TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தீவிரவாதத்தின் தோல்வி: ஆசிரியர் குழு தமிழ்நெற்

தமது கிளர்ச்சி எதிர்ப்பு ஆயுதமாகக் கொழும்பு அரசும் போருக்கு உதவிய நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் எதிராகத் தீவிரவாதத்தின் தோல்வி என்ற வாதத்தை அண்மைக்காலமாக முன்னெடுக்கின்றன.

அவை வௌ;வேறு காரணங்களுக்காக இதைச் செய்தாலும் ஒருவராவது கீழ்ப்படிந்து போங்கள் என்று சொல்வதை விட உருப்படியான தீர்வு ஒன்றையும் முன்வைக்கவில்லை தீவிரவாதத்தின் தோல்வி பற்றிப் பேசும் சில ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்ட சிறிலங்காவுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.

இன்று வரை ஈழத்தமிழர்களை வாட்டி வதைக்கும் இந்தத் தவரை எமது முன்னோர்கள் இழைத்துள்ளனர் அதே தவறை ஒன்றுபட்ட சிறிலங்காவுக்காக இன்று குரல் கொடுப்போரும் விடுகின்றனர். இந்தத் தவறின் தாக்கம் ஈழத்தமிழர்களின் வருங்காலச் சந்ததியையும் தொடர்ச்சியாக பீடிக்கும்.

ஈழத்தமிழர்களுக்கு இவ்வுலகில் தமிழீழம் ஒன்றுதான் நியாயமான வாழ்விடம் உலகின் எவ்வகை புவிசார் அரசியல் போட்டிகள் நடந்தாலும் ஈழத்தமிழர்களுக் கென்று தனிநாடு இருந்தால் மாத்திரமே பிற நாடுகள் அதைக் கணக்கில் எடுக்கும்.

பன்முக இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன இதை நிறுத்துவதற்குச் சர்வதேச சமூகம் ஒன்றையும் செய்யவில்லை ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைக்கான பொறுப்புக்களை சர்வதேச சமூகம் பொறுப்பேற்கவில்லை அரசியல் நீதி வழங்கல் பற்றிய பேச்சையும் காணோம்

சிறிலங்கா மற்றும் இந்தியாவின் கிளர்ச்சி எதிர்ப்பு எழுத்தாளர்கள் மாத்திரம் வர்த்தக நிறுவனங்களின் முதலீட்டுக் காலனித்துவத்திற்குச் சார்பாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர் சில சர்வதேச ஊடகங்களும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இவர்கள் தீவிரவாதத்தின் தோல்வி மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றித் தீவிர பிரசாரம் செய்கின்றனர் குறுகிய நோக்கில் செய்யப்படும் இந்தப் பிரசாரம் இந்த நூற்றாண்டில் நடந்த காட்டு மிராண்டித்தனமான போரை மூடி மறைக்கின்றது

போர் குற்றங்கள் பற்றிய விசாரணையையும் இந்தப் பிரசாரம் மழுங்கடிக்கின்றது அதே சமயத்தில் பிரச்சனைக்குத் தீர்வாக உருப்படியான யாதொன்றையும் அவர்கள் வழங்கவில்லை. வளங்களைப் பங்கீடு செய்வதில் அவர்கள் காட்டும் பேராசை நன்றாகப் புலப்படுகிறது.

சர்வதேசத்தின் நம்பகத் தன்மை இழப்புப் போல் இதுகும் பெரும் இழப்பில் முடியும் ஈழத்தமிழர்கள் தமது மண், இறையாண்மை, தமக்குரிய அரசியல் நீதியைக் கேட்டால் அது தீவிரவாதமாகக் கருதப்படுகிறது

அதே சமயத்தில் தோல்வி மனப்பாண்மையில் ஊறிப் போயிருக்கும் சில சுயநலவாத தமிழர்கள் முழுச் சரணாகதிக்காக முன் நிற்கும் போது அவர்களை மித வாதிகள் என்றும் சாத்தியமானவற்றைக் கேட்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறது

தீவிரவாதத்தில் இருந்து தீவிரவாதம் பிறக்கின்றது தோல்வியை ஏற்கும் தீவிரம் நல்லதல்ல தமிழர்களுக்கு மாத்திரமல்ல சிங்களவர்களுக்கும் அது நல்லதல்ல ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுக்கும். உலக நாடுகளுக்கும் அது நல்லதல்ல.

