TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்

உயர்பாதுகாப்பு வலயங்கள் பற்றிய சர்ச்சை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகப் போகிறது. ஆனாலும் இந்தப் பிரச்சினை இன்னமும் முடிவின்றி இழுபறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் விழுங்கி வைத்துள்ள வளமான நிலப்பரப்புகளே தமிழ்மக்களின் பெரும் சொத்து. குறிப்பாக வலிகாமம் வடக்குப் பகுதியானது விவசாய, மீன்பிடி வளம்மிக்கது. இந்த வளம்மிக்க நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயமாக மாறி இரண்டு தசாப்தங்களாகி விட்டன.

* 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னர் உயர்பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியமர்வை மேற்கொள்வதற்கான அவசியம் பற்றி புலிகளால் வலியுறுத்தப்பட்டது. அப்போது அதுபற்றி ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இராணுவ அதிகாரிகள் மற்றும் புலிகள் தரப்பு இணைந்த குழு நியமிக்கப்பட்டது. வடக்கில் அந்தக் குழுவுக்கு அப்போது தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா, உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது என்று முரண்டு பிடித்தார். உயர்பாதுகாப்பு வலயங்களக்கும் புலிகளின் நீண்டதூரப் பீரங்கிகளுக்கும் முடிச்சுப் போட்டு, அந்த விவகாரத்தை சிக்கலாக்கி விட்டார். அதனால் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நம்பிக்கையீனம் தோன்றியது. இது கூட சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனதற்கு ஒரு காரணம். அதே ஜெனரல் சரத் பொன்சேகா இப்போது அரசியல்வாதியாகிய பின்னர் சொல்கிறார்’’ போர் முடிந்து விட்டது. இனி உயர்பாதுகாப்பு வலயங்கள் எதுவும் தேவையில்லை. அகற்றுங்கள்’’ என்று. ஒருவேளை, அவர் ஆட்சியில் அமர்ந்திருந்தால் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது என்று கூறியிருக்கலாம்.

ஆக, வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் என்பது ஒரு அரசியல் விவகாரமாக மாறியுள்ளதே தவிர, அது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு என்ற சொல்லாடலுக்குள் நின்று கொண்டு இலங்கை அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு நியாயம் கற்பிக்கப் பார்க்கிறது என்பதே உண்மை.

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்களை மீளக்குடியமர அனுமதிக்க வேண்டும் என்று கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரிதத உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது என்று கூறியிருக்கிறது.

’’வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். அவற்றை விலக்கிக் கொள்ள முடியாது வடக்கில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் அரச காணிகள் இல்லாததால், தனியார் காணிகளை சுவீகரிக்கும் உரிமை அரசுக்கு இருக்கிறது. அந்தக் காணி உரிமையாளர்கள் கோரினால் நட்டஈடு வழங்கலாம்’’ என்று கூறியிருக்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. இது அமைச்சரவைத் தீர்மானம் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் அமைச்சரவையில் அப்படியொரு தீர்மானம் எடுக்கப்படவேயில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கிளிநொச்சியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்லது கொழும்பில் நடந்த கூட்டத்திலோ அப்படியான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவிலலை என்பது வெளிப்படை. அதற்குச் சாட்சியாக இருப்பவர் அரசாங்கத்தின் இன்னொரு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா. அப்படியானால் அரசாங்கம் இந்த விடயத்தில் எதற்காக குழப்பமான தகவலை வெளியிடுகிறது என்ற கேள்வி எழுகிறது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தன்னிச்சையாக இதைக் கூறியுள்ளார் என்று கருதவும் முடியாது. ஏனென்றால் அவரது கருத்து வெளியாகி சர்ச்சையாக உருவெடுத்து ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது.

சுபத்ரா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Bharathier says:

    Mary Robinson, former Irish President and former UN High Commissioner for Human Rights said:

    “The EU’s suspension of Sri Lanka’s GSP Plus scheme is the right approach, but it’s not enough. Sustained pressure is necessary, not only to protect human rights in Sri Lanka, but to protect the rights of people everywhere. It is not just governments who can help improve the situation – anyone doing business in Sri Lanka or going there on holiday should also try to make choices that will help all its citizens to a more equitable and prosperous future.”

    August 3, 2010 at 23:11

Your email address will not be published. Required fields are marked *

*