TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐ.நா.அலுவலகம் மூடப்பட்டமை ஸ்ரீலங்கா சந்தித்த தோல்வி

ஐ.நா.அலுவலகம் மூடப்பட்டமை ஸ்ரீலங்கா சந்தித்த இராஜதந்திரத் தோல்வி.

ஸ்ரீலங்காவுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையில் ஏற் பட்டுள்ள விரிசல்கள் கடந்த வாரம் இராஜ தந்திரப் போராக வெடித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஸ்ரீலங்கா அரசின் வீடமைப்புத் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. அலு வலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் அனைத்துலகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவ தற்கு ஐக்கிய நாடுகள் அமைத்துள்ள ஆலோ சனைக் குழுவைக் கலைக்க வேண்டும் என் பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை.

ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்தினுள் 125 பணியாளர்கள் ஏழு மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளதுடன், கொழும்பில்“ உள்ள 300 ஐ.நா. பணியாளர் கள் தமது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தனி மனித சுதந்திரத்துடன் தொடர்புள்ளதால் தாம் அதனை தடுக்கமுடியாது என ஸ்ரீலங்கா அரசு தெரிவித்துள்ளதுடன், காவல்துறையினரும் செயல்திறனற்று இருந்ததாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் இந்த பத்தி எழுதப்படும் வரையில் தொடர்கின்றது.

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களின் மூலம் அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம் என ஸ்ரீலங்கா அரசும் அதற்கு சார்பான அரசியல் கட்சிகளும் நம்புகின்றன. எனவேதான் அனைத்துலகத்தின் எதிர்த்தாக்கம் என்ன என்பது குறித்துக் கூட கவலைப்படாது ஐ.நா அலுவலகம் மீதான முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகள் அமைத்துள்ள இந்த குழுவினருக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுவரும் வேகமும், ஸ்ரீலங்காவுக்கு நிபந்தனைகள் அற்ற ஆதரவுகளை வழங்கிவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் விடுத்துள்ள மிகவும் அழுத்தமான எதிர்ப்பு அறிக்கைகளும் இந்தக் குழு எவ்வளவு துõரம் முக்கியத்துவம் கொண்டது என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் வலைக்குள் சிக்காது ஐ.நா. இந்தக் குழுவை அமைத்துள்ளதும், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் தரமும் ஸ்ரீலங்கா அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.நா.வின் ஆலோசனைக்குழு செய்யும் பரிந்துரைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. அனைத்துலக விசாரணைக்குழுவை அமைத் தால் அதனை தடுக்கமுடியாத நிலை ஸ்ரீலங்காவுக்கு ஆதரவான அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு ஏற்படலாம் என்பது ஸ்ரீலங்காவின் அச்சத்திற்கான காரணம்.

இந்த நிலையில்தான் விமல் வீரவன்சவின் போராட்டத்தை நிறுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஆனால் போராடும் உரிமைகள் மக்களுக்கு உள்ளதால் ஸ்ரீலங்கா அரசு இதில் தலையிடாது எனவும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பீரிஸின் கருத்தின் உட்பொருள் தெளிவானது, அதாவது ஐ.நா. தனது குழுவை கலைத்து வீரவன்சவின் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்பதே அவரின் கருத்து. அதனை நாம் அரசின் கருத்தாகவே கொள்ளமுடியும். எனவேதான் ஸ்ரீலங்காவின் தலைநகரத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட் டத்திற்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் தொடர்புகள் உண்டு என்ற கருத்துகள் வலுவாக எழுந் துள்ளன.
வீரவன்சவுக்கு உள்ள போராடும் உரிமைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இருக்கும் என ஸ்ரீலங்கா அரசு கருதினால் தமிழ் மக்களும், எதிர்க்கட்சிகளும் இவ்வாறு போராடுவதை அரசு வேடிக்கை பார்க்குமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
இருந்தபோதும், ஸ்ரீலங்கா அமைச்சரின் இந்தப் போராட்டம் ஐ.நா.வின் நடவடிக்கையிலும், மேற்குலகத்தின் நடவடிக்கையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதே தற்போதைய கேள்வி.

