TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்?: செண்பகத்தார்

யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும் போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவழி

யுத்தம் நின்றாலும் அதன் அவலங்களும் அலைச்சலும் மீளாத் துயரமும் தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதன் வேதனையை முற்றாக உணர்ந்தவர்கள் ஈழத் தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த மாபெரும் துயரம் உலகின் மனச்சாட்சியைத் தொட்டதாகத் தெரியவில்லை காலம் காலமாக வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் புகலிடம் தேடி அலைகின்றனர்

நாட்டை விட்டு எல்லை கடத்தல் என்பது எவ்வளவு சிக்கலானது அதன் வேதனையை ஈழத் தமிழர்கள் முழுமையாக அறிந்தவர்கள் ஆபத்தான பயணங்களை அவர்கள் ஏன் மேற்கொள்கிறார்கள் சின்னஞ் சிறிசுகளோடு ஏன் இடம் பெயர்கின்றார்கள் என்று பார்க்கும் தேவை எழுந்துள்ளது

உலகின் மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகச் சிறிலங்கா இடம்பெறுகிறது இந்த நாட்டின் தரைப்பரப்பு, மக்கள் தொகை ஆகிய அளவுக்குத் தற்போதுள்ள அதன் படையினர் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் மிக அதிகம்

ஈழத் தமிழர்களை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்குடன் கடந்த அறுபது வருட காலமாக சிறிலங்கா இராணுவம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது யூன் 2009ல் வெளிவந்த தரவுகளின்படி ஜக்கிய இராச்சியத்தின் இராணுவம் 146,000 வீரர்களைக் கொண்ட 6 டிவிசன்களைக் கொண்டுள்ளது

சிறிலங்கா இராணுவம் தற்போது 300,000 படையினரைக் கொண்டிருப்பதோடு இன்னும் ஒரு இலட்சம் பேரைச் சேர்க்கும் திட்டத்தோடு இயங்கிறது முற்றாக்ச் சிங்கள இனத்தவரை மாத்திரம் கொண்டிருக்கும் சிறிலங்கா முப்படைகளும் ஈழத் தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்குடன் செயற்படுகிறது

சீனாவும் ஜப்பானும் போட்டியிட்டபடி சிறிலங்காவுக்கு வட்டிச் சலுகைக் கடன்களையும் நிதி அன்பளிப்புக்களையும் செய்கின்றன. இராணுவத்தினருக்கான பயிற்சியை இந்தியாவும் அமெரிக்காவும் வழங்குகின்றன.

இடம்பெயர்ந்த தமிழர்களின் மேம்பாட்டிற்காக இந்தியப் பேரரசு வழங்கிய 500 கோடி இந்திய ரூபாக்கள் சிறிலங்கா அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளது கொடுத்த பணம் முறையாகச் செலவிடப்பட்டதை உறுதி செய்ய இந்திய அரசு தவறியுள்ளது

போர் முடிந்தபின் அரசு வெளியிட்ட வரவுசெலவு அறிக்கைப்படி இராணுவத்திற்கு 20 ஆயிரம் கோடி சிறிலங்கா ரூபா ஓதுக்கப்பட்டுள்ளது போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு 307 கோடி ரூபா மாத்திரமே

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் நிரந்தரமாக இராணுவத்தை நிறுத்தும் திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப் படுத்துகிறது தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைக்கும் பணிகளை சீன அரசு ஏற்றுள்ளது

இராணுவ முகாம்கள் அமைக்கம் தேவைக்காகவும் படையினரின் குடியிருப்புத் தேவைக்காகவும் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் குடியிருப்பு நிலங்களும் விவசாய வயல்களும் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

தமது சொந்த மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் வாழ்விடம் அற்றவர்களாகி விட்டனர் இவர்களுடைய பழம்பெரும் சைவக் கோயில்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் முகாங்களாகவும் தங்கங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன

சைவக் கோயில்களுக்குக் முன்னால் நிற்கும் அரச அரச தல விருட்சங்களுக்குக் கீழ் புத்த விகாரைகள் கட்டப்பட்டு இராணுவத்தினரின் வழிபாடு தொடங்கிவிட்டது இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோயில் இராணுவத்தினரின் பிடியில் வந்துள்ளதால் சைவப் பெருமக்கள் அங்கு செல்ல முடியாதிருக்கிறது.

