TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நடிகர் திலகம் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம்

நடிப்பிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு சிறந்த நடிகர்கள் அரசியலுக்குள் நுளைந்து கலக்குக் கலக்கி வருகிறார்கள் நடிப்புத் தொழிற் பின்னணி இல்லாத அரசியல் வாதிகள் காலப் போக்கில் சிறந்த நடிகர்களாக மாறிவிடுகிறார்கள்.

விமல் வீரவன்ச என்ற சிறிலங்கா அமைச்சர் அண்மைக் காலமாக முன்னணி நடிகராக வளர்ச்சி அடைந்துள்ளார் அவர் ஜே.வி.பி கட்சியில் ஒரு கடைநிலை உறுப்பினராக இருந்தார் கல்வி அறிவு இல்லாதவர் என்பதால் அவருக்கு சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற பணிகள் வழங்கப்பட்டன.

என்றாலும் முன்னுக்கு வரவேண்டும் என்ற பேராசை அவர் மனதில் எழுச்சி பெற்றிருந்தது. ஜே.வி.பியின் மேடைப் பேச்சாளராக அவர் படிப்படியாக முன்னேறினார் வேலையற்ற கிராமப்புற இளைஞர்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஜே.வி.பி தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கட்சியாக மாறிவிட்டது.

விமல் வீரவன்ச நடிகர்களின் பாணியில் விலையுயர்ந்த முடி திருத்தகங்களில் தனது தலை முடியை திருத்தம் செய்து தன்னை அழகுபடுத்திக் கொண்டார் நாடியில் குறுந்தாடியையும் நன்கு செப்பனிட்டு வளர்த்தார்.

செஞ்சட்டைக் கட்சியாக ஜே.வி.பி இருந்தாலும் அதன் முக்கிய உறுப்பினர்கள் முதலாளித்துவ எண்ணம் சொல் செயல் என்பனவற்றில் மூழ்கி இருக்கிறார்கள் செல்வம் சேர்ப்பதிலும் நிலபுலம் வாங்குவதிலும் விமல் வீரவன்ச பெரும் அக்கறை காட்டினார்.

இதில் அரசியல் அவருக்கு கை கொடுத்தது உறவினர் ஒருவரின் நிலத்தை ஏமாற்றிக் கையகப் பயன்படுத்தினார் என்று குற்றச் சாட்டு சில வருடங்களுக்கு முன்னர் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டது தனது அரசியல் செல்வாக்கு மூலம் அவர் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக் கொண்டார்.

விமல் வீரவன்சவின் மேடைப் பேச்சுக்களை ஆய்வு செய்வோர் இரு முக்கிய கருத்;து நிலைகளை காண்கிறார்கள் ஒன்று அவர் தமிழர்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரசைகளாகச் சிங்கள தேசத்தின் எடுபிடிகளாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்.

இரண்டு அவருடைய இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான தீவிர மேடைப் பிரசாரம் இன்றைய ஆளும் தரப்பு இந்தியாவோடு நட்புறவைப் பேணியவாறு தேவைப்படும் போது கண்டனக் கணை தொடுப்பதற்கு விமல் வீரவன்சவைப் பயன்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் நம்புகிறார்கள்.

இந்தியா சிறிலங்கா நாடுகள் 1987ம் ஆண்டில் செய்த உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பைத் துண்டிப்பதற்கு ராஜபக்ச அரசு விமல் வீரவன்சவைப் பயன் படுத்தியது சிங்கள பேரினவாத வழக்கறிஞர்களின் துணையோடு அவர் சிறிலங்கா உயர் நீதி மன்றத்தில் மனுச் செய்தார் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு வடக்கும் கிழக்கும் வேறு படுத்தப்பட்டன.

கட்டுப்பாட்டில்லாத பேராசை தலைமையை எதிர்க்கும் போக்கு ராஜபக்ச குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு காரணமாக விமல் வீரவன்ச ஜே.வி.பியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வெளியேற்றம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வில்லை ராஜபக்ச குடும்ப ஆசீர்வாதத்தோடு அவர் புதுக் கட்சியைத் தொடங்கி அதற்குத் தன்னைத் தலைவராக நியமித்துக் கொண்டார்.

சென்ற தேர்தலில் அவர் மேடையில் கக்கிய இனவாதமும் இந்திய எதிர்ப்பும் மிகப் பெரிய வாக்கு அறுவடையை ஆளும் தரப்பிற்கு பெற்றுக் கொடுத்தது அதிபர் ராஜபக்ச விமல் வீரவன்சவுக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.

போர் நடந்ந காலத்தில் அவர் இந்திய எதிர்ப்பைச் சற்று அடக்கி வாசித்தார் ஏனேன்றால் இந்திய பேரரசு சிங்களவர்கள் பக்கம் சாய்ந்து செயற்பட்டது இலங்கையில் நடந்த போர் வெறுமனே தமிழர்களுக்கு எதிரான போர் மாத்திரமல்ல அது ஒரு இந்திய கோடீஸ்வர தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் நலனை முன்னேடுக்கும் போராகும்.

சிறிலங்காவில் முதலீடு செய்யும் ஐந்து முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று பெருமளவு இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் இந்தியாவின் கோடீஸ்வர நிறுவனங்கள் இலங்கையை நோக்கிச் செல்கின்றன.

மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறியது போல விமல் வீரவன்ச இந்திய எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளார் அதிபர் ராஜபக்சவின் தூண்டுதலினால் அவர் இதைச் செய்வதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஒப்பீட்டில் சிறிய பாகங்களில் நடித்துக் கொண்டிருந்த விமல் வீரவன்சவை முன்னணி கதாநாயக அந்தஸ்திற்குத் தூக்கிச் சென்ற நிகழ்ச்சிகள் அண்மையில் தொடர்ச்சியாக நடந்தன உலகின் பார்வை அவர் மீது விழுமளவுக்கு அவருடைய நடிப்புத் திறமை உச்சம் அடைந்தது.

ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த சிறிலங்காவின் போர் குற்றங்களை விசாரணை செய்யும் நிபுணர் குழுவைக் கலைக்கும்படி அவர் ஆர்பாட்டத்தில் இறங்கினார்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தனது அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்யும் கடிதத்தை அதிபர் ராஜபக்சவிற்கு கொடுத்தார் அவர் இந்தக் கடிதத்தை ஏற்க மறுத்தார்.

அடுத்த காட்சி இப்போது ஆரம்பிக்கிறது பவுத்தலோக்க மாவத்தை தும்முல சந்திக்கு அருகாமையி;ல் இருக்கும் கொழும்பு ஐநா கிளைச் செயலகத்தை முற்றுகையிட்டு முடக்கப் போவதாக விமல் வீரவன்ச சூளுரைத்தார் சிங்கள மக்கள் ஐநா கட்டிடத்தைச் சுற்றிவளைக்கும் அதே வேளை தான் கட்டிடத்திற்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வீரவசனம் பேசினார்.

மரணம் அல்லது வெற்றி என்ற கோசத்துடன் அவர் கட்டிட முன்றலில் கட்டில் போட்டு படுத்து விட்டார் நீராகாரமின்றி இந்த விரதம் ஐம்பது மணி நேரம் தொடர்ந்ததாகச் சொல்லப்பட்டாலும் இரகசியத் தகவல்கள் வேறுவிதமாக இருக்கின்றன.

சாகும் வரை உண்ணாவிரதம் என்பது இன்று கேலிக்கூத்தாக மாறிவிட்டது. சாகும் வரை உண்ணாவிரத உலக வரலாற்றில் கலைஞர் கருணாநிதியின் நான்கு மணிநேரம் நீடித்த நோன்பு முதலிடம் பிடிக்கிறது வீரவன்சவின் சாதனை பரவாயில்லைப் போல் தோன்றுகிறது.
தியாக தீபம் திலீபன் அன்னை பூபதி போன்றவர்களின் வரலாறு உண்ணாவிரதத்தை அரசியல் கருவியாக்கிய மகாத்மாவின் சாதனைகளை வெல்லும் வகையில் அமைந்துள்ளது.

ஐம்பது மணிநேரம் முடிவுறும் போது அதிபர் மகிந்த ராஜபக்ச விமல் வீரவன்ச படுத்திருந்த இடத்திற்கு வந்தார் அவர் கொடுத்த நீரை வாங்கி குடித்த வீரவன்ச நோன்பை முடித்துக் கொண்டார்.

மகிந்த ராஜபக்ச வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகப் பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஜபக்ச வந்து நலன் விசாரித்துச் சென்றார் அண்ணன் தம்பி ஆகியோர் வருகை இது நன்கு திட்டமிட்ட நாடகம் என்று நிரூபித்தன.

தனது சுயகவுரவத்தை இழந்து அரசின் கைப்பொம்மையாகச் செயற்படும் அமைச்சர் வீரவன்ச பரிதாபத்திற்கு உரியவர். இந்த உண்ணாவிரதத்தை பான் கீ மூன் ஐநா உறுப்பு நாடுகள் உலக சமுதாயம் என்பன உதாசீனம் செய்தன இந்தியாவும் பேசாமல் இருந்து விட்டது வெளிநாடுகளில் இருந்து பொறுப்பு வாய்ந்த யாரேனும் வந்து உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கேட்பார்கள் என்று வீரவன்சவை ஒழுங்கு செய்த ராஜபக்ச அரசு எதிர்பார்த்து ஏமாந்தது.

உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கோருவதற்கு பதிலாகப் பான் கீ மூன் கொழும்பு ஐநா கிளையின் பணியாளர் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரியது அரசுக்கு பேரிடியாக வீழ்ந்தது. அதன் பின் கொழும்புக் கிளையின் பணியாளர்களை வெளியேற்றிய தோடு பான்; கீ மூன் கிளையின் கட்டிடத்தை இழுத்து மூடியுள்ளார்.

வரலாறு என்பது கடந்த கால அரசியல் என்றும் இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்றும் கூறுகிறார்கள் இந்த வெற்று வேட்டு உண்ணாவிரதத்தின் தாக்கம் இனிமேல் தான் தெரியவரும்.

லீக் ஒப் நேஷன்ஸ் எனப்படும் சர்வதேச சங்கம் இழுத்து மூடப்படுவதற்கு மன்சூரியா மீதான இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜப்பான் நாட்டின் தாக்குதல் முழுமுதற் காரணமாக அமைந்தது. இந்த அமைப்பின் தொடர்ச்சியாக நிறுவப்பட்ட ஐநாவின் தலைவிதியும் இப்போது தொங்கு நிலையில் இருக்கிறது.

ஐநாவின் எதிர்காலம் அதன் இருப்பு என்பன சிறிலங்கா நிகழ்ச்சிகளால் நிர்ணயிக்கப்படும் என்று கூறுப்படுகிறது. ஐநா கிளையை மூடச் செய்த வலு சிறிலங்காவுக்கு இருக்கிறது. ஐநாவை எதிர்க்கும் சிறிலங்காவின் விபரீத விளையாட்டு அதற்கு வினையாக முடியலாம். தமிழ் இனப் படுகொலையைத் தடுத்;து நிறுத்த இயலாத ஐநா தன்னை எப்படித் தான் பாதுகாக்கப் போகிறதோ தெரியவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*