ஒரு விதமான தீர்வும் வழங்காத தீவிரவாதத்தின் தோல்வி என்ற வாதம் அதை ஏற்றுக் கொண்ட சில தமிழர்களில் எதிரொலிக்கின்றது அவர்களின் பேச்சும் செயலும் வெறுப்பூட்டுகின்றன அவர்களைத் தமிழர்களோ உண்மையை உணர்ந்த சிங்களவர்களோ மதிப்பதில்லை.

இப்படியான தமிழர்கள் சுயமரியாதை இல்லாதவர்கள் தீவிரவாதத்தின் தோல்வி என்ற வாதத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்ப பெண் ஒருவர் இலண்டனில் நடந்த புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கூட்டத்தில் அதை ஏற்க மறுத்தவர்களைப் பார்த்துப் பெருங் குரலில் பொருமி வெடித்தார்.

இந்தப் பெண்ணைப் போன்ற இன்னுமொருவர் இந்த வாதத்திற்கு அனுசரணையாக ஒரு வினோதமான விளக்கத்தை முன்வைக்கிறார். ஈழத்தமிழர்கள் மேற்கு நாடுகளில் குடியேறுவதைப் போல் சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் குடியேறலாம் தானே அவர் கேட்கிறார்.

சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கும் இராணுவ உதவியோடு குடியேற்றப் படுவதற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாதவர் போல் இவர் நடிக்கிறார் ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு இருப்பின் அவர்கள் தாம் விரும்பியவர்களை வரவேற்பார்கள் என்பது வேறு விடயம்

சில நாட்களுக்கு முன்பு பொருளாதார மற்றும் அரசியல் வரா சஞ்சிகையில் எதிர்வு கூறல்கள் அடங்கிய கட்டுரையை அகிலன் கதிர்காமர் எழுதியிருந்தார் யாழ்ப்பாணத்தில் அன்றொரு நாள் இயங்கிய இளைஞர் காங்கிரஸ் பற்றிய ஆய்வு நூல் எழுதிய சீலன் கதிர்காமரின் மகன் தான் அகிலன் கதிர்காமர்.

வரலாற்றாசிரியர் சீலன் கதிர்காமர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரியைச் சேர்ந்தவர் புலம்பெயர் தமிழர்கள் பகுதி பகுதியாகக் காலப்போக்கில் பிளவுபடுவார்கள் என்பது அகிலனின் எதிர்வு கூறல் இப்போது போல் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்த உறுதியான அமைப்பாக என்றும் இருக்க மாட்டார்கள் என்கிறார் அகிலன்.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒன்றிணைந்த பலம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்பதை அகிலன் கதிர்காமர் ஏற்கமறுக்கிறார். புலம்பெயர் தமிழர்கள் பலத்தைக் காட்டினால் அது ஈழத்தமிழர்களுக்கும் சிறிலங்காவின் ஐனநாயகக் கட்டமைப்பிற்கும் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அகிலன் கதிர்காமர்.

புலம்பெயர் ஈழத்தமிழர்களை தமது வலுவை வெளிகாட்டும் போது அதன் எதிர் விளைவாக சிறிலங்கா மென் மேலும் இராணுவ மயப்பட வாய்ப்புண்டு என்பது இன்னொரு எதிர்வு கூறல். தோல்வி நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் தமது வலுவை வெளிக் காட்டாமல் விட்டால் சிங்களவர்களுடைய அடக்கு முறைகள் தணியலாம் என்பது அகிலன் கதிர்காமரின் கேலிக்கிடமான கருத்து.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசின் போருக்கு ஆதரவு வழங்கியவர் இப்போது அதிருப்தி அடைந்திருப்பது போல் தெரிகிறது அவர் எழுதுகிறார் பல வீரம் மிக்க தமிழர்கள் விடுதலைப் புலிகளை எதிர்த்து நின்று உயிரிழந்திருக்கிறார்கள் இதை ராஜபக்ச அரசு உதாசீனம் செய்திருக்கிறது.

