TamilSpy

பொழுது போக்கு இணையம்…

போர் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்

போர் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும். பாகம்: 2

2006-2009ல் நடந்த நாலாம் கட்ட ஈழப் போரில் கொல்லப்பட்ட தமிழீழ மக்கள் தொகை இரு லட்சத்திற்குக் கூடுதலாக இருக்குமே ஒழியக் குறைய வாய்ப்பில்லை 2009ல் தமிழர் தரப்பு உயிரிழப்புக்கள் உச்ச நிலை அடைந்தன போரை விரைவாக முடிக்க வேண்டும் அதற்காக எத்தகைய ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற வெறி சிறிலங்காப் படையின் தலைமையினரில் காணப்பட்டது சிறிலங்காப் படையினரின் பின் புலத்தில் ஊக்கியாகச் செயற்பட்ட இந்திய அரசு இதற்குரிய ஒத்தாசையை வழங்கியது.

2009 ஜனவரி 01 நாள் சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியில் சிறிலங்காவின் சிங்கக் கொடியை ஏற்றினர் கிளிநொச்சி நகரை எட்ட முன் கிளிநொச்சி -அக்கராயன் பகுதிகளில் சிறிலங்காப் படைகள் கடும் உயிரிழப்புக்களைச் சந்தித்தனர் புலிகளின் எதிர்தாக்குதல்களை முறியடிப்பதற்காக சிறிலங்காப் படைத் தலைமை விஷ வாயு மயக்கம் அடையச் செய்யும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது இந்தப் பயன் பாடு அவர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தது ஆனால் சிவிலியன் உயிரிழப்புக்களும் புலிப் போராளிகளின் உயிரிழப்புக்களும் பெருமளவில் ஏற்பட்டன.

தமது பழியைப் பிறர்மேல் சுமத்தும் சிறிலங்கா அரசு புலிகள் தான் கொடிய விஷ வாயு ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்று தனது ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்தது கிளிநொச்சி -அக்கராயன் தரை மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு கூடப் பரிசோதனை செய்து பார்த்தால் இது பற்றிய உண்மைகள் புலப்பபடும் 1998ம் ஆண்டில் சதாம் ஹீசெயின்குர்திஷ் மக்களுக்கு எதிராக புட்டியா, கலாப்ஜா போன்ற நகரங்களில் விஷ வாயுக்களைப் பயன் படுத்தினான் சதாம் ஹ_செயினின் குர்திஷ மக்களுக்கு எதிரான விஷ வாயுப் பாவனை இனப் படுகொலை என்று கண்டிக்கப் பட்டது.

தனது வெளி விவகார அமைச்சர் சடூ;ன் கமாடி மூலம் ஒரு சிவிலியனும் ஈராக்கில் கொல்லப்படவில்லை என்று சதாம் ஹ_செயின் அமெரிக்க அரசுக்குச் செய்தி அனுப்பினான் இதை அந்த அரசு ஏற்க மறுத்து விட்டது தமிழர்களுக்கு எதிரான போர் நடந்தது கொண்டிருக்கையிலும் அதற்குப் பின்பும் சிவிலியன் உயிரிழப்பு பூச்சியம் என்று சிறிலங்கா அரசு பிரகடனப் படுத்தியது அதாவது ஒரு பொது மகனாவது தான் நடத்திய போரில் கொல்லப்படவில்லை என்று அது அடித்துக் கூறியது.

தமிழர்களுக்கு எதிரான போரைச் சிறிலங்கா அரசு புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதநேயப் போர் என்று வர்ணித்தது தம்மை மீட்கும் படி ஒரு தமிழனாவது அரசிடம் வேண்டுதல் செய்யாவிட்டாலும் அப்படி விடப்பட்டது போன்ற பொய்யுரையை அரசு தொடர்ந்து கூறி வந்தது தான் நடத்திய மனித நேயப் போர் நடவடிக்கையில் பொது மக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று அரசு வாதிட்டது இந்த வாதத்திற்கு அனுசரணையாக அரசு பின்வருமாறு விதண்டா வாதம் புரிந்தது.

ஓரு மனித நேயப் போர் நடவடிக்கையில் பொது மக்கள் கொல்லப்படுவதில்லை அப்படி யாரேனும் கொல்லப்பட்டால் அவர் பொது மகன் அல்ல நிட்சயம் புலியாகத்தான் இருக்க வேண்டும் புலிகளுக்கு எதிரான அரசின் மனித நேயப் போரில் புலிகள் மாத்திரமே கொல்லப்படுகிறார்கள் எவ்வகையிலும் கொல்லப்பட வாய்ப்பில்லை பொது மக்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள் அவர்கள் மிக கொடிய விஷ வாயுக் குண்டுகள் இரசாயன மற்றும் எரி குண்டுகள் (பொஸ்பரஸ்) கொத்துக் குண்டுகள் மூலம் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இன்று உள்ளன.

போரை வழி நடத்திய கட்டளைத் தளபதி சரத் பொன்சேக்கா இளைப்பாறிய பின் சனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிட்டார் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் போரின் போது போர்க் குற்றங்களை அரச படைகள் செய்துள்ளன என்று வெளிப் படையாகப் பேசியுள்ளார் இப்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் செய்த குற்றச் செயல்களைப் பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்டாலும் அவரும் போர் குற்றவாளி தான் என்பதில் சந்தேகமில்லை அரசின் பணிப்புக்கு இணங்கத் தன்னால் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தான் நிரபராதி என்றும் அவரால் வாதிட முடியாது.

இப்போது சட்டம் இருக்கும் நிலையில் ஏவியவனும் எவலனும் சம அளவில் குற்றவாளிகளாவார்கள் சர்வதேச அரங்கில் இரு முக்கிய வினாக்கள் போரில் ஈடுபடும் படையினர் பற்றிக் கேட்கப்படுகின்றன ஒரு படையினன் தொகையாகப் போரிடும் நிலையில் இருந்து எப்போது கொலைக்காரனாக மாறுகிறான்? இராணுவக் கட்டுப் பாடுகளை இழந்த படையாள் வகை தொகையாகப் பொது மக்களை படுகொலை செய்யும் போது அவனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது? இந்த வினாக்களுக்கு விடையாகச் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் போர் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கும் அதிகாரம் இடம் பெறுகிறது.

சிறிலங்கா அரசின் பார்வையில் தமிழ் அப்பாவிப் பொது மக்களுக்கும் தமிழீழத்திற்காகப் போரிட்ட விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருக்க வில்லை பொது மக்கள் படுகொலையை நியாயப் படுத்தும் அரசின் போக்கு இந்தப் பார்வையில் இருந்து தோன்றுகிறது. படுகொலை பாலியல் வல்லுறவுகள் காணமல் போதல்கள் இடம் பெயரச் செய்தல்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டிய பொது மக்களை தடுப்பு முகாம்களுக்குள் முடக்கி வைத்தல்கள் அனைத்தும் இந்தப் பார்வையில் இருந்து பிறக்கின்றன கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை சிறிலங்கா முப்படைகளும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து நடத்திய தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பும் போர் பற்றிய விரிவான பதிவுகளை அடுத்த உரையில் காண்போம்.

தொடரும் ….

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*