசிய விலங்கு, தேசிய மரம், தேசியப் பறவை பற்றிய உணர்வுகள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும். முக்கியமாகக் கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகளில் தேசியக் கொடிக்குரிய முக்கியத்துவம் தவறாது தரல் வேண்டும்.

உலகத் தமிழினம் பேரியக்கமாக வளர்ச்சி கண்டாலும் போராட்ட முனைப்பு தீவிரமடைய வேண்டிய தேவை நிறைய இருக்கிறது. பலதரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து செயற்படும் போது ஏற்படும் உரசல்களும் முரண்பாடுகளும் தவிர்க்கப்பட்டால் போராட்ட வலு வீரியம் பெறும்.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமது ஆற்றலை அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இனிமேலும் கிடையாது. களத்தில் இறங்கியவர்கள் களமாடாமல் இருக்க முடியாது.

ஈழப் போர் தாயகத்தில் அமைதியாக இருந்தாலும் உலக அரங்கிலே ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான போர் விரிவடைந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் அனைவரும் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.

எல்லா இரவுகளும் முடியும். எல்லாக் கொடுமைகளும் முடிவுக்கு வரும். நிட்சயம் இருள் விலகும். இருளின் ஆட்சி மறையும் காலம் நெருங்கி விட்டது. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருப்பினும் இது நம்பிக்கைகளின் உதய காலமாக இருக்கிறது. தமிழீழத்தின் பிறப்பு நிச்சயமாகத் தெரிகிறது.

செண்பகத்தார் திறனாய்வு பார்வை

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
 • ravichandran says:

  god, siva, please provide a path for tamil eelam

  September 4, 2010 at 18:02
 • Seran says:

  Hello Ravichandran, instead of asking from the imaginary god siva, ask Mahinda to do good for the tamils and ask the so called tamils MPs to resign.

  September 5, 2010 at 21:04
 • santan says:

  eelam vellum athai kalam sollum. eelam vendru atahai thaliver kaiyel koduppom.

  September 6, 2010 at 13:32
 • தமிழன் says:

  அரசியலில் அ தெரியாது தாங்கள் செய்வதுதான் சரி என நினைத்து சுய இன்பம் அனுபவிக்கும் கூட்டந்தான் புலிக் கூட்டம். மற்றவர்களின் சொற்களை கேட்காமல் இப்படி சுய இன்பம் அனுபவித்து அனுபவித்துதான் தமிழ் மக்களை நிர்க்கதியாக்கினீர்கள். இதற்குள் கோழையான பொம்மைத் தலைவர் தேவை!!

  September 6, 2010 at 19:28

Your email address will not be published. Required fields are marked *

*