ஈழத்தமிழ் மக்களை அரசின் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்காக முன்னால் விடுதலைப் புலிகள் சிலரை அரசு பயன்படுத்தகிறது. தமிழர்கள் மத்தியில் ஒரு உறுதியான ஐனநாயகக் கட்டமைப்பும் தலைமைத்துவமும் உருவாவதை அரசின் நடவடிக்கை தடுக்கிறது.

இப்படியான ஐனநாயகத்தை தலைமைத்துவம் சுயமரியாதை இல்லாத சமூதாயத்தில் எப்படி எழும் என்று அவருக்குத் தெரியாது போலும் ஒன்றுபட்ட சிறிலங்கா பற்றிப் பேசுபவர்கள் சிங்கள அரசுகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்

தெற்கு ஆசியாவின் மிக நீண்ட காலமாக நிலவும் தேசியப் பிரச்சனை பற்றி பொருளாதார மற்றும் அரசியல் வார சஞ்சிகையின் நிலைபாடு என்ன என்பதை அகிலன் கதிர்காமரின் கட்டுரை தெளிவாக எடுத்து காட்டுகிறது

இந்தியப் புலனாய்வுத் துறை எழுத்தாளர் கேணல் ஹரி ஹரன் அகிலனின் எதிரொலி போல் கருத்துக்களைத் தெரிவிக்கிறார் கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை இந்த எழுத்தாளர் வானுயரப் பாராட்டியுள்ளார்.

கேபி ஒரு யதார்த்தவாதி என்றும் சாத்தியமானவற்றைப் புரிந்து கொண்டவர் என்றும் இந்தப் புலனாய்வுத்துறை எழுத்தாளர் மதிப்பீடு செய்துள்ளார் கிளர்ச்சி எதிர்ப்பு எழுத்தளரான பத்தரிகையாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்

கே.பி பற்றிக் கேணல் ஹரி ஹரன் ஒரு முக்கிய எதிர்வு கூறலை வெளியிட்டிருக்கிறார் நீதி மன்றத்தில் விடுதலைப் புலித் தலைவர்களை நிறுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களை அவரிடம் இருந்து கறந்த பின் அரசு அவருக்கு உயர்ந்த அரசியல் பதவியை 2011ல் வழங்குமாம் அரசு தரப்பு சாட்சியாக கூட கே.பி மாறலாம் என்றும் அவர் எதிர்வு கூறுகிறார்.

தடுப்பு காவலில் இருக்கும் கே.பியை ராஜபக்ச அரசு ஈழத்தமிழ் மக்கள் முன்னாள் ஆரவாரமாக நிறுத்துவதானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளின் பதவி அந்தஸ்தை ஆட்டங்காணச் செய்யும் ஆனால் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒற்றுமையை உடைப்பதற்கு கே.பி சிறந்த கருவி என்பதால் அரசைக் குறை கூற முடியாது என்கிறார் ஹரி ஹரன். உலகம் தழுவிய புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கான ஒன்றிணைந்த ஒற்றை அமைப்பு உருவானதை கே.பி ஏற்கனவே தடுத்து விட்டார் என்றும் அவர் எழுதியுள்ளார்

அகிலன் கதிர்காமரில் இருந்து ஒரு விடயத்தில் கேணல் ஹரி ஹரன் வேறு படுகிறார் தமிழீழம் என்ற இலட்சிய இலக்கில் இருந்து புலம்பெயர் தமிழர்களைப் பிரித்தெடுப்பது கடினமாக இருக்கும் என்பது அவருடைய மாறுபட்ட கருத்து

தமிழர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு தமிழீழம் ஒன்றே எமக்குரிய வழி என்று ஒரு சாரார் உறுதியாக நம்புகின்றனர் தமிழீழ விடுதலைப் புலிகள் தொன்றுவதற்கு முன்பே இவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தனர்.

வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் இவர்கள் பெரும்பான்மைச் சிங்களவர்கள் பற்றி மிகவும் ஆழமான சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றனர் இது தான் பிரிவினைக் கோரிக்கையின் ஊற்று. கே.பியின் இப்போதைய கூற்றுக்கள் அவர்களுடைய நிலைப்பாட்டை மாற்றப் போதுமானவையல்ல என்றாலும் சில வெடிப்புக்களை ஏற்படுத்த அவரால் முடியும்.

தமிழீழம் என்ற இலட்சிய நோக்கை முற்றாக மாற்ற வேண்டுமானால் அரசியல் தீர்வு அவசியம் தேவைப்படுகிறது கடந்த மூன்று தசாப்தங்களாக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் இதை வழங்கத் தவறியுள்ளான்.

இப்போது சிறிதளவு மாற்றம் கூடத் தென்படவில்லை அரைகுறைத் தீர்வான 13ம் திருத்தம் அமுலாக்கப்படாமல் பேச்சளவில் நிற்கின்றது என்று கேணல் ஹரி ஹரன் எழுதியுள்ளார். சிறிலங்காவின் றோகான் குணரத்தினா என்ற சர்வதேசப் புலனாய்வுத்துறை எழுத்தாளரும் ராஜபக்ச அரசின் ஆலோசகர்களில் ஒருவருமான கேணல் ஹரி ஹரனின் நண்பர் பல்லின நாடாகச் சிறிலங்கா அமைய வேண்டும் என்று விரும்புவதாகச் செய்தி அடிபடுகிறது.

றோகான் குணரத்தினா சிங்களப் பேரினவாதச் சிந்தனையாளர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் றோகான் குணரத்தினா மாறிவிட்டார் என்ற மகிழ்ச்சி தெரிவித்தன. உண்மையில் அப்படி ஒரு மாற்றமும் நிகழவில்லை.

ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதற்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற மேற்கு நாடுகளின் நிலைப்பாடு அரசின் வெற்றியால் தேவையற்றதாகி விட்டது என்று சென்ற வாரம் கொழம்பில் அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மீண்டும் தோன்றாமல் இருப்பதற்கு வடக்கு–கிழக்கில் நிரந்தர இராணுவ பிரசன்னம் அவசியம் என்றும் இந்த மாகாணங்களில் நடக்கும் மேம்பாடுகளிள் இராணுவத்தின் பொறுப்பில் விடப்பட வேண்டும் என்றும் றோகான் குணரத்தின கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொழும்பில் மையங் கொண்ட புலனாய்வுத்துறை நாட்டின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் தகவல் திரட்ட வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார். 13ம் திருத்தம் முழுப் படியாக அமுலாக்கப்படும் என்று ஈழத்தமிழர்கள் கனவு கூடக் காணக்கூடாது என்று ராஜபக்ச அரச அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவித்தனர்.

சீனா என்ற துருப்புச் சீட்டை பன்னெடுங்காலம் பயன்படுத்தலாம் என்ற தற்துணிச்சல் ராஜபக்ச அரசுக்கு உண்டு 13ம் திருத்தத்தை முழு அளவில் அமுலாக்கும் படி இந்தியா அழுத்தம் பிரயோகிக்கப் போவதில்லை சீனா பக்கம் சிறிலங்கா சாய்துவிடும் என்று இந்தியாவுக்குப் பயம்.

உண்மையில் ஈழத்தமிழர்களின் தோல்வித் துயரத்தைக் கூடுதலாக்கியவர்கள் புதுடில்லியும் சென்னையும் தான் எவ்வளவு விட்டுக் கொடுப்புக்களை இந்தியா செய்தாலும் ராஜபக்ச அரசின் இரட்சகர்களாக பங்காளிகளான அமெரிக்காவும் சீனாவும் தான் வரப்போகின்றன.

