TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புதிய இராணுவத்தளபதி நியமனம் மரபுக்கு மாறாக எடுக்கப்பட்ட முடிவு

இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பில் கடந்தவாரம் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற சட்டபூர்வ அதிகாரம் மிக்க பதவியை ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்றிருக்கிறார். ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றிருக்கிறார் அட்மிரல் வசந்த கரன்னகொட.

இலங்கை இராணுவத்தின் 19ஆவது தளபதியாக லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூய பதவியேற்றுள்ளார். இலங்கைக் கடற்படையின் 16 ஆவது தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார் வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க. இதைவிட, இராணுவத் தலைமை அதிரிகாயாக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஐவருக்குமான நியமனங்களையும் கடந்த ஞாயிறன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

கடந்த 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. திங்கட்கிழமை காலை கெய்ரோ செல்லவிருந்ததால் முன்கூட்டியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார். கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா 15 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் புதிதாக செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பு மாற்றங்கள் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது உண்மை.

காரணம், இந்த மாற்றங்களில் சில எதிர்பார்க்கப்பட்டவை. சில எதிர்பார்க்கப்படாதவை. நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் மரபுகளுக்கு முரணான சில எதிர்பாராத முடிவுகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பகஷ எடுத்திருந்தார். ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டதும், கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க நியமிக்கப்பட்டதும் முன்னரே எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் தான்.

ஆனால், இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டதும், இராணுவத் தளபதியாக நியமிக்கப்படலாம் என பலமாக எதிர்பார்க்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதும் சற்றும் எதிர்பார்க்கப்படாத விடயங்கள். கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட 55 வயதைப் பூர்த்தி செய்வதால் அடுத்த கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் திசார சமரசிங்கவை நியமிக்கும் பத்திரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 30 ஆம் திகதியே ஒப்பமிட்டிருந்தார்.

அத்துடன் கடந்த 15 ஆம் திகதியுடன் எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேராவும் ஓய்வு பெறுவதாக இருந்ததால் இந்த மாற்றங்களை அன்றைய தினத்தில் இருந்தே நடைறைப் படுத்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

ஓக்ரோபர் 10 ஆம் திகதி இராணுவத்தின் வைர விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பற்றியதே அந்த கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தபோது தான் மறுநாள் காலையில் ஜனாதிபதி செயலகத்தில் புதிய பதவிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மறுநாள் ஞாயிறு காலையில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா, அட்மிரல் வசந்த கரன்ன கொட, லெப்.ஜெனரல் ஜகத் ஜயரிசூய, வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோர் கடந்த 15 ஆம் திகதி தமது புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மட்டும் இரண்டு நாட்கள் தாமதமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். பரந்தளவிலான அதிகாரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகாகளின் பிரதானியாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நேரடியாகக் கட்டுப்படும் அதிகாரியாக இருப்பார். கடந்த 15ஆம் திகதி சுபநேரமான காலை 11.17இற்கு கூட்டுப்படைத் தலைமையகத்தில் இவர் தமது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கான புதிய அலுவலகம் பாதுகாப்பு அமைச்சுக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் அமைக்கப்படவுள்ளது. இவரது தலைமையகத்தில் ஏழு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் (மேஜர் ஜெனரல் கள் மற்றும் பிகேடியர்கள்) கடற்படை தரப்பில் றியர் அட்மிரல் தர அதிகாரி ஒருவரும், விமானப்படையைச் சேர்ந்த எயர்வைஸ் மார்ஷல் தர அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுடன் 300 பேர் கொண்ட ஆளணி இவரது அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாகளின் பிரதானியின் கீழ் செயற்படும் வகையில் தனியானதொரு புலனாய்வு அமைப்பையும் ஜெனரல் சரத் பொன்சேகா உருவாக்கவுள்ளார். இது வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாடு ழுவதிலும் செயற்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. சிரேஷ்ட இராணுவ அதிகாகளான மேஜர் ஜெனரல் எல்.ஏ.டி.அமரதுங்க, இராணுவத் தலைமையகத்தில் திட்டமிடல் பணிப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, முன்னாள் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, இராணுவ செயலாளரான பிரிகேடியர் பதுமதாஸ, 55 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா, 23ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் டம்பத் பெர்னான்டோ, ஆயுதப்படைகளின் புலனாய்வுப் பிவு பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கருணாசேகர ஆகியோர் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

