TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரனின் மரணமும் திருநாவுக்கரசின் பேட்டியும் தரும் சந்தேகங்கள்

விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசு உயிருடன் தப்பினார் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஊடகங்களூடாக மிகத்தெளிவாகவும் உகந்த ஆழ அகல ஆய்வுகளுடனும் விடுதலைப் புலிகளின் நிலைப் பாட்டை மக்களுக்கு விளக்கியவர் இவர். மற்ற ஒரு சிறந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டார்.

திருநாவுக்கரசு ஜுனியர் விகடனுக்கு சொன்னவற்றில் சில:

எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில்(பிரபாகரனிடத்தில்) இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.

சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம்.

கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது.

அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு (”பிரபாகரனின் நிலை என்ன ஆனது?”) யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!

”பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?”

”அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது.

பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார்.

போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவத னியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் ‘மதிவதனி வெளியேறக் கூடாது…’ என உறுதியாக அறி வித்து விட்டார் பிரபாகரன். ‘மக்கள் வேறு… குடும்பத்தினர் வேறு…’ என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை.

பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடி யில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!(உண்மையில்லை)

திருநாவுக்கரசு அவர்களால் எப்படித் தப்பிக்கமுடிந்தது?

பலத்த கெடுபிடிகளின் மத்தியில் இருக்கும் வன்னி முகாமில் இருந்து திருநாவுக்கரசு அவர்களால் எப்படித் தப்பிக்க முடிந்தது? இவருக்கு யார் உதவிசெய்தார்கள்? முகாம்களில் இருப்பவர்களை சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்கள் பணம் வாங்கிக்கொண்டு தப்பிச் செல்ல உதவுவதாக கதைகள் அடிபடுகின்றன! இவருக்கு அப்படி யாராவது உதவியிருக்கலாம். அல்லது அப்படிப்பட்டவர்கள் யாராவது இவருக்கு நெருங்கிய உற்வினராயிருக்கலாம்! இவற்றைவிட இவரை எஞ்சியுள்ள புலிகளிக்கு எதிராகப் பயன் படுத்த யாரவது முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஏற்படவாய்ப்புண்டு! ஆனால் விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ எந்தவித களங்கமும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் பேட்டியளிக்கவில்லை. இந்த நிலை தொடரும் என நம்புவோமாக. ஆனால் ஒரு நியாயமான சந்தேகம் இங்குண்டு: தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த இவரை ஏன் இந்திய அரசு கைது செய்யவில்லை? இதற்கான விடைக்கு நாம் பொறுத்திருக்க வேண்டும்.

அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது. இப்படி திருநாவுக்கரசு சொல்லும் போது வெளிநாட்டில் இருப்பவர்களால் எப்படி பிரபாகரனின் மரணத்தைப் பற்றிக் கூறமுடிகிறது?

பேட்டியில் முரண்பாடு
வழமையில் தெளிவாக எல்லாவற்றையும் ஊடகங்கள் மூலமா மக்களுக்கு விளக்கும் திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய பேட்டியில் ஏன் முரண்பாடுகள் இருக்கிறது என்ற சந்தேகம் பின்னுள்ள இரு வாசகங்களைப் பார்த்தவுடன் ஏற்படுகிறது:

1. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம்.

2. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக… அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர்.
இருகருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன.

‘திருநாவுக்கரசுகூறியது: “போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந் தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந் தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங் கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை.”
இக்கூற்றில் கணக்கு உதைக்கிறது! 5000 புலிகளுக்கு என்ன நடந்தது? அது மட்டுமல்ல திருநாவுக்கரசு இங்கு காட்டிக் கொடுத்துவிட்டார். சனிக்கிழமை இப்பேட்டி வெளிவந்தது. வெளிவந்த சில மணித்தியாலங்களில் இலங்கை விமானப் படை காட்டுப் பகுதிகளில் குண்டுகள் வீசின. இவர் 2000 புலிகளை காட்டிக் கொடுத்துவிட்டார். பேட்டியின் இப்பகுதியைத் தவிர்த்திருக்கலாம்.

நல்லவர்கள் நல்லவர்களாகவே இருந்தால் நல்லது.

Related Posts Plugin for WordPress, Blogger...
 • kavi says:

  Hi All,
  I hope you all guys can do a lots of things to our future struggle.
  We need actions now. RAW is definitely working for their part. Jagath Kaspar may be a RAW guy. He has links with Kanimozi, I heard. Thiru may be a RAW too.

  But do not waste time on argue on that. I propose 2 action plans for you to consider.

  1. SL Economy:
  Buy SL garment products and return them saying “we do not buy SL products” or “SL products are law quality”. This will help business people think against SL products. This will apply to SL Tea products too.

  2. SL Tourism
  Upload you tube videos which contain Tamils issue and use ‘tag’ as sri lanka tourism/ sri lanka visit / trip etc. Block and flag SL tourism videos. If we do it collectively the above 2, it will bring a great number of success.
  (you can create videos using ‘windows movie maker’ / power point) e.g.

  3. In 2011 India / SL will hold cricket world cup. Pakistan is expelled by ICC. So, many Pak ‘cricket lovers’ are so angry about ICC’s decision. They are openly saying, if SL can host it we too.
  We can use that. Create a pettition or website to collect signatures from ‘cricket fans’, to stop having World Cup in SL. Or ask ICC to keep it in Pakistan as well. That will bring down SL’s image similar to Pak. We have example like 14 journalist killed in Colombo area within 3 years. So, cricket reporters mey need safety…

  Good Luck.
  [email protected]

  Please reply me…. we can act more..

  July 22, 2009 at 08:25

Your email address will not be published. Required fields are marked *

*