TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை கட்டுப்படுத்த முடியாது

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை கட்டுப்படுத்த முடியாது..! அப்போ….. முள்வேலி முகாம் மக்கள் …சரணடைந்த விடுதலைப்புலிகள் கதி என்ன..?

ஐரோப்பிய ஒன்றியம் …என்றால் என்ன..? சுமார் ஒரு பதினாறு நாடுகள் அல்லது அதற்க்கு சற்று ஏறக்குறைய சில நாடுகளை சேர்த்து உருவாக்கிய ஒரு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு..இதில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் முக்கிய தலைமைப் பாதிரியார்கள் .. இதில் உள்குத்தாக பிரிட்டன் ( பிரிட்டன் பின்னால் நிற்கும் அமெரிக்கா ) யூரோ என்ற பண மதிப்பை அனுமதிக்க கூடாது என்று …சில காலம் போராடிப் பார்த்தது பிரிட்டன் கூட்டணி ….தவிர்க்க இயலவில்லை..

அல்லது யூரோ என்பதும் அமெரிக்காவின் முன் திட்டமிடுதல் …? வாய்ப்பு நிறைய இருக்கிறது…! ) ஒரு வழியாக அனுமதி வழங்கினார்கள் யூரோ என்ற பண வர்த்தகத்திற்கு…உலக அளவில் ..?! யூரோ என்ற பண மதிப்பும் இன்று கடும் சிக்கலில் உள்ளது..பிரிட்டனின் பவுண்டும் சிக்கலில் உள்ளது..அமெரிக்காவின் டாலர் மட்டும் பல சிக்கல்கள் இருந்தாலும் தட்டுத் தடுமாறி தனது நிலையை தக்க வைத்துக் கொண்டு வருகிறது…! யூரோ மதிப்பு பிரிட்டனின் பவுண்ட்டை விட குறைவாக இருந்தது இந்த பொருளாதார சைத்தான் வரும் வரை..இப்பொழுது யூரோ..பவுண்ட்..டாலர் எல்லாம் ஒரு விதத்தில் சரிசமமாக உள்ளன பல சில வேறுபாடுகள் …ஒரு ஒப்புக்கு என்று கருதலாம்…!

இந்த லட்சணத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகிறது இலங்கை அரசை நாங்கள் வற்புறுத்த முடியாது என்று..? எதற்கு..பொன்சேகா வழக்கு குறித்து..? அல்லது பொன்சேகாவின் சிறைவாசம் குறித்து..? அல்லது இலங்கையின் தேர்தல் குறித்து..? அல்லது முள்வேலி முகாம் மக்கள் குறித்து…? எதுவும் கிடையாது…! ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசு அல்லது ஒன்றியம்…எல்லாம் பெரும் புதைக்குழியில் சிக்கி …யார் வருவார் நம்மை காப்பாற்ற என்று உள்ளது..? “ ஒரு திருடன் வீட்டில் புகுந்து திருடிக்கொண்டு இருக்கிறான்…எந்த சத்தமும் இல்லாமல்..சிறிது நேரம் தான் இருக்கிறது அவனின் வேலை முடிவதற்கு…முடியும் தருவாயில் ஒரு நட்டுவாக்காலி கொட்டுகிறது…எப்படி சத்தம் போடாமல் இருக்க முடியும்” ..? அதுபோன்ற ஒரு நிலையில் உள்ளது இந்த ஐரோப்பிய ஒன்றியம் ..? வெளிப்படையாக் சொல்ல கூச்சப்படுகிறார்கள்.. ?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது..! என்று மறுக்க முடியுமா …! சாமி ஆடுபவன் போடும் ஆட்டம் தான் இவர்களுடையது..! என்று சொல்ல முயற்சிக்கிறார்கள்…அனைத்தும் பெரும் வேஷம் என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார்கள்…
இலங்கை விசயத்தில்…என்னங்கப்பா …சொன்னீர்கள் ஆரம்பத்தில்..பாதுகாப்பு வலையத்திற்குள் வாருங்கள் என்றீர்கள்..
சரணடையுங்கள் என்றீர்கள்..பொது மன்னிப்பு என்றீர்கள்..புனர் வாழ்வு என்றீர்கள்…என்னங்கப்பா…பெரிய மனித உரிமை..
மனித உரிமை மீறல் கமிட்டி, மனித வாட்ச் டாக் பிறகு நிறைய உரிமைகள் அமைப்புகள் வைத்திருந்தீர்கள்..அதெல்லாம்
எங்கப்பா..? புல்லாக தண்ணிய போட்டுவிட்டு படுத்து விட்டார்களா..? அல்லது இவையெல்லாம் இந்த இன்டர்நெட் காலத்திற்கு தேவையில்லை என்று ….என்று கருதி..இந்த இலங்கை மக்கள் முகாம்களில் இருப்பது தான் மிகவும் பாதுகாப்பானது என்று இந்த ஐரோப்பிய ஒன்றிய சபை கருதி இருக்கலாம்…! ஐரோப்பிய ஒன்றிய அரசு..? அல்லது சபை..!

இந்த கூட்டணியில் உள்ள கிரீஸ் நாட்டிற்கு ஏன் பணம் கொடுத்து உதவ மறுக்கிறீர்கள்…கிரீஸ் நாட்டை தொடர்ந்து போர்ச்சுக்கல் பிறகு ஸ்பெயின் அப்புறம் துருக்கி என்று தொடங்கி பிரிட்டன் வரை புரையோடி வருகிறது இந்த புற்று
நோய் …இதில் எல்லாம் உதவும் நிலையில் இல்லை இந்த டுபாக்கூர் ஐரோப்பிய ஒன்றியம்..எப்படி இந்தியாவிடம் இருந்து சீனாவிடம் இருந்து உதவிகளை பெறுவது என்ற நிலையே அமெரிக்காவின் இடம்..இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சற்றும் சளைத்தவை இல்லை…இதில் ஜி.எஸ்.பி பிளஸ் என்ற வரிசலுகை திட்டம் இப்பொழுது நடைமுறையில் இல்லை…இல்லாத ஒரு சலுகையை இலங்கைக்கு வழங்குவோம்..அல்லது வழங்க மாட்டோம் என்று கூட்டு சேர்ந்து ஏமாற்றினார்கள் இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்..தானே கஷ்டப்பட்டு வருகிறேன் ஒரு வேளை சோற்றுக்கு…உனக்கு மூன்று வேளை சோறு தருகிறேன் என்று சொவதைப் போல…” இது.. இல்லாத வழக்கொழிந்து போன ஒரு ஜி.எஸ்.பி.பிளஸ் என்ற ஒரு மோசடி திட்டத்தை அலல்து வழக்கில் இல்லாத காலாவதியாகிப் போன ஒரு சலுகையை சொல்லி இலங்கை தமிழ் மக்களை மட்டும் அன்றி உலக தமிழ் மக்களை பெரும் முட்டாளாக்கி சென்றனர் இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசு அல்லது சபை..!

அனைத்து தமிழர்களையும் முட்டாளாக்கிய ஐரோப்பிய ஒன்றியம்…ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை மற்றும் மனித உரிமை கவசங்கள்…இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளன..இவர்கள் எப்படி கொடை வழங்க முடியும்…? அனைத்தும் கபட நாடகங்கள்..! பிச்சை எடுப்பன் …பிச்சை போடும் அவலம்…நெஞ்சு பொறுக்குதில்லை…!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*