TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் (ஒலி இணைப்பு)

தமிழீழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி ஈழத்தமிழன் சுப்ரமணியம் பரமேஸ்வரன் லண்டனில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது அவர் உணவு உட்கொண்டிருந்தார் என்று அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் இரண்டு வெளியிட்ட செய்திக்கு எதிரான பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வெற்றியீட்டியுள்ளது. பிழையான செய்தியை பிரசுரித்த இரண்டு பத்திரிகைகளும் 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸை பரமேஸ்வரனுக்கு நட்ட ஈடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற கோரப்போரை உடன் நிறுத்துமாறு அப்பாவி பொதுமக்களின் சாவை உடன் நிறுத்துமாறும் கோரி பரமேஸ்வரன் கடந்த ஆண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். அவரது போராட்டம் 23 நாட்களின் பின்னர் அந்நாட்டு அதிகாரிகளின் உறுதிமொழிகளை அடுத்து முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், அவர் ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சுகமடைந்தார்.

அவர் மேற்கொண்ட இந்த உண்ணாவிரதப்போராட்டத்தின்போது யாருக்கும் தெரியாமல் பரமேஸ்வரன் “மக் டொனால்ட்ஸ் பேர்கர்” உட்கொண்டார் என்று லண்டனின் பிரபல பத்திரிகைகளான “சன்” மற்றும் ” டெய்லி மெய்ல்” ஆகியவை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. பரமேஸ்வரன் இவ்வாறு பேர்கர் உட்கொண்டமை படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகைகள் எழுதியிருந்தன.

இதனை அடுத்து, தனது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் செய்திவெளியிட்ட இரண்டு பத்திரிகைகளுக்கும் எதிராக பரமேஸ்வரன் லண்டன் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பின்போது நீதிபதி டேவிட் ஈடி தெரிவிக்கையில் – தனது போராட்டத்தின் நியாயத்தன்மையை நீதிபதியை நாடியுள்ள பரமேஸ்வரன் தனது உண்ணாவிரதத்தின்போது எந்த உணவையும் உட்கொள்ளவில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்று, அவருக்கு ஏற்படுத்திய அபகீர்த்திக்காக 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை நட்டஈடாக செலுத்துவதற்கு எதிர்த்தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.

குறிப்பிட்ட பத்திரிகைகள் பிழையான செய்தியை வெளியிட்டதால் பரமேஸ்வரன் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். உலகெங்குமுள்ள தமிழர்களின் கண்களின் முன் ஒரு சந்தேகநபராக பார்க்கப்பட்டிருக்கிறார். இவற்றுக்கு எல்லாம் காரணமாகிய குறிப்பிட்ட பத்திரிகைகள் அதற்குரிய நட்டஈட்டை செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பரமேஸ்வரன் தெரிவிக்கையில், லண்டன் பத்திரிகைகள் குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட பின்னர் தனக்கு மிகுந்த விரக்தி ஏற்பட்டதாகவும் தனது போராட்டத்தை கொச்சைப்படுத்தியதால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட எண்ணியதாகவும் உலகெங்குமிருந்து பலர் தனது கைத்தொலைபேசிக்கு பரமேஸ்வரனை கொல்லுங்கள், பரமேஸ்வரன் துரோகி என்றெல்லாம் குறுந்தகவல்கள் அனுப்பினர். பலர் கொலைமிரட்டல் விடுத்தனர் என்றும் கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*