TamilSpy

பொழுது போக்கு இணையம்…

போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கைகள் என்ன?

மகிந்த அரசு மேற்கொண்ட போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கைகள் என்ன?.

சிறீலங்காவில் கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்ற போரில் 12,000 தமிழ் மக்கள் வடக்கு –
கிழக்கு பகுதிகளில் இருந்து காணாமல் போயுள்ளனர். சிறீலங்காவின் தலைநகரில்
இருந்து மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் பெருபாலானவர்கள் தமிழ் மக்கள். காணாமல் போனவர்களில் பெருமளவானோர் வெள்ளை வானில் வந்த சிறீலங்கா இராணுவத்தின் புலனாளிணிவுப் பிரிவினராலும், அவர்களுடன் இணைந்து இயங்கி வரும் துணை இராணுவக்குழுவினராலும் பலவந்தமாக கடத்தப்பட்டும், படையினரால் கைது செளிணியப்பட்டும் காணாமல் போயுள்ளனர். போர் உக்கிரமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளன நிலையிலும், போர் நிறைவு பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் தொடர்பான எந்தத் தகவல்களும் இதுவரை இல்லை. காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை நேரில் சந்தித்த போதும், பல போராட்டங்களை மேற்கொண்ட போதும் எந்த பலனும் ஏற்படவில்லை.

வன்னியில் நடைபெற்ற போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவின் முன்னாள் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி கோடன் வைஸ் தெரிவித்திருந்தார். அங்கு 30,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் படுகொலை செளிணியப்பட்டதை தான்னால் உறுதிப்படுத்த முடியும் என இந்திய இராணுவ வைத்தியரும் தெரிவித்துஷள்மீளார். எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் படி போர் ஆரம்பிக்கப்பட்ட போது வன்னியில் இருந்த குடிமக்களின் தொகைகளுக்கும், போரின் பின்னர் முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பலத்த வேறுபாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் வேறுபாடுகளின் அடிப்படையில் வன்னயில் 75,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல்போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த புள்ளி விபரங்கள் உலகிற்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகையில் வன்னியிலும், யாழிலும் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டு வருவது காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மானிப்பாயை வசிப்பிடமாக கொண்டவர் பெரியவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 29 வயதான பெரியவன் ஐந்து வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்திருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். தையல் தொழில் மூலம் தனது குடும்பத்தையும், தாயார் மற்றும் சகோதரிகளையும் காப்பாற்றி வந்திருந்தார்.

யாருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட பெரியவன் எந்தக் குற்றமும் அற்றவர், ஆனால் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் தனது நண்பர்களுடன் வீதியில் உரையாடிக்கொண்டிருந்த பெரியவனை வெள்ளை வானில் வந்த சிறீலங்கா இராணுவப் புலனாளிணிவுத் துறையினர் பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றனர். சிறிது தூரம் சென்ற படையனர் மீண்டும் திரும்பி வந்து வீதியில் அனாதரவாக கிடந்த அவரின் உந்துருளியையும் ஏற்றிச் சென்றதாக அவருடன் உரையாடிக்கொண்டிருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் தனது கணவரை தேடி பெரியவனின் மனைவி யாழில் உள்ள படை முகாம்களுக்கும், துணை இராணுவக்குழுவினரின் முகாம்களுக்கும் பல தடவை சென்றபோதும், இரந்து அழுதபோதும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. எந்தக் குற்றமும் அற்ற பெரியவன் எழுந்த மானமாக கடத்தப்பட்டபோதும், அவர் எங்கே என்பது யாருக்கும் தெரியவில்லை. தனது பிள்ளைகளின் வாழ்வுக்காகவும், தனது கணவரின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் வயலில் வேலை செய்து வரும் பெரியவனின் மனைவியின் வாழ் நாளில் பெரும்பாலான நாட்கள் துன்பத்தில் தான் கடந்து செல்கின்றன.

பெரியவன் தொடர்பில் பேச்சை ஆரம்பித்த போது கண்களில் நீர் நிரம்ப தலையை குனிந்து கொண்ட பெரியவனின் மனைவி,தனது கணவரை கண்டறியமுடியாது விட்டால் பிள்ளைகளுடன் தான் தற்கொலை செய்யவேண்டிய நிலையே ஏற்படும் எனதெரிவித்தது மிகவும் வேதனையானது. வடக்கு – கிழக்கில் இருந்து காணாமல்போன 12,000 தமிழ் மக்களின் கதைகளும் இவ்வாறே உள்ளன. காணாமல் போனவர்களில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து காணாமல் போனவர்கள் தான் அதிகம். மேலும் காணாமல் போனவர்கள் தவிர படையினரின் கட்டுப் பாட்டுப் பகுதியில் வைத்து படுகொலை செளிணியப்பட்டவர்களும் ஏராளம். உதாரணமாக நவாலி பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் அதன் வடக்கு நவாலி எனப்படும் சிறு பிரதேசத்தில் மட்டும் 6 பேர் கடத்தப்பட்டுள்ளனர், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெருமளவானவர்கள் உந்துருளிகளில் வந்தவர்களினால் படுகொலை செளிணியப்பட்டுள்ளனர். எனவே வன்னி தவிர்ந்த படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் மேற்கொண்ளப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மிக அதிகம். வன்னியில் நடைபெற்ற போரில் படையினரின் நேரடியான தாக்குதலில் 75,000 இற்கு மேற்பட்டவர்ககொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்களின்அடிப்படையிலான கணிப்பீடுகள் தெரிவித்து வரும் போதும், வன்னிக்கு வெளியில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்என்பது தொடர்பில் சரியான கணிப்பீடுகள் இல்லை.

எனவே 2006 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான தொகைகள் இதுவரை சரியாக கணிப்பிடப்படவில்லை. அதனை கணிப்பிடும் சூழ்நிலைகள் ஏற்படாதவாறு சிறீலங்கா அரசு பல திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் முழுமையான விபரங்கள் வெளிவரும் போது அது எமக்கும், இந்த உலகத்திற்கும் மிகப் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பதுடன், சிங்கள இனத்தின் கோரமுகமும் அம்பலமாகும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி்:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*