TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நயன், பிரபு மேட்டர் உண்மையா?


நேற்றுத் தெலுங்குப் படவுலகமே பரபரப்பில் இருந்த்து. நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதுதான் பரபரப்புக்கு காரணம். தெலுங்கின் முன்னணி சேனல்களில் பிளாஷ் நியூசாகவே ஓடியது இந்தச் செய்தி. அவ்வளவுதான்… நயன்தாராவின் செல்போனையும், பிரபுதேவா வின் செல்போனையும் விடாமல் துரத்தினார்கள் நிருபர்கள். ஆனால், தொடர்ந்து செல்போன் ஆஃப் ஆகியே இருந்தது.

லேட்டஸ்ட்டாக கொடுத்த பேட்டி ஒன்றில், “இது என் பர்சனல் விஷயம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்று நயன்தாரா பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார் பிரபுதேவா. கடைசியாக பிரபுதேவாவைப் பேட்டியெடுத்த அந்த நண்பரின் செல்போனையும் விடாமல் துரத்தின போன் கால்கள். ஆந்திரா, பெங்களூருவில் இருந்தெல்லாம் எப்படியோ இவரது நம்பரைத் தொடர்பு கொண்டார்களாம். எப்படியாவது பிரபுதேவாவுக்கு போன் பண்ணி விளக்கம் கேட்டுவைங்க. திரும்ப போன் பண்றோம் என்றார்கள் எல்லோரும்.

ஆனால் நண்பர் பிரபுதேவாவைத் தொடர்புகொண்டு இது தொடர்பாகக் கேட்கவே இல்லை. ஏன்? பேட்டியை முடித்துவிட்டுக் கிளம்பும்போது “நயன்தாரா தொடர்பான அந்த கேள்வியையும் நான் சொன்ன பதிலையும் போடாம விட்ருங்க” என்றாராம் பிரபுதேவா. ஆனால் இவர் செய்த முதல் வேலை, அதையே தலைப்பாகப் போட்டதுதான். பிறகு எந்த தைரியத்தில் பிரபுதேவாவுக்கு போன் செய்வார்?

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*