TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மே 18…..: வாருங்கள் எல்லோரும் மக்கள் படையாக

இது எமத இனம் பேரழிவுக்குள்ளான நாள். எமது குழந்தைகளை சிங்கள ஏகாதிபத்தியம் கொன்று குவித்தநாள். எமத உறவுகளை உயிருடன் புதைத்தநாள். உலக மானிடமே ஸ்ரீலங்கா அரசை மன்னிக்க முடியாத நாள்.

செப்டம்பர் 11- 2001 ற்குப் பிறகு உருவான புது உலக மாற்றத்திலே சரித்திரத்தில் குறிக்கப்படவேண்டிய நாளாக மே 18ம் திகதி மாறியுள்ளது. யூதமக்களுக்கு எவ்வாறு 27 ஜனவரி இனப்படுகொலை தினமாக ஒரு இன அழிப்பின் உச்ச நாளாகக் கருதப்படுகிறதோ, அதே போல் நாம் அந்த தினத்தை; தமிழ் இன அழிப்பின் உச்ச நாளாக கருதுகிறோம்.

அத்துடன் சமாதானத்தை வேண்டி வெள்ளைக் கொடியுடன் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களையும், அவர்களுடன் வெள்ளைக் கொடியேந்தி வந்த 300க்கும் மேற்பட்டவர்களையும் சுட்டுக்கொன்றதும், மக்களைப் பாதுகாப்பான இடங்கள் என்று பாதுகாப்பு வலயங்களை வரையறுத்து அங்கு அப்பாவி மக்களை வரவழைத்து, உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட கிளாஸ்டர் குண்டுகள், இரசாயனக் குண்டுகளை வீசியும், பாதுகாப்பு வலயத்தின் மீது கண்மூடித்தனமான செல்வீச்சினையும், கனரகக் குண்டு வீச்சினையும் நடாத்தியும், உணவு, மருந்துப்பொருட்கள், மற்றும் உயிர்வாழத் தேவையான அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் பொதுமக்களுக்குச் செல்லவிடாமல் தடைசெய்தும், காயம்பட்ட மக்கள் சிகிச்சைபெற்ற வைத்திய சாலைகளின்மீது தாக்குதல் நடத்தியும், பெண்களுக்கெதிராக பாலியல் வல்லுறவு, பாலியல்துன்புறுத்தல் நடாத்தியும் அனைத்துவகையான போர்க்குற்றங்களையும், மனிதநேயத்துக்கெதிரான குற்றங்களையும் புரிந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கெதிராக நீதி கேட்காமலிருப்பது எம்மை இந்த உலகில் மிகவும் அடிமைப்பட்ட இனமாக மாற்றியமைக்கும்.

எம் தாய் நாட்டில் எமது உறவுகளுக்கு எவரின் உதவிகளும் இல்லாதுள்ள நிலையில், இன்று நாம்தான் அவர்களின் நம்பிக்கை, அங்கே மிண்டும் ஆட்கடத்தல்கள்,கொள்ளைகள்,சிங்கள குடியேற்றங்கள் என்ற இடர்களுக்கிடையே வாழும் அவர்களின் துணை. அதையும் இலங்கை அரசு அழித்துவிட்டால், அத்துடன் எமது தேசிய உரிமைகள், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் அழிக்கப்பட்டு எமது இனம் கையறு நிலையில் விடப்பட்டு விடும்.

நாம் மே 18ம் திகதியை உலகிற்கு போர்க்குற்ற நாளாக வலியுறுத்தி, எமது மக்களுக்கு மாபெரும் வரலாற்று அநீதியை இழைத்த அந்தத் திகதி உலக சரித்திரத்திலேயிருந்து அழிந்து விடாமல் பார்ப்பதும், குற்றவாளிகளைச் சர்வதேச நீதிமன்றத்திலே நிறுத்தி நீதி கோருவதன் மூலமாக எமது தேசிய உரிமைகளை வலியுறுத்துவோம்.

யூதர்களைப்போல் அவர்களின் நிலத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் போல் நாமும் எமது நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு, புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழ்கிறோம். யூதர்களைப்போல நாமும் புலத்திலிருந்து போராடி தளத்தில் எமது உரிமைகளை நிலைநாட்டி, எமது நாட்டைக் கட்டியமைக்க வேண்டும்.

சகோதர சகோதரிகளே!

இந்த மே 18ம் திகதியை எமது Holocauste (இனப்படுகொலை) தினமாக துக்கதினமாக கரிநாளாக, போர்க்குற்ற நாளாக மாற்றி எல்லோரும் முடிந்தவரையில் கறுப்பு உடை அணிந்து, ஒருநாள் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி, தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து, எல்லோரும் ஒன்றாக Ecole Militaireஇல் அமைந்தள்ள Mur de la Paix (அமைதியின் சுவர்) இலிருந்து மனிதவுரிமைச் சதுக்கமவரை நீதி கேட்டு ஊர்வலம் செல்வோம்.

இது எமத இனம் பேரழிவுக்குள்ளான நாள்.

எமது குழந்தைகளை சிங்கள ஏகாதிபத்தியம் கொன்று குவித்தநாள்.

எமத உறவுகளை உயிரடன் புதைத்தநாள்.

உலக மானிடமே ஸ்ரீலங்கா அரசை மன்னிக்க முடியாத நாள்.

வாருங்கள் எல்லோரும் மக்கள் படையாக…………

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
Tag:
  • semmani says:

    thamilan = maanam+veeram,
    adu brabagaranukku unndu indiavukku thunnai pogum nee thurogi…
    thamilagamakkal.

    May 25, 2010 at 08:58

Your email address will not be published. Required fields are marked *

*