இந்த கேள்விக்கான பதில்கள் தெளிவானவை, அதாவது மேற்குலகமோ ஐ.நா.வோ ஸ்ரீலங்கா விடயத்தில் மேலதிக விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளும் நிலையில் தற்போது இல்லை. அதற்கு பிராந்திய ஆதிக்க பூகோள நலனே காரணம்.
வீரவன்சவின் போராட்டம் தனிப்பட்ட மக்களின் கருத்துச் சுதந்திரத்தை சார்ந்தது எனவும், ஆனால் ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு அமெரிக்கா தனது ஆதரவுகளை வழங்கும் எனவும் அமெரிக்காவின் வெளி யுறவுத்துறை பேச்சாளர் கடந்த புதன் கிழமை தெரிவித்திருந்தார்.

ஐ.நா.வுக்கு அமெரிக்காவின் இந்த உடனடியான அறிக்கை ஒரு ஊக்கமருந்தாக அமைந்திருந்ததாக அவதானிகள் தெரிவித்திருந்தனர். எனினும் அமெரிக்காவின் இந்த கருத்தை தொடர்ந்து வீரவன்ச கடந்த வியாழக்கிழமை சாகும்வரையிலான உண்ணா நோன்பினை மேற்கொள்ள ஆரம் பித்தபோது, ஐ.நா. தனது அடுத்த நடவடிக் கையை விரைவாக மேற்கொண்டுள்ளது.

அதாவது ஸ்ரீலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி அலுவலகம் மூடப்படுவதாகவும், ஐ.நா.வின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி உடனடியாக நியூயோர்க் அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. அறிவித்துள்ளது.

1967 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் அமைக்கப்பட்ட ஐ.நா.வின் அபிவிருத்தி அலுவலகம் மூடப்படுவது இராஜதந்திர ரீதியாக ஸ்ரீலங்காவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

ஐ.நா.வின் இந்த நடவடிக்கை ஸ்ரீலங்கா மீதான மேற்குலகத்தின் அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், ஸ்ரீலங் காவில் முதலீடுகளை மேற்கொள்ளும் அனைத்துலக முதலீட்டாளர்களையும் விலகி ஓடவே வழிவகுக்கும்.

ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்து வதாக அறிவித்துள்ளதால் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதித்துறை வருடத்திற்கு 1.56 பில்லி யன் டொலர்களை இழக்கலாம் என தெரி விக்கப்படுகின்றது. அதே சமயம் அமெரிக் காவும் தனது வர்த்தக வரிச்சலுகையை மீளாய்வு செய்யத் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் ஐ.நா.வின் அபிவிருத்திப் பணிகள் முற்றாக விலக்கப்பட்டால் அது பாரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

இதனிடையே உலகில் உள்ள மக்களை பாதுகாப்பது தொடர்பிலும், போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது குறித்தும் ஐ.நா. சிறப்புக் கவனங்களை செலுத்த ஆரம்பித்துள்ளதுடன், தனக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் உரையாற்றிய 40 பிரதிநிதிகளும் இதனையே வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா, கிர்கிஸ்த்தான், காஸா, சூடான், சோமாலியா, கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களும், அங்குள்ள மக்களின் நிலையும் பொது மக்களை பாதுகாப்பது தொடர்பில் தமக்கு மிகப்பெரும் சவாலை தோற்றுவித்துள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்தக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித் துள்ளார்.
பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக அமைதிப்படையினரின் நடவடிக்கைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

மேலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட் டவர்களை தண்டிப்பதே பொதுமக்களை பாதுகாப்பதற்கான திறவுகோல் என இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைத்துள்ள ஆலோசனைக்குழு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்துள்ளதுடன், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை ஆதரித்துப் பேசியுள்ளன.

எனவே ஸ்ரீலங்காவின் எதிர்ப்புகளைக் கண்டு விட்டுக்கொடுப்புகளை மேற்கொள் ளும் முன்னைய மேற்குலகத்தின் கொள்கை களில் அதிக மாற்றங்கள் தற்போது ஏற்பட் டுள்ளன. இந்த மாற்றங்கள் மேலும் வலுப் படுமே தவிர அவை குறைவடையும் சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன.

ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டமையும் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட் டங்களும் எதிர்வரும் வாரங்களில் மேற் குலகத்தின் கொள்கைகளில் தீவிரப்போக்கை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகின்றது.

வேல்ஸிலிருந்து அருஷ்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*