TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு” பிரபாகரன் படத்தினைப் பார்த்தால் சாவுபயம் வராது

திருமாவின் கல்யாணமும்… பிரபாகரனின் கனவும்…!

நொந்தே இறந்த தொல்காப்பியன்!’

‘உன்னை பெத்ததுக்காக எல்லா விதத்திலயும் பூரிச்சுப் போயிட்டேன். உன் மூலமா ஒரு பேரப் புள்ளைய பார்க்காதது மட்டும்தான் பாரமா இருக்கு.நீ மாலையும் கழுத்துமா நிக்கிறதைப் பார்த்திட்டா, நிம்மதியா கண்ணை மூடிடுவேன்…” மரணத்தை தன் தலைமாட்டில் நிறுத்தி வைத்திருந்த முதியவர் தொல்காப்பியன், கால் மாட்டில் கலங்கி நின்ற மகன் திருமாவளவனிடம் கலங்கிச் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை.

கடந்த சில வருடங்களாகவே பெற்றோர் இதை வற்புறுத்தி வந்தபோதும், ‘பொது வாழ்க்கையில் இத்தனை தூரம் வந்துவிட்ட பிறகு, இனி திருமணம் சரிப்படுமா?’ என்ற யோசனையிலேயே இருந்துவிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தந்தையின் உடல்நிலை மிகுந்த கவலைக்கிடமாக…

திருமாவுக்கு அவசரகதியில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. ‘நாட்டு நடப்பு நல்லாத் தெரிஞ்ச, சமூக உணர்வுமிக்க பெண்ணா இருக்கணும். அதுதான் முக்கியம்!’ என திருமாவும் வேறு வழியின்றி திருமணத்துக்குச் சம்மதித்திருந்தார். உறவு வழி மட்டுமின்றி, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட திசைகளிலும் தீவிரப் பெண் தேடுதல் நடந்தது.

இந்நிலையில்தான், தன் இறுதி விருப்பம் நிறைவேறாமலே கடந்த 15-ம் தேதி தொல்காப்பியன் கண் மூடிவிட்டார்.இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நாம் பார்த்தபோது, நம்மிடம் திக்கித் திணறி அவர் பேசிய அத்தனை பேச்சும் ஈழம் குறித்துத்தான். ”சின்னப் புள்ளைங்களோட மணல் வீட்டை உடைக்கிற மாதிரி பிரபாகரனோட கனவு தேசத்தை உடைச்சிட்டாங்களேப்பா… நான் நாலெழுத்துப் படிக்காதவன்தான்.

ஆனா, இனப் பற்றுள்ள ஒரு மனுஷனா சொல்றேன். பிரபாகரன் மாதிரி ஒரு வீரத் தலைவனை இந்த உலகம் இனி பார்க்கவே முடியாதுப்பா.

‘என்னை ஒரு தடவையாவது அந்த மண்ணுக்கு அழைச்சுட்டுப் போ’ அப்படினு என் மகன்கிட்ட கேட்டேன். போர் தொடங்கிட்டதால் அங்கே போறது சாத்தியம் இல்லாமல் போயிடிச்சு. இந்த அப்பனோட ஆசையை நிறைவேத்துறதுக்காக எம்.பி-க்கள் குழுவில் ஈழத்துக்குப் போன திருமாவளவன், எனக்காக பிரபாகரன் காலடிபட்டு வளர்ந்த வீட்டோட வாசல் மண்ணை அள்ளிகிட்டு வந்தாப்பல..! அந்த மண்ணைத் தொட்டுப் பார்க்கிறப்ப எல்லாம் நம்மை மாதிரி தமிழர்களோட ரத்தமும் சதையும்தான்யா கண்ணில் தெரியுது. நம்ம கண்ணு முன்னாலேயே நம்ம சனத்தை அழிச்சிட்டாங்களே… இவ்வளவு பெரிய கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த நம்மளை நாளைக்கு நம்ம பேரப் புள்ளைகளே காறித் துப்பாதா?” என உணர்வு தெறிக்கச் சொன்னவர், ”எந்த நேரமும் எனக்கு சாவு வரலாம்.

அதனாலதான் சட்டைப் பையிலேயே பிரபாகரன் படத்தை வெச்சிருக்கேன். நான் கண்ணை மூடுறப்ப கடைசியா பார்க்குறது அவர் முகமாத்தான் இருக்கணும்!” என்றபடி, சட்டைப் பையில் வைத்திருந்த பிரபாகரன் படத்தை எடுத்து முத்தமிட்டு அழுதார்.இறுதி ஊர்வலத்தில் இருந்த திருமாவும் இதை நம்மிடம் நினைவூட்டி, ”கடைசிக் காலத்தில் பேசவோ சாப்பிடவோ முடியாமல் அவர் ரொம்ப அவஸ்தைப்பட்டுட்டார். ‘பிரபாகரன் படத்தை பார்த்தா சாவு பயம் வராதுப்பா…’ன்னு அவர் சொன்னப்ப நான் ஆடிப்போயிட்டேன். கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுங்கிறது என் உறுதியான கொள்கை.

அதனாலேயே அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போயிடிச்சு…” – இயலாமையில் துடிக்கிறது திருமாவின் குரல்.

இரா.சரவணன்
நன்றி விகடன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
 • Nathan says:

  still people comment like this…hypos…

  July 23, 2010 at 03:10
 • santan says:

  poda loosu unakku ennada therium prabakaranai patri. naiye.

  July 23, 2010 at 09:40
 • Roshan says:

  wat u mean by stil people coment like this. oru tamil apanuku piranthuru iruntha theriyum mr nathan.pala appa irukira akelaku itha patti theriyathu.Pirabakaran alwaz b our leader for all tamil people around da world. தமிழர்களின் தாகம் தமிழ் ஈழம் தாயகம்

  July 24, 2010 at 03:12

Your email address will not be published. Required fields are marked *

*