TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வடக்கின் வளங்கள் தெற்கின் வசந்தத்திற்கு: கலாநிதி ஆனந்தன்

வளங்கள் இயற்கை எமக்களித்த அரும் கொடையாகும். முடியுமான வரையில் அவற்றைப் பிழிந்து எடு” என்ற பாணியில் வடபகுதியில் செறிவடைந்துள்ள பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் வகைதொகையின்றி தென்பகுதியிலுள்ள பல்வேறு தரப்பினர்களாலும் சூறையாடப்பட்டு வருவதாக பலரும் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

இந்த வகையில் 06.06.2010 அன்று வீரகேசயில் வலி வடக்கிலுள்ள அதி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து சூறையாடப்பட்டு வரும் சுண்ணக்கல் வள அழிவு பற்றியும், இதனால் இப்பகுதியின் நிலக்காட்சியில் ஏற்பட்டுவரும் தாக்கங்கள், சூழலியற் தாக்கங்கள் பற்றியும் முன்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தது.

அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியான வலி வடக்கில் மட்டுமல்ல மன்னான் தென் எல்லையில் அமைந்துள்ள முள்ளிக்குளம் பகுதியில் கல்லாறு நதிக்கரையோர மணலும் கடந்த சில வருடங்களாக சூறையாடப்பட்டு தென்பகுதிக்கு கடத்தப்படுவதாகவும் இதனால் சில கிலோமீற்றர் நீளத்திற்கு பாய குழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முள்ளிக்குளம் பிரதேசமானது மக்கள் மீளக் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
புத்தளத்தில் எல்லையோரமாக அமைந்துள்ள இப்பகுதி காட்டு வளங்களையோ கனிய வளங்களையோ (மணல்) இரகசியமாக கொண்டு செல்ல வாய்ப்பான சூழலைக் கொண்டதாகும். மணல் ஏற்றிச் செல்லும் லொறிகளில் ““வடக்கின் வசந்தம்” என எழுதப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெவித்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் இயற்கையாகவே பல்வேறு வளங்கள் செறிவடைந்து காணப்படுகின்றன. உயியல் சாராத வளங்கள் என்ற வகையில் சுண்ணக்கல், மணல், உப்பு (ஆனையிறவு, மன்னார்), களிமண் (ஒட்டுசுட்டான், முருங்கன்) போன்றவும் உயியல் சார் வளங்களில் கடல் சார் வளங்கள் மற்றும் கண்டற் தாவரங்கள், காட்டு வளங்கள், பனை வளங்கள் போன்றனவும் இப்பிரதேசத்தில் செறிவடைந்துள்ளன.

மேலும் கரையோரங்களில் ஏரிகள், குடாக்கள், சதுப்பு நிலக்காடுகள் போன்றன நீல் வளர்ப்புக்கு வாய்ப்பானதாகவும் பல சிறிய தீவுகள், மீன்பிடித் தளங்கள் (அப்பு, முத்துமேடு, பேதுரு மேடை) போன்றனவும் இயற்கை வளங்களாக பரம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தகைய இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டே பாய கைத்தொழில்கள் முன்பு இப்பகுதிகளில் இடம்பெற்றிருந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருந்தன.

இந்த வகையில் ஓ.ஓ.கு. என்ற இடத்தில் சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட பாய சீமெந்து தொழிற்சாலையும் ஆனையிறவு உப்பளத்தை அடிப்படையாகக் கொண்டு பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையும் ஒட்டுசுட்டான் (களிமண்) ஓட்டுத் தொழிற்சாலையும் முக்கியமானவையாகும்.

இவைதவிர கடல் வளங்களை அடிப்படையாகக் கொண்ட பல ஐஸ் உற்பத்திசாலைகள், சீநோர் நிறுவனத்தின் படகு மற்றும் வலை உற்பத்தி தொழிற்சாலைகளையும் இன்னும் சில படகு கட்டும் தொழிற்சாலைகளும், மீன் பதனிடல், அன்× இறால் பதனிடல் நிலையம் போன்றனவும் பனம் பொருள் சார்ந்த கைத்தொழில்களும் பல பேருக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருந்தன.

கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரும் அரசின் நடவடிக்கைகளும் வடபகுதியில் அனைத்து பாரிய தொழிற்சாலைகளையும் நிர்மூலமாக்கியதுடன் தொழில் வாய்ப்பு பெற்றிருந்தோர் தமது தொழில் வாய்ப்பை இழந்து நிர்க்கதியாக்கப்படவும் காரணமாக அமைந்தது.
பாதுகாப்பு என்ற போர்வையில் யாழ்.குடாநாட்டிலும் மன்னால் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதி முகாம்களில் அவலவாழ்வு வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

யாழ் குடாவில் முக்கிய பகுதிகள் துறைகங்கள், விமானத்தளம், வளம் மிக்க நிலம் இராணுவத்தினரின் தேவைக்காக உள்வாங்கப்பட்டன. ஏறக்குறைய 144 ச.கி. மீ பரப்பளவான பகுதியும் 81 கி.மீ. நீளமான கரையோரம் இன்று உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளன.
யுத்தம் முடிவுற்று ஒருவருடம் கழிந்துவிட்ட நிலையிலும் அதி உயர் பாதுகாப்பு வலயம் அப்படியே உள்ளன. அழிக்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளில் எவையும் இன்று மீள புதுப்பிக்கப்படவோ புனருத்தாரனம் செய்யப்படவோ இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்கள் எவரையும் குடியேற அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு செல்வோர் கூட மூடிய வாகனத்தினுள் ஆடு, மாடுகள் போல அடைக்கப்பட்டு வெளியே என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியாதவாறு அழைத்துச் செல்லப்பட்டே விமானத்தில் ஏற்றி இறக்கப்பட்டனர்.

சீமெந்து தொழிற்சாலை அமையப் பெற்றிருந்த சுற்றாடலில் செறிந்து கிடந்த சுண்ணக்கல் பல வருடங்களாக இரகசியமான முறையில் சுரண்டி சூறையாடப்பட்டு தென்பகுதிக்கு கடத்தப்பட்டுள்ள செய்தி இப்போதுதான் மெல்லக் கசிந்து அம்பலத்திற்கு வந்துள்ளது. இக் குறித்த பகுதி ஆழப்படுத்தப்பட்டு கடல் மட்டத்திற்கு கீழ் சென்றுள்ளதாகவும் இது சுற்றுச் சூழலுக்கும் மிக ஆபத்தான ஒன்று எனப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு செயற்பாடே மன்னாரிலுள்ள முள்ளிக்குளம் கல்லாற்று மணலும் சுரண்டப்பட்டு தெற்கிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மக்கள் விசனப்படுகின்றனர்.

கனிய வளங்கள் தவிர்ந்த கடல்சார் வளங்களின் சுரண்டலும் யுத்த காலத்திலும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் வகை தொகையின்றி சூறையாடப்பட்டுக் கொண்டிருப்பதும் பலருக்குத் தெயாமலிருக்கலாம். ஒரு புறம் இந்திய லோலர்கள் தடை செய்யப்பட்ட இழுவைப் படிகளைப் பயன்படுத்தி மன்னார் பாக்கு நீணைப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் பெறுமதிமிக்க இறால், சங்கு, கடலட்டை, கணவாய் போன்ற கடல் உணவுப் பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். வாரத்தில் மூன்று தினங்கள் வடபகுதியில் ஊடுருவி கடல் வளங்களைச் சூறையாடிச் செல்வது இன்னும் தொடர்கிறது.

மேலும் வட பகுதியில் இதுவரை ஆழ்கடல் மீன்பிடி என்ற ஒன்று இருக்கவில்லை.
இதற்கான வாய்ப்புகள் இருந்த போதிலும் இதற்குய அனுமதியோ உட்கட்டுமான வசதிகளோ இதுவரை இத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. யுத்த காலங்களில் மீன்பிடிக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் தென்பகுதி மீனவர்கள் இப்பகுதியில் ஆழ்கடல் வளங்களை சுதந்திரமாக அள்ளிச் சென்றனர்.

வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு பகுதி கரையிலிருந்து 200 மைல் தூரம் வரையிலான ஆழ்கடல் வள வாய்ப்பைக் கொண்ட பகுதியாக விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற பேதுரு மீன்பிடி மேடையும் இங்குதான் உண்டு. இப்பகுதிகளில் வட பகுதி மீனவர்கள் சென்று மீன்பிடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்கள். ஆழ்கடலில் ஈடுபடுத்தக்கூடிய பல நாட் கலங்கள் என்ற படகு எம்மவரிடம் இல்லை. இதற்கான அனுமதியும் இதுவரை கிடைக்கவில்லை. இப் படகுகளைப் பயன்படுத்தும் பயிற்சியே அல்லது அவற்றை கரை நிறுத்த வசதியான துறைகங்களோ இங்கு இல்லை.