ஒமந்தை பிள்ளையார் கோயில் முருகண்டிப் பிள்ளையார் கோயில் என்பனவும் இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளன முருகண்டிப் பிரதேசத்தில் 15,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டத்தை அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. யாழ் குடா நாட்டில் மாதகல் கடற்கரையில் மிகப் பெரிய புத்த கோயிலும் அதைச் சுற்றி சிங்கள யாத்திரிகர்களின் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யாழ் குடா நாட்டின் மொத்த நிலப்பரப்பின் 15 விகிதம் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் சென்று விட்டது வவுனியா செட்டிக்குளம் இடம் பெயர்ந்தோர் முகாம் பற்றிப் பேசுவோர் யாழ் குடா நாட்டின் ஏறத்தாழ 20 வருடம் பழமை வாய்ந்த முகாம்கள் பற்றி அக்கறை காட்டுவதில்லை

ஈழத் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகள் படுத்து விட்டன அதே கதி மீன் பிடித் தொழிலுக்கும் ஏற்ப்பட்டுள்ளது இராணுவத்தின் பாதுகாப்போடு தெற்குப் பகுதி மீனவர்கள் தமிழர் பகுதிக்கு வந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.

முல்லைத்தீவின் கடல் வளத்தை அறுவடை செய்யும் உரிமையைச் சிறிலங்கா அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளது தமிழ் மீனவர்கள் கரையோர மீன்பிடிக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சீன நிறுவனங்களுக்கு இறால் பண்ணைகளை நந்திக் கடல் பிராந்தியத்தில் அமைக்கம் அனுமதியை சிறிலங்கா அரசு வழங்கியுள்ளது முல்லைத்தீவின் நந்திக் குடா கடல் இறால் வளத்திற்குப் பெயர் பெற்றது

ஈழத் தமிழீனம் எதிர்காலம் இல்லாத இனமாக மாறி விட்டது நிவராணம் என்ற பிச்சையாக அவர்களுக்கு அரசு வழங்கும் தரங்கெட்ட அரிசியும் தேங்காய் எண்ணையும் உணவுத் தேவைக்குப் போதாமல் இருக்கிறது சொந்தக் காலில் நின்ற மக்கள் இன்று நாடு வீடு சோறு அற்றவர்களாகக் காட்சி தருகிறார்கள் உலகம் தழுவிய அரசின் தூதரகங்களும் அரசுக்குச் சார்பான ஊடகங்களும் தமிழர் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறுகின்றன.

அப்படியாயின் வன்னி நிலப்பரப்பிற்குள் உள்ளுர் மற்றும் சர்வதேசப் பத்திரகையாளர்கள் சென்று பார்வையிட ஏன் சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது? தொண்டு நிறுவனங்களும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழீனம் கல்விக்கு முதலிடம் வழங்குகிறது போர்க் களத்தில் போர் வீரன் சிந்தும் இரதத்திலும் பார்க்க அறிஞனினன் பேனா மை வலுவாய்ந்த ஆற்றல் கொண்டது என்பதைத் தமிழர்கள் அறிவார்கள் அன்று வன்னியில் கல்விச் செயற்பாடுகள் நின்றுவிட்டன.

மாணவர்கள் காலமறிந்து கல்வியின் முக்கியத்துவம் அறிந்து படிக்க வேண்டும் முக்கியமாகப் படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும் லன்டனில் பிரசுரமாகும் எக்கனோமிஸ்ற் என்ற பொருளாதார மற்றும் அரசியல் சஞ்சிகை தமிழ் மாணவர்களின் கல்வித் திறமை பற்றி விதந்து பாரட்டியுள்ளது

கல்வி முன்னேற்றத்தில் ஈழத் தமிழ் மாணவர்களும் சீன மாணவர்களும் வியக்கத்தகுந்த திறமையைக் காட்டுகின்றனர் என்று எக்கனோமிஸ்ற் கூறுகிறது. தமிழர்கள் தமது வேர்களை அறுத்துக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள் என்று கேள்விக்கான விடை பின்வருமாறு குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் பறிபோகின்றன தொழில் வளம் குன்றி விட்டது உயிருக்கு உத்தரவாதம் இல்லை இராணுவத்தினரின் பாலியல் பலாத்காரங்களால் வெளியேறுவது உத்தமம் என்ற நிலைக்கு ஈழத் தமிழர்கள் வந்துவிட்டார்கள்

ஈழத் தமிழர்கள் எமது நாடுகளுக்கு வந்து பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் அவர்களைத் தடுத்து வெளியேற்றும் சர்வதேச நியமங்களுக்கு முரணான சட்டங்களை இயற்றப் போவதாக மிரட்டும் மேற்கு நாடுகளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறோம்.

எல்லாம் அறிந்த நீங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்திற்கும் எதிராக நடத்தப்பட்ட போரை ஏன் நிறுத்தத் தவறினீர்கள்? போரின் முக்கிய விளைவாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?