இந்தக் கருத்தை அண்மைக்கால அரசியல் நகர்வுகளின் அடிப்படையில் கணிப்பீடு செய்த கொழும்பில் நிலை கொண்டுள்ள அவதானிகள் தெரிவிக்கின்றனர் சென்ற வரா கார்டியன் பத்திரிகை ஞாயிறு இதலில் ஒரு நூல் ஆய்வரை பிரசுரமாகியுள்ளது அது அமெரிக்க – சீன கேந்திர பங்காளி கூட்டணி பற்றியது சீனா மீது கண் வைப்பதற்கு நாம் அமெரிக்காவை நம்பியிருக்க கூடாது தனது வங்கி போன்று செயற்படும் சீனா மீது அமெரிக்கா இறுக்கமாக இருக்க மாட்டாது.

இந்த கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் கூறுவதாக அந்த நூல் ஆய்வுரையில் கூறப்பட்டிருக்கிறது வடக்கு–கிழக்கில் பிரமாண்டமான இராணுவ முகாம்களை ஏன் சிறிலங்கா அரசு கட்டியெழுப்புகிறது என்று பலர் வியப்பாகக் கேட்கின்றனர் காரணங்களும் விளக்கங்களும் மிகவும் ஆழமானவை அகிலன் கதிர்காமர் நினைப்பது போல் இராணுவ முகாம்களுக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வலு வெளிக்காட்டலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை

சிறிலங்காத் தீவின் ஒரு பகுதியாவது தனது பக்கத்திற்குச் சார்பாக நிற்கவேண்டும் என்று இந்தியா விரும்பினால் அது சிறிலங்கா தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் ஐ.பி.கே.எப் தலைமுறையைச் சேர்ந்த கேணல் ஹரி ஹரன் போன்றவர்களுக்கும் இப்போதிருக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இது கடினமாக தோன்றலாம்

கடந்த 60 வருடகாலமாக ஈழத்தமிழர்களையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் இந்தியா மூலம் மிரட்டி தோல்வியின் எல்லைக்குத் தள்ள சிறிலங்காவால் முடியுமானால் ஏன் இவர்கள் மாற்று உபாயங்கள் பற்றிச் சிந்திக்கக் கூடாது பல தமிழர்கள் இப்படிச் சிந்திக்கத் தொடங்கி உள்ளதால் தமிழ் நாடு அவதானமாக இருத்தல் வேண்டும்

தமிழர்களக்குப் பலமான ஜனநாயக அரசியல் தேவைப்படுகிறது அதில் பலதர அபிப்பிராயங்கள் இருக்கலாம் ஆனால் தேசியப் பிரச்சனை என்று வரும்போது எல்லோரும் ஒரே கோட்டில் நிற்க வேண்டும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தோல்வி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும் இது வலுமிக்க சக்தியாக உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை முன்னர் எப்போதும் இல்லாத பலமாக அது திகழும்.

தேசிய பிரச்சனை தொடர்பாக மாத்திரமல்ல விடுதலைப் வேட்கைக்கு உந்து சக்தியாகவும் தமிழர்களின் வலு இடம்பெறும். சிறிலங்கா தான் சிங்கள மக்களுக்குரிய ஒரே வாழ்விடம் என்பதைக் தமிழர்கள் நன்கு அறிவார்கள் சிங்கள பண்பாட்டு விழுமியங்கள் இந்தத் தீவில் செழித்தோங்கி உள்ளதையும் அதற்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டிய அவசியத்தையும் தமிழர்கள் நன்கு அறிவார்கள்

சிங்களவர்களின் நிலத்தைத் தரும்படி தமிழர்கள் கேட்கவில்லை அவர்கள் தங்களுக்குரிய நிலத்தைத் தான் கேட்கிறார்கள். உலகில் ஈழத்தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலம் தமிழீழம் ஒன்றுதான் இதை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் தான் எமது தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்

ஆசிரியர் குழு -தமிழ்நெற்
தமிழாக்கம் – க. வீமன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*