இவ்வாறான நிலையில் ஆழ்கடல் மீன்பிடி என்பது வட பகுதி மீனவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. தென்பகுதி மீனவர்கள் திருகோணமலைத் துறைகத்தில் தரித்து நின்று பல நாட்கலங்களின் உதவியுடன் மிதப்புத் தூண்டில், ஆழ் படுப்பு வலை, சுற்றிவளைக்கும் வலை போன்ற வலைகளைப் பயன்படுத்தி இப்பகுதி ஆழ்கடல் வளங்களை சூறையாடிச் செல்கின்றனர்.

எட்டாத தூரத்தில் நடைபெறும் இந்த நடவடிக்கைகளால் எங்களது வளம் இவ்வாறு கொண்டு

செல்லப்படுகின்றது என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாது. யாழ் குடாநாடு போரின் முன்னர் அதி உச்ச உற்பத்தியாக 48 ஆயிரம் மெ.தொ. மீனை வருடாந்தம் உற்பத்தி செய்தது. போன் காரணமாக இது சடுதியாக வீழ்ச்சியுற்று 2 ஆயிரம் மெ.தொ ஆக குறைவடைந்தது. இன்று யுத்தம் முடிவுற்ற போதிலும் வருடாந்த உற்பத்தி முன்னைய உற்பத்தியில் 50 சதவீதம் கூட இனி எட்ட முடியாத ஒரு நிலையே இங்கு நிலவுகின்றது.

இன்று உற்பத்தி செய்யப்படும் மீன் உற்பத்தி அரைப்பங்கு ஏரிப் பகுதியில் சிறியரக மீன்களாகவே உள்ளன. துறைகங்களும் அதி உயர் பாதுகாப்பு வலய கரையோரங்களும் 81 கி.மீ. இன்று பாவனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் இடம் பெயர்ந்த மீனவர்கள் முழுமையாக சொந்த இடம் திரும்பாத நிலையிலும் பழைய நிலைக்கு மீன்வளத்துறை திரும்புவது சாத்தியமில்லை. காட்டு வளங்களைப் பொறுத்தவரையில் வன்னிப் பிரதேசம் மிகச் சிறந்த பகுதியாகக் காணப்படுகின்றது.

எனினும் இன்று வன்னி அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையினாலும் சில பகுதிகள் மக்கள் இன்னும் அனுமதிக்கப்படாத பகுதிகளாக இருப்பதனாலும் அங்குள்ள பெறுமதி மிக்க காட்டு வளங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாதுள்ளது. எனினும் ஏ9 வீதி, மன்னார் வீதி மற்றும் வன்னி உள்ளக வீதிகளின் இருமருங்கிலும் சில மீற்றர் அக லத்திற்கு பெறுமதிமிக்க காடுகள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டுவிட்டதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கடந்த மூன்று தசாப்த யுத்தத்தின் போது பெறுமதி மிக்க மானிட வளங்கள் சூறையாடப்பட்டன. யுத்தம் முடிவுற்ற நிலையில் இயற்கைவளங்களான கனிய வளங்களும் கடல் வளங்களும் வகை தொகையின்றி தென் பகுதியினரால் இவ்வாறு சூறையாடப்பட்டு வருகின்றமை இப்பிரதேசத்தின் எதிர்கால விருத்திக்கும் பெரும் ஆபத்தாகவும் சவாலாகவும் அமைந்துள்ளது.

அரச அதிகாகளோ அரசின் கைக்கூலி அரசியல்வாதிகளோ இவ் வளங்கள் இவ்வாறு சூறையாடப்பட்டுச் செல்வது தொடர்பாக மூச்சுவிட முடியாத கையாலாகாத தனத்திலிருப்பது வெட்கக்கேடானது.

“வடக்கின் வசந்தம் என பத்திகைகளில் தூள் பறக்க செய்திகள் வெளிவந்தவண்ணமே உள்ளன. வடக்கில் வசந்தம் வீசுமோ இல்லையோ. வடக்கின் வளங்களால் தெற்கில் வசந்தம் வீசும் என்பது மட்டும் உண்மை.

கலாநிதி ஏ.எஸ் ஆனந்தன் (யாழ் பல்கலைக்கழகம்)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*