பிரிகேடியர் மைத்தி டயஸ் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் இராணுவ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூய இந்த நியமனத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் சேவை மூப்பு அடிப்படையில் பின்னால் இருந்தவர். வயதிலும் குறைந்தவர். இராணுவத்தின் மரபுப்படி சேவை மூப்பு அடிப்படையில் தான் இராணுவத் தளபதி ஒருவர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் மரபுக்கு முற்றிலும் முரணான வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் 60வருட வரலாற்றில் முதல் தடவையாக பிராந்தியப் படைத் தலைமையக அதிகாரி ஒருவர் நேரடியாகவே இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். வழக்கத்தில் தொண்டர் படைகளின் தளபதி, இராணுவத் தலைமை அதிகாரி, பிரதித் தலைமை அதிகாரி பதவிகளை வகித்த ஒருவரே இந்தப் பதவியைப் பெறுவார். ஆனால் இத்தகைய பதவிகள் எதையும் வகிக்காத ஒருவர் முதல்முறையாக இராணுவத் தளபதியாகியிருக்கிறார். இதற்கு முன்னர் கடற்படையில் இது போன்றதொரு மரபுக்கு மாறான நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.

கடற்படைத் தலைமை அதிகாயாக வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இருந்தபோதும் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு தளபதி பதவியைக் கொடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த. இதைவிட, யாழ்.படைகளின் தளபதியாகப் பதவி வகித்தவர்களே கடந்த 30 வருடங்களாக இராணுவத் தளபதியாகப் பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால் யாழ்.படைகளின் தளபதியாகப் பதவி வகிக்காத ஒருவர் முதல் முறையாக இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சேவைப்பு அடிப்படையில் இவர் ஒன்பதாவது இடத்தில் தான் இருந்தார். ஆனால் அவர் இப்போது முதலிடத்துக்கு வந்திருப்பது தான் ஆச்சயம். இராணுவ சேவை மூப்பு அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அடுத்த நிலையில் தொண்டர் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் பாலசூய இருந்தார். அவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா, மேஜர் ஜெனரல் என்.ஏ.ரணசிங்க, மேஜர் ஜெனரல் யு.ஆர்.சில்வா, மேஜர் ஜெனரல் அலுவிகார, மேஜர் ஜெனரல் வசந்தகுமார ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் அனைவருமே 2010 ஆம் டிசம்பருக்கு முன்னர் 55 வயதைப் பூர்த்தி செய்து ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்கள். ஆனால் 2014 ஜனவ 02ஆம் திகதியே 55 வயதைப் பூர்த்தி செய்யும் லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூயவுக்கே இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டிருக்கிறது. எட்டு மூத்த அதிகாகள் இருக்கத்தக்கதாக இவர் பதவிக்கு வந்திருப்பினும் அவர்களில் சிலர் இராணுவத் தளபதி பதவிக்கு வரமுடியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இராணுவத்தில் காலாற்படை, கவசப்படை, ஆட்டிலெறி, பொறியியல் படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக் கிடைக்கும். சேவைப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உயர்பதவிக்கு வரமுடியாது. புதிய இராணுவத் தளபதியின் நியமனத்தில் திறமை, போர்க்களச் செயற்பாடுகளுக்கே முன்னுமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தில் 30 வருடங்கள் பணியாற்றிய இவர் 50 ஆவது வயதிலேயே இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வயதில் குறைந்த இராணுவத் தளபதியாகவும் இவர் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் ஒன்றுக்குப் பலமுறை சேவை நீடிப்புப் பெற்றுதள்ளாடிக் கொண்டிருந்த இராணுவத் தளபதிகளின் மத்தியில் வயதில் இளையவரான லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்தப் பதவியைப் பொறுப்பேற்றிருக்கிறார். சீனாவில் சிரேஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கான பயிற்சியை முடித்து விட்டு 2007 ஜூலையில் நாடு திரும்பியதும் இவர் வன்னிப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வரும் வரையில் வன்னிப் போர்க்களத்தில் மிகத் திறமையாகப் பணியாற்றியதாக அரசாங்க மற்றும் பாதுகாப்பு மட்டங்களில் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

அதேவேளை, கடற்படையின் 16 ஆவது தளபதியாக பொறுப்பேற்றிருக்கும் வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க ஓய்வுபெற சில நாட்களே இருந்தபோது தான் புதிய பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 55வயதை அடைந்துள்ள அவருக்கு ஒரு வருட சேவை நீடிப்புடன் இந்த நியமனத்தைக் கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இவரும் கடற்படையில் மிகவும் முக்கியமானதொரு அதிகாரியாக இருந்தவர். புலிகள் பூநகயில் இருந்து காங்கேசன்துறை நோக்கி ஆட்டிலறி ஷெல் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த போது “ஜெட் லைனர்’ துருப்புக்காவியில் இருந்து 3000 படையினரையும், பொருட்களையும் 15 நிமிடத்தில் ஏற்றி இறக்குவதற்கான திட்டத்தை வகுத்து பெரும் பாராட்டைப் பெற்றவர்.

2006, 2008 காலப்பகுதியில் புலிகளின் ஆயுதக் கப்பல்களை கடற்படை மூழ்கடித்த போது கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்து வழிநடத்தியவர். 1985இல் கடற்படைக்கு முதன் முதலாக இரண்டு டோறா பீரங்கிப்படகுகள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட போது அதில் ஒன்றின் கட்டளை அதிகாயாகப் பணியாற்றியவர். இவர் கடற்படையை 50வருட திட்டத்தின் அடிப்படையில் நவீன மயப்படுத்தும் புதிய திட்டங்கள் பலவற்றைக் கொண்டிருப்பதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

அடுத்து, இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு இருப்பவராகக் கருதப்பட்ட மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி வடமாகாண ஆளுநராக நியமிக்கபட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் இவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அத்துடன் இராணுவ சேவை மூப்பு வசைப்படி இவர் மூன்றாவது இடத்திலும் இருந்தவர். அதனால் இவர் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. கடந்த ஜனவரியில் ஓய்வு பெற வேண்டிய நிலையில் இருந்த இவர் ஒரு வருடசேவை நீடிப்பைப் பெற்றிருந்தார்.

ஆனால் இராணுவ சேவையில் இருந்து ஆளுநராக மாற்றப்பட்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பதவியேற்றதை அடுத்து இராணுவக் கட்டமைப்பில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார். இந்த மாற்றங்களின் அடிப்படையில் வடக்கில் போர்னையில் பணியாற்றிய தளபதிகளுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க நாளை இராணுவத் தலைமை அதிகாயாகப் பொறுப்பற்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாகவும் இயங்குவார். தற்போது தொண்டர் படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரிய இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இராணுவத் தலைமையக பதில் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் அனுர ஜெயதிலக எதிர்வரும் 22ம் திகதி பதவியேற்பார். இந்தப் பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் ஜெயநாத் பெரேரா விரைவில் பயிற்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளதால் இராணுவத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாகளுக்கான பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி சில்வா யாழ்.படைகளின் தளபதியாக 23ம் திகதி பொறுப்பேற்பார். மேஜர் ஜெனரல் ஏ.எம்.பெரேரா பொது அதிகாகளுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் சகீர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதம அதிகாயாக இருப்பார். 53வது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண வன்னிப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 59வது டிவிசன் தளபதி பிரிகேடியர் சாஜி கல்லகே 53வது டிவிசன் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

58வது டிவிசன் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா இராணுவத் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். 51வது டிவிசன் தளபதி பிரிகேடியர் ஜெயசுந்தர திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 58வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் பி.ஏ.பெரேராவும், 59வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலனவும், 51வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் எம்.கே.டி. பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதம சமிக்ஞை அதிகாரி பிரிகேடியர் மீடின் கூட்டு நடவடிக்கைத் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தற்போது பாதுகாப்பு அமைச்சில் வகிக்கும் ஆயுவு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பிரதம கட்டுப்பாட்டாளர் பதவியுடன், பிரதம சமிக்ஞை அதிகாயாகவும் பணியாற்றுவார். இராணுவப் பொலிஸ் பிரிவு தளபதியாக பிரிகேடியர் வீரசிங்கவும், பிரிகேடியர் குலதுங்க தியத்தலாவ இராணுவ அக்கடமி பணிப்பாளராகவும், கொழும்பு நடவடிக்கைத் தளபதியாக கேணல் ஜெயசேகரவும், யாழ்.நகர படைத் தளபதியாக கேணல் குலதுங்கவும், கொழும்பு 112வது பிரிகேட் தளபதியாக கேணல் வீரசூயவும், 552 பிரிகேட் தளபதியாக கேணல் காயப்பெருமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுபத்திரா

நன்றி: வீரகேசரி (19.07.2009)

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*