முன்னாள் பிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கலகன் அவர்கள் கூறிய விடயம் நினைவுக்கு வருகிறது நாங்கள் ஆசிய நாடுகளை ஆக்கிரமித்துச் சுரண்டினோம் அந்த நாடுகளின் மக்கள் எமது நாட்டிற்கே வந்து விட்டார்கள் எப்படி அவர்களை விரட்டுவது இங்கேயே இருக்கட்டும்.

நெல்சல் மன்டேலாவுக்கு நிகரான அரசியல் அறிஞரும் உத்தருமான சிங்கப்பூரின் தலைவர் லீ குவான் யூ அவர்கள் சிறிலங்காவில் இன்று நடப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமில்லை என்று சொன்னார்

தமிழர்களுக்காகப் போராடிய புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் இதனால் இனப் பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது என்று அரசு கூறுகிறது சிறுபான்மையினரான தமிழர் மனதை வெல்லும் துணிச்சல் அவர்களிடம் இல்லை இதனால் தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முற்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிரந்தரமாக நிலை நிறுத்தி சிங்களக் குடிறே;றத்தைப் பரவலாகச் செய்வது மூலம் இனப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று அரசு நம்புகிறது ஏற்கனவே அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு விட்டது.

கிளிநொச்சி, இரணைமடு, முல்லைத்தீவு, மணலாறு ஆகிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் தொடங்கிவிட்டது வெளியேறுவதை விடத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை செட்டிகுளத்தில் தடுத்து வைக்கப்பட்ட மக்களைத் துரித கதியில் மீள்குடியேற்றம் செய்வதாக அரசு கூறுகிறது இது உண்மைக்குப் புறம்பான செய்தி வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்ட மக்கள் புதிய முகாம்களில் அடைக்கப்படுகின்றனர் சொந்த இடத்தில் வாழ அனுமதிக்ககப்பட்டவர்கள் புதிய முகாம்களுக்குச் செல்லும்படி பணிக்கப்பட்டுள்ளனர்

வன்னிப் பிராந்தியத்தில் 60,000 வரையிலான போர் விதவைகள் வாழ்கின்றனர் இவர்கள் நாளாந்தம் இராணுவத்தினரின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகின்றனர் 02.06.2010ம் நாள் 28 வயதினரான பாக்கியராசா திருக்குமாரி என்பவரை நான்கு படையினர் தலையில் அடித்துத் தாக்கியபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு மிக அபூர்வமாக கிளிநொச்சி நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது ஒரு இராணுவ பிரிகேடியரும் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியும் குற்றவாளிகள் சார்பில் தோன்றி அவர்களை விடுதலை செய்யும் படி கேட்டனர் இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடக்கின்றன.

தமிழ் நாட்டில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளும் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர் நடிகர் விஜயகாந்த் தோன்றும் திரைப்படம் ஒன்றில் ஈழத் தமிழ் அகதிப் பெண் ஒருவர் தமிழகக் காவல்துரையினரால் அவருடைய கணவன் முன்னிலையில் பாலியல் வன்முறைக்கு உட்படும் காட்சி பதிவாகியள்ளது

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாகரிகமான நாடுகளுக்குச் செல்ல ஈழத் தமிழர்கள் விரும்புவதில் வியப்பில்லை ஏதோ ஈழத் தமிழர்கள் தான் புதிய வாழ்விடங்களைத் தேடிக் கடலில் இறங்குகிறார்கள் என்று ஒருவரும் எண்ணக் கூடாது சர்வதேச நாடுகள் ஏன் ஈழத் தமிழர்களைக் குறி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜரிக்கன் இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வதற்கான பாதுகாப்பான சூழல் ஒன்றைத் தேடி வெளியேறி வருவதாகவும் அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்திற்கும் புகலிடக் கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை தூர இருந்து வேடிக்கை பார்த்த மேற்கு நாடுகள் இப்போது தான் போரின் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளனர் 1876 தொடக்கம் 1976 ஆண்டு வரையிலான நூறு வருடத்தில் 26 மில்லியன் இத்தாலியர்கள் ஏழ்மை, நோய், அரசியல் மற்றும் பொருளாதார அடக்கு முறைகள் காரணமாகக் கடல் கடந்த நாடுகளில் குடியேறியுள்ளனர்

ஈழத் தமிழர்களுக்கும் இந்தக் கதி ஏற்பட வாய்ப்புண்டு இது ஒன்றிணைந்த உலகம் உள்நாட்டுப் பிரச்சனை என்று ஒன்றும் இல்லை இனியாவது மேற்கு நாடுகள் முனைப்பாகச் செயற்பட்டு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் நீதி கிடைக்க உழைக்கவேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*