TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்களின் குரலை மௌனிப்பதில் சர்வதேச யுத்த

ஈழத்தமிழர்களின் குரலை மௌனிப்பதில் சர்வதேச யுத்தக் கூட்டுறவு தொடர்கிறது.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு பாதுகாப்பு நிர்வாகத்துடன் இணைந்து கிழக்கும் மேற்குமான அரசுகள் ஓர் ஓரமித்த பாணியில் தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்வதும் நாடு கடத்துவதும், புலம் பெயர்வாழ் தமிழர்களை விசனத்துக்குட்படுத்துகின்றனர். இதில் குறிவைத்துத் தாக்கப்படுவோர் தேசியத்தில் உறுதியாகவும் அடிமட்டத்தில் அதற்காக உழைப்பவரும் ஆவர்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தமது அரசியல் அமைப்பை நிலைநாட்டும் இவ்வேளையில் இது நடைபெறுகிறது. இத்தகைய நடவடிக்கை தமிழ் மக்களின் போராட்டம் புத்துயிர் பெறும் அன்றோ (சர்வதேச சமூகத்திற்கு ஒரு தீர்வும் சாத்தியமில்லை என முன்கூட்டியே அறிவதனால்) அல்லது கொழும்பும் டில்லியும் சேர்ந்து ஒரு அரைகுறைத் தீர்வைத் திணிப்பதற்கான அறிகுறியோ எனப் புலம்பெயர் தமிழர்கள் வினவுகின்றனர்.

நாடு கடந்த அரசு எப்படி அமையப் போகிறது, தமிழ் நாடு தனது பங்கினை எப்படி ஆற்றப்போகிறது என்பதை பெறப்போகும் நிலையில் கொழும்பு முகங்கொடுக்க வேண்டிய முக்கியமானக் கேள்விகளாகும்.

ஈழத்தமிழர்கள் ஒரு பொழுதும் உலக அரசுகளின் வலுவுகளையோ அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களையோ தாக்கவில்லை. அவர்கள் பல தசாப்தங்களாக காலனித்துவ அரசால் உண்டாக்கப்பட்ட ஒரு கேடு கெட்ட அரசினால் மறுக்கப்படட தமது உரிமைகளையும், சரித்திரபூர்வமான தாயகத்தையும் மீட்பதற்கே போராடுகின்றனர்.

புலம் பெயர் நாடுகளில் வாழ் ஈழத்தமிழர்களும் தமது தாய்நாட்டு விடுதலையை மட்டும் நோக்கியே செயற்படுகின்றனர். ஆனால் உலக கூட்டணியினர் இதற்கு பரிசாக இனப்படுகொலையையே வழங்கினார்கள்.

2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் தமிழ்ப் போராட்டம் வேறொரு நாட்டிற்கும் எதிரானதல்ல என திட்டவட்டமாகக் கூறினார். தமிழர்களுக்கும் கொழும் அரசுக்கும் இடையே நீதியானத் தீர்வை வழங்குவதில் சர்வதேச சமூகம் சிக்குள்ளாகிறது எனப் பொட்டம்மான் கூறியுள்ளார். சிரேஷ்ட உறுப்பினரான பாலகுமாரனும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்களை நோக்கும்போது, அதே பிரச்சனை இன்னும் சர்வதேச கூட்டு முயற்சியுடன் தொடர்வதாக உள்ளது. போரின்பின் தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் செல்ல வேண்டும் என மொழியப்பட்டது. அதன்படி சுதந்திரமே தனக்கு வேண்டுமென அவர்கள் கூறினர். இதை புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் சுதந்திரமாக எடுத்துக்கூறினர்.

ஆனால், சர்வதேச கூட்டணியினர்க்கு அதுவும் ஒரு பிரச்சனையே. ஆவர்கள் கூற முயல்வது யாதெனில், இனப்படுகொலையை செய்யும் அரசு மொழியும் “சமாதானத்தைத்” தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்பதே. இது அடிமடிதலுக்கு ஒப்பாகும்.

துமிழரின் ஜனநாயக உரிமையை போலித்தனமாக ஏற்கும் சில ஜனநாயக நாடுகளின் அரசியல்வாதிகள், தமது அரசியல் அமைப்புகளைப் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக அல்லது வேறு வழியில் செலுத்த முனைகின்றனர்.

இந்நடவடிக்கை பயங்கரவாத எதிர்ப்பைப் போன்ற சாயலில் நடைபெறுகிறது. சுhம தான பேதம் ஆகிய எல்லா யுத்திகளும் முயற்சிக்கப்பட்டப் பின், தற்போது கைதுகள், மிரட்டல்கள், சில சமயம் கொழும்புக்கு நாடு கடத்தல் ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றின் நோக்கம் புலம்பெயர் தமிழ் மக்கள் சுதந்திரம் என்பதைக் கைவிடும்படி முயற்சிப்பதே ஆகும். கொழும்பு அரசு தனது போர் தற்போது புலம் பெயர் மக்கள் மீதே உள்ளது எனவும், கைதுகளாலும், நாடு கடத்தலாலும் இது வெற்றி பெறுவதாகவும் தம்பட்டமடிக்கிறது.

முன்பு கைதானவரைப் பாவித்துக் கிடைத்த தகவல்களுடன் புலம் பெயர் தமிழர்களில் இனஉணர்வாளர்களின் (புலிப்படை என்ற பெயரில்) சொத்துக்களையும் வலைப்பின்னல்களையும் ஊடுறுவதே கொழும்பு அரசின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும். இவ்விடயத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கோத்தபையே இராஜபக்ஷே கூறுகின்றார்.

போர்க் குற்ற விசாரணைபற்றிக் கூறும் அரசுகள், அதே குற்றம் புரிந்த இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதும் (இராஜதந்திரம் என்ற பெயரில்) தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் எனவும் பழைய குற்றங்கள் புரிந்தனர் எனவும், ஈழத்தமிழ் ஆhவலர்களைக் கைது செய்வது என்பது விந்தையிலும் விந்தையாகும். சுமீபத்தில் ஜெர்மனியில் கைதுகளும், நெதர்லாந்து, ஐ. ருhட்சியத்தில் தாக்குதல்களும் நடைபெற்றன. மலேசியா, சிங்கப்பூரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு நநடு கடத்தப்பட்டனர். உலகில் மற்றைய சில அமைப்புகளைத் தொட பயப்படும் இவர்கள், தமிழர்களை இலகுவாகக் குறிவைக்கிறார்கள்.

இந்தியாவில் சுகயீனமாகச் சென்ற பிரபாகரனின் தாயார்க்குக் காலையில் விசா வழங்கிவிட்டு, அவரை மாலை திருப்பி அனுப்பிவிட்டார்கள். மலேசியாவில் அவருடன் கூட சென்றப் பெண்ணை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

புலம்பெயர் தமிழ் வட்டாரங்கள், தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறையை மாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றனவா என ஐயப்படுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஓர் அரசியல் ஆய்வாளர், கொழும்பு அரசு புலம்பெயர் வாழ் