TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ் நெற் ஜெயச்சந்திரன்” எப்போ தேசியத் தலைவரானார்?

“சேரமான்” எனும் முகம் மூடி அணிந்து கட்டளையிடும் “தமிழ் நெற் ஜெயச்சந்திரன்” எப்போ தேசியத் தலைவரானார்?.

புலத்தில் உள்ள மக்களிடையே உறுதியான அரசியல் தலைமை உருவாகும் சாத்தியப்பாடும் அரசியல் விழிப்புணர்வும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மனதில் நம்பிக்கையும் அற்றுக் காணப்படுகிறது. மொத்தத்தில் தமிழர்களின் அரசியல் தலைமைகள் தமிழரின் நம்பிக்கைக்கு உரியதாக காணப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. புலம் பெயர் தமிழர் சமூகம் தனது வரலாற்றுக் கடமையிலிருந்து தவறுமானால் தமிழினம் அழிந்து போன ஒன்றாகவே இருக்கும்.

* கிழக்கிலும் வடக்கிலும் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்று ஒழிக்கப்படும் காலங்களில் மயக்க நிலையில் இருந்துவிட்டு இன்று புதிதாய் சித்தாந்தம்,,புலிக்கொடி கோசம் போடும் தமிழ் நெற் ஜெயாவின் வழிகாட்டலில் செயற்படும் கும்பல்கள் சர்வ தேச கவனத்தை, ஈர்க்கும் வகையில் பொது ஊர்வலங்களிலோ அல்லது வெளிநாட்டுத் தூதரங்களுடன் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உண்டா?

* காசு தந்தால் அண்ணை பார்த்துக்கொள்ளுவார் என்ற காஸ்ரோவின் கோசத்தை நிலைநாட்டி ஆயுதம் இருந்தால் போதும் என்றும் அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது என கூறிய இந்த படித்த முட்டாள்கள் இன்று வீரவசனம் வெற்றுக் கோசம் போடுவது ? வேடிக்கையானது அதுசரி 45 பாகையில் பயணிக்கப்போகும் சீ மன்னிக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசு வானத்திலிருந்து பயணிக்க நினைக்கும் கே பி யின் வேலைத்திட்டம் என்ற இந்த வன்மதாரிகள் இன்று உருத்திராவை தூக்கி எறிந்துவிட்டு அதில் தாம் குந்தியிருந்து கோலோச்ச நினைப்பது வேடிக்கையானதுதான், அத்தோடு இந்தியாவிடம் சரணாகதி பின்பு சீனாவிடம் இன்று அமெரிக்காவிடம் என்று சரணாகதி அரசியல் செய்வோர் மக்களுக்கு புலிக்கொடி தலைவர் என்று வீர வசனம் பேசுவது அபத்தமானதுதான்

இந்த முகமூடி மனிதர்களின் முகத்திரையை யார் வந்து கிழிக்கப்போகின்றார்கள் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி?

இனி……

அரசியல் சாயம் பூசிக் கொண்டுள்ள ஆய்வாளர்களுக்கும் ஊடகவாளர்க்கும் இதர கட்சி ஆதரவாளர்க்கும் இது ஒரு எரிச்சலூட்டும் வினாவாகவே இருக்கும். எமது மக்களின் அரசியல் அறிவுக்கும் கட்சி ஆதரவுத் தளங்களுக்கும் இவர்களின் பக்கச் சார்புக் கருத்தாடல்களும் ஆய்வுக் கட்டுரைகளுமே அடித்தளமாக அமைந்துள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன சுதந்திரன் பத்திரிகையைத் தமது பிரச்சாரப் பீரங்கியாகப் பயன்படுத்தின. இன்றுவரை தமிழ் ஊடகத்துறை சுதந்திரன் என்ற நாற்று மேடை நாற்றுகளால் நிறைந்திருப்பதை அவதானிக்க முடியும்.

பழம் பெரும் பத்திரிகையான ஈழநாடும் அதன் புத்தெழுச்சி பெற்ற காலமும் தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாக்கிரக மற்றும் சட்ட மறுப்பு அறப் போராட்டம் இடம் பெற்ற 1960ம் ஆண்டுகாலப் பகுதி என்பதே வரலாறு. தமிழரசுக் கட்சியின் எதிர்க் கருத்தாக தமிழ் ஊடகத்தில் தீப்பொறி , சிந்தாமணி, தினபதி என்பன செயற்பட்டன.

அதிலும் தினபதி, சிந்தாமணிப் பத்திரிகைகள் சிங்கள முதலாளியான எம்.டி. குணசேன நிறுவனத்தின் வெளியீடுகளாக இருந்த போதிலும் அதன் ஆசிரியராக பெரும் புகழீட்டியவர் சுதந்திரன் பத்திரிகையிலிருந்து விலகிய தமிழரசுக் கட்சிஙைச் சேர்ந்த திரு.எஸ்.டி.சிவநாயகமாவர். தமிழரசுக் கட்சித் தலைமையில் ஏற்பட்ட பிளவு காரணமாக சிங்கள முதலாளியின் தயவில் தமிழரின் அரசியல் தலைமைக்கு ஆப்பு வைத்த முதல் ஊடகவாளர் அவரே எனக் குறிப்பிட்டாலும் தவறில்லை எனலாம்.

ஆனால் இங்கு பார்வைக்கு உட்படுத்தப் படும் விடையம் அதுவல்ல. என்றோ தமிழ் ஊடகத்துறை அரசியல் கட்சி மயப்படுத்தப் பட்டுவிட்டது என்பதனை நினைவு படுத்தவே இவற்றைக் குறிப்பிட வேண்டிய தேவை உருவானது. அண்மையில் ஒரு பழம் பெரும் ஊடகவாளர் தமிழ் ஊடகத்துறை இப்போதுதான் அரசியல் பிளவில் உட்பட்டு விட்டதாக குறிப்பிட்டமை வரலாற்றை அவர் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறியதையே காட்டுகிறது.

மக்களாட்சி முறையில் பொதுஜன வாக்குரிமை ஒரு மிகப்பெரும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை வழங்கும் முறையாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பெரும்பான்மையான முட்டாள்களின் ஆதரவு மூலம் ஒரு புத்திசாலி அதிகாரம் ஆளணி ஆட்சி எனச் சர்வ வல்லமையையும் அடைந்துவிட முடியும்.

இதன் நிமித்தமாக உலகில் சகல நாடுகளிலும் அதிகாரத்தைத் தக்க வைக்க அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் என்பன இன்று உலக அதிகார வர்க்கத்தின் ஆசைக்குரிய அவசிய சாதனங்கள் ஆகி விட்டன. எனவேதான் இன்று உண்மையைத் தேடும் எவரும் எந்ந ஒரு ஊடகத்தையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் ஊடகவாளருக்குச் செய்திகள் சேகரிப்பதும் அவற்றை வெளிவரச் செய்வதும் அவர்களது வாழ்வாதாரச் சம்பாத்தியப் பிரச்சனையாக மாறி உள்ளது. இவர்கள் செய்திகளையும் அறிக்கைளையும் பெறுவதற்கு முக்கியமாக அரசியல் வாதிகளின் தயவில் தங்கி உள்ளனர். அரசியல் வாதிகளோ தமதும் தமது கட்சியினதும் நலன் சார்ந்த விடையங்கள் மட்டுமே பிரசுரமாக விரும்புவர். அப்படி வெளியாகும் விடையங்கள் வெறும் கண்துடைப்பு அறிக்கைகளும் உண்மைக்குப் புறம்பான சில வேளைகளில் அப்பட்டமான பொய்களாவும் இருக்கும்.

நம்பகமற்ற சேதி எனத் தெரிந்தே நிருபர்களும் அவற்றைப் பிரசுரிக்கும் பத்திரிகைகளும் அவற்றை மக்களுக்கு விற்று விடுவர். கட்டுரைகளையும் ஆய்வுகளையும் எழுதுவோரும் சம்பந்தப் பட்ட பத்திரிகை ஆசிரியரின் அல்லது நிறுவனத்தின் உரிமையாளரின் ஆதரவும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே அவை பிரசுரமாகும். ஓரு ஊடகவாளர் பிரபலம் அடைகிறார் என்றால் அது அவரின் திறமைiயால் அல்லாது அவர் பயணிக்கும் குறுக்கு வழிகளிலும் தங்கியே உள்ளது என்பதை எந்த ஒரு நேர்மையான ஊடகவாளரும் ஒத்துக் கொள்வர்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்டே தமிழ் ஊடகமும் அது வளர்த்து எடுத்துள்ள அரசியல் கட்சிகளும் பார்க்கப்பட வேண்டும். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிலிருந்து தமிழரசுக் கட்சி உருவானதும் சுதந்திரன் அச்சக உரிமையும் தமிழரசுக் கட்சியின் கைக்கு மாறியது. சுதந்திரனின் தீவிரமான பிரச்சாரமே காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கும் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கும் வகை செய்தது.

இதே சுதந்திரன் பத்திரிகையில் திரு.கோவை மகேசனின் வலுவான எழுத்தாற்றலால் மட்டு நகர் செ.இராசதுரையை ஓரம் கட்டவும் கிழக்கிலே வடக்குத் தமிழரின் ஆதரவு இழக்கவும் உதவியது. அத்தோடு முன்னாள் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவசுந்தரத்தையும் ஊர்காவற்றுரை பிரதிநிதி திரு.வ.நவரத்தினத்தையும் அவர் தோற்றுவித்த தமிழரின் சுயாட்சிக் கோரிக்கையை கொண்டிருந்த தமிழர் சுயாட்சிக் கழகத்தையும் தலை எடுக்க விடாது செய்யவும் முடிந்தது. தமிழர் நலன் என்பதை விடக் கட்சி விசுவாசம் அல்லது தனிநபர் விருப்பு ஒன்றே பெரிதாகக் கொள்ளப்பட்டமை மிகப் பெரும் சமூக அவலமாகும்.

இத்தகைய ஒரு பொறுப்பற்ற ஊடகக் கலாச்சாரம்தான் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிகளின் தோல்விகளாகத் தமிழினத்தின் இன்றைய அவல நிலைக்குக் காரணமாகி விட்டது. தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் மிச்ச சொச்சங்களும் அரசியற் பாடத்தின் அரிச்சுவடியோ மக்களாட்சித் ததர்துவத்தின் மாண்பு மகிமையோ கூட அறியாத ஆயுதக் குழுத் தலைமைகளின் அவசரக் கோலம் தமிழர் தேசியத் கூட்டமைப்பு என்ற அரிதாரம் பூசப்பட்ட பொம்மையாக வலம் வருகிறது.

புலிகளை மனசாலும் ஏற்றுக்கொள்ளாமல் புலி முத்திரை குத்தித் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என வலம் வந்தவர்கள் இன்று புலியின் கோடுகள் வெளுத்த நிலையில் தாமே தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் என்ற பல்லவி பாடுகின்றனர். இவர்களின் கடந்த கால நடவடிக்கைகளைக் கவனிப்பவருக்கு இது எத்தகைய போலிக் கூச்சல் என்பது எளிதில் புரிந்து விடும்.

இரு விடையங்களை மட்டும் தமிழ் நெற் ஜெயா எனும் சேரமானின் தில்லுமுல்லுகள் பற்றி குறிப்பிட்டாலே மேற் கூறிய கருத்துக்குப் போதுமானதாக இருக்கும்.

கிழக்கிலும் வடக்கிலும் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்று ஒழிக்கப்படும் காலங்களில் புதிதாய் சித்தாந்தம் புலிக்கொடி கோசம் போடும் தமிழ் நெற் ஜெயாவின் வழிகாட்டலில் செயற்படும் கும்பல்கள் சர்வ தேச கவனத்தை, ஈர்க்கும் வகையில் பொது ஊர்வலங்களிலோ அல்லது வெளிநாட்டுத் தூதரங்களுடன் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உண்டா? காசு தந்தால் அண்ணை பார்த்துக்கொள்ளுவார் என்ற காஸ்ரோவின் கோசத்தை நிலைநாட்டி ஆயுதம் இருந்தால் போதும் என்றும் அரசியலால் சர்வதேசத்தை வெல்ல முடியாது என கூறிய இந்த படித்த முட்டாள்கள் இன்று வீரவசனம் வெற்றுக் கோசம் போடுவது ? வேடிக்கையானது அதுசரி 45 பாகையில் பயணிக்கப்போகும் சீ மன்னிக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசு வானத்திலிருந்து பயணிக்க நினைக்கும் கே பி யின் வேலைத்திட்டம் என்ற இந்த வன்மதாரிகள் இன்று ருத்திராவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதில் தாம் குந்தியிருந்து கோலோச்ச நினைப்பது வேடிக்கையானதுதான், அத்தோடு இதியாவிடம் சரணாகதி பின்பு சீனாவிடம் இன்று அமெரிக்காவிடம் என்று சரணாகதி அரசியல் செய்வோர் மக்களுக்கு புலிக்கொடி தலைவர் என்று வீர வசனம் பேசுவது அபத்தமானதுதான் இந்த முகமூடி மனிதர்களின் முகத்திரையை யார் வந்து கிழிக்கப்போகின்றார்கள் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி?

* நாடுகடந்த தமிழீழ அரசை ஆரம்பம் முதலே தமிழ் நெற் இணையத்தில் ஆசிரியர் பீடத்திலும் சங்கதி இணையத்தில் சேரமான் என கோசம்போடும் கோமாளி ஜெயா வும் அவரது கும்பலும் அதன் மக்களவையும் முட்கம்பி வேலி முகாமுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக என்ன செய்தனர். அத்தோடு தமிழ் மக்கள் தமது தலைமையில் உள்ளனர் என்ற தார்மீக உரிமையைப் நிலைநிறுத்த என்ன செய்தனர்? அவர்கள் மொழியில் சொல்வதானால் பிரபாகரன் என்ற மனிதனின் உயிரும் மாவீரரின் இரத்தத்தால் உருவான புலிக்கொடியையுன் அவர்கள் கைவிட்டால் அவர்களுக்கு வாழ முடியாது என்பதை உணர்ந்தே இந்த திருகு தாளங்களை செய்கின்றனர்.ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைஞர் குழுவினர் அவர்களைப் பார்வையிட அனுமதிகோரும் நீதி மன்ற மனுவில் தாயகத்தில் உள்ள மனித நேய பிரதிநிதிகளுடன் மனோ கணேசன் மற்றும் சிங்கள பிரமுகர்களும் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் அனால் இவர்கள் உருத்ராவையும் கே. பியையும் துரோகிகள் என சித்தரிப்பதிலேயே காலத்தைக்கடத்தினர்…….

இந்த மக்களவையின் மகான்கள் இன்னும் ஒரு சிறப்பான அரசியல் சாணக்கியமாக அது எப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக (? ) நடந்து உலகுக்கு நிரூபித்துக் காட்டினர் என்பதைப் பார்க்கலாம். தேர்தலில் போட்டியிட்ட முக்கிய இரண்டு வேட்பாளர்களுமே தமிழினத்தை வேரோடு வெட்டிச் சாய்த்து மாளாத துன்ப துயரத்துக்குக் காரணமான விளங்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஆவர். இப்படியான நிலையில் இந்த படித்த பித்தலாட்டக்காறர் தமிழ் மக்களின் நலன் பேணும் அமைப்பு எனில் எத்தகைய நிலையிலும் இவர்களுக்குத் தமிழரின் வாக்குகளைச் செல்ல விடாத வகையில் தமது தேர்தல் வியூகத்தை வகுத்திருக்க வேண்டும். அது ஒன்றில் இந்த இருவரைத் தவிர்ந்த மூன்றாவது வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி தமிழினத்தின் தன்மானத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும்.

இல்லையேல் தாமாக ஒரு வேட்பாளரை தமிழ் மக்கள் சார்பில் போடடியில் நிறுத்தி தமிழினத்தின் தனித்துவ அரசியலை உறுதி செய்து தனது அரசியல் கொள்கைப் பற்றினை வெளிப் படுத்தியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை மாறாக சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்து தமிழிரின் தனித்துவ அரசியல் கோரிக்கையையும் மரணக் குழியில் தமிழரைக் கொண்டே புதைத்து விட்டனர்.

தமிழரின் தன்னாட்சி தாயகம் சுய நிர்ணய உரிமை பற்றிப் புலிகள் இருக்கும் போது பேசிய கும்பல் உண்மையில் தமது சார்பில் ஒருவரை நிறுத்தி சிங்கள இனவெறி மேலாதிக்க அரசியலுக்கு மாற்றாக ஒன்றிணைந்த தமிழ் மக்களின் சமதர்ம சிங்கள ஆதரவுத் தளத்தில் உள்ள சிங்கள மக்களின் ஆதரவையும் பெற்று ஒரு மூன்றாவது அணி அரசியலுக்கு வழி சமைத்து இருக்க முடியும்.

* இவை எதுவுமே கருத்தில் கொள்ளாது கடந்த 100 ஆண்டுகளாக போற்றி வந்த தமிழ் மக்களின் தாயகம் தன்னாட்சி சுய நிர்ணய உரிமை போன்ற அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் கைவிட்டதோடு 30 வருடங்களாக இரத்தம் சிந்தி போராடிய புலிகளின் தியாகத்தை கொச்சப்படுத்தும் வகையில் வட்டுக்கோட்டை தீர்மானம் எனும் ஒரு வரலாற்று அவமானத்தை பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க முற்பட்டது. வட்டுக்கோட்டை தீர்மானம் பிழை என்று நாங்கள் சொல்லவில்லை வட்டுக்கோட்டை மீள் வாக்கெடுப்பு தவறென்று விமர்சிக்கவில்லை புலிகளின் போராட்டமே வட்டுக்கோட்டை தீர்மானங்களில் இருந்தே ஆரம்பமானது என்பதுவும் எங்களுக்கு புரியும், ஆனால் புலிகளின் உயிர் தியாகத்தை வட்டுக்கோட்டை மீள் வாக்கெடுப்பு மூலம் ஏன் அவமானப்படுத்துகின்றீர்கள் என்பதே எமது வாதமாகும், இவர்களின் இந்த கோட்பாட்டுக்கும் வரதராஜப்பெருமாளின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம்?

இந்த இலட்சணத்தில் புலம் பெயர் தமிழர் நாடுகடந்த அரசை பாதுகாக்க வேண்டும் தகுதிவாய்ந்தோர் முன்னே செல்லட்டும் எனக் கண்டனக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் ஆய்வாளர்களையும் ஊடக தர்ம வான்களையும் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. நீங்கள் சார்ந்த தமிழ் மக்களின் பால் நியாயமாக எதிர்பார்க்கப்பட வேண்டிய உங்களின் தார்மீகக் கடப்பாடும் வரலாற்றுக் கடமையும் உணர்ந்துதான் செயற்படுகிறீர்களா? என்பதே.

ஒரு காலத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி இந்திய முஸ்லீம்களின் நியாயமான அச்சங்களையும் சந்தேகங்களையும் உதாசீனம் செய்து இந்தியக் காங்கிரஸ் மட்டுமே இந்தியாவின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்கப்படவேண்டும் என வாதிட்டது. அதனை முஸ்லீம் லீக்கும் பிரித்தானிய அரசும் ஏற்கவில்லை. முடிவு இன்றுவரை ஒரே தேசமாக நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பை இந்தியா இழந்து மூன்று துண்டுகளாகித் தீராத பிரிவினைப் போருக்குள் சிக்கித் தவிக்கிறது.

காரணம் களச் சூழல் வேறு வேறாயினும் அதே குரலை விடுதலைப் புலிகளும் எழுப்பினர். ஆனால் அவர்களின் அரசியல் முன்னெடுப்புகளுக்கு அதுவே பெரும் குறைபாடாக உலக நாடுகளால் பார்க்கப் பட்டது. அண்மையில் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் தந்தை செல்வாவின் மைந்தன் சந்திரகாசன் ஏகப் பிரதிநிதித்துவம் ஏற்கப் பட முடியாத ஒன்று எனக் கூறியதாகச் செய்தி வெளியானது. உண்மையில் சர்வதேச அரங்கில் ஏகத்துவ சிந்தனை ஒரு வெறுக்கப்பட்ட கெட்ட சொல்லாக பார்க்கப்படுகிறது.

இப்போ டியூ. குணசேகரா சொல்லிவிட்டார் இது தமிழர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விடையம் என்றாலும் தீர்வு அனைத்துத் தரப்புக்கும் பொதுவானது எனவே ஏகப் பிரதிநிதித்துவம் ஏற்கமுடியாதது என்று. டட்லி, பிரேமதாசா காலத்திலிருந்தே சிங்களம் மேற் கொண்டுவரும் கொள்கை இதுதான். இவை தமிழருக்கான அமைதி வழி அரசியல் தீர்வு என்பது சிங்களத்தின் அகராதியில் இனி எப்பொழுதும் இல்லை என்பதையே காட்டுகின்றன. இந்நிலையில் மக்களவை வாக்குபதிவு மூலம் கிழிந்து நூலாகிக் கிழிந்து கிடக்கும் தமிழ் நெற் கும்பல். தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் என்றால் என்ன அர்த்தம் அறிந்தே வாதாந்தம் பாசவேண்டும் ? இல்லையேல் இவர்களை ஊரும் உலகும் கைகொட்டிச் சிரிக்காதா?

* போர்க் காலத்தில் தமிழ் ஊடகங்களின் மிகப் பெரும் பலவீனத்தை அவற்றில் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் வெளிப்படுத்தி விட்டன. அனைத்தும் சினிமாப்பட விமரிசனப் பாணியில் தமிழ் மக்களை மயக்க நிலையில் கொண்டு சென்றன. ஊணக அரசியல் விவகாரங்களும் நடைமுறைகளும் தமிழ் ஊடக ஆய்வுகளில் போதுமான அளவில் எடுக்கப்படாது அல்லது குறைபாடான கண்ணோட்டத்துடன் பார்க்கப் பட்ட நிலையே காணப் பட்டது. இதில் தமிழ் நெற் கணிசமாக பொய் சொல்லி உலகத் தமிழரையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாறியதை யாரும் மறந்துவிடமாட்டார்கள். இப்போது வாழ்வைக்காப்பாறத்துடிக்கும் சில முன்னாள் பா.உறுப்பினர்கள் சிலரும் இன்று தராக்கியை ந்னைவுகூறுவது ஆச்சரியமானது . இவர்களோடு ஒப்பிடுகையில் தராகி சிவராமின் ஆற்றலும் இழப்பும் தமிழ் சமூகத்துக்கு இமயத்துக்கு ஒப்பாகும். இத்தகைய இருளில் தமிழினம் தள்ளப் படவேண்டும் என்பதில் சிங்களம் காட்டிய தீவிரம் சிவராம் குமார் பொன்னம்பலம் ரவிராஜ் போன்றோரின் கொலைகளில் வெளிப்பட்டது. தமிழ் தேசியவாதிகளும் மற்றும் தமிழர் தலைமைகள் தகுந்த முறையில் இவற்றைக் கவனத்தில் எடுக்கத் தவறியதும் எமது தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

* இன்றுள்ள ஊனம் நிறைந்த ஊடகச் சிந்தனை வயப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்க்க தரிசனமான அரசியல் தலைமையும் இல்லாத நிலையில் வருங்காலம் என்னவாகப் போகிறது? ஏன் ?, என எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் காலத்தில் வாக்குப் பிச்சை கேட்பதோடு எமது அரசியல் முடிந்து விடுகிறது. ஆனால் இலங்கையில் தமிழினத்தின் அரசியல் எதிர்காலம் அந்தகார இருள் நிறைந்தே காணப்படுகிறது. இராணுவ கட்டமைப்பிலான அதிகார ஆட்சி முறையில் சிங்களக் குடியேற்றம் கலாச்சாரப் பண்பாட்டு இன அழிப்பு என்பன முழு அளவில் படு வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழரின் குரல் வளை நசுங்கிக் கிடக்கிறது.

புலத்தில் உள்ள மக்களிடையே உறுதியான அரசியல் தலைமை உருவாகும் சாத்தியப்பாடும் அரசியல் விழிப்புணர்வும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மனதில் நம்பிக்கையும் அற்றுக் காணப் படுகிறது. மொத்தத்தில் தமிழர்களின் அரசியல் தலைமைகள் தமிழரின் நம்பிக்கைக்கு உரியதாக காணப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. புலம் பெயர் தமிழர் சமூகம் தனது வரலாற்றுக் கடமையிலிருந்து தவறுமானால் தமிழினம் அழிந்து போன ஒன்றாகவே இருக்கும்.

தமிழகத்தில் தமிழினம் இருக்கிறது என்ற தெம்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவாக பலருக்கும் உள்ளது. அங்கேயும் கூட தமிழ் வாழவில்லை, தமிழன் வாழவில்லை. தமிழர் என்ற ஒரு இனம் அழிவது தெரியாமல் எப்படி அழிக்கப்பட முடியுமோ அதற்குச் சாட்சியமாக அன்றாடம் அங்கே அதன் கலை, மொழி, கலாச்சார பண்பாட்டு அழிபாடுகளால் அழிந்து போகிறது.

அடுத்த நூற்றாண்டில் இலங்கையிலும் இந்தியாவிலும் அழிந்து விட்ட தமிழினத்தின் எச்சங்கள் மட்டுமே காணப்படும். இந்த அவலத்துக்கு புலத்தில் தமது கடமை தெரிந்து நியாயமான கண்டனத்தின் மூலம் கடமை தவறும் அரசியல் தலைமைகளை சீர் செய்ய நினைப்பது ஒரு சிறப்புக் குணமாகப் பார்க்கப்பட வேண்டுமே அல்லாது பழி வாங்கப்பட வேண்டிய பாவிகளாகப் பார்க்கப் படுவது நல்ல நேர்மையான விமர்சனமாக அமையாது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • POOBALAN says:

    Every want leadership and selfish. Mr.Rudra is founder of TGTE Long live Rudra.
    Poobalan Toronto Canada

    May 9, 2010 at 04:15

Your email address will not be published. Required fields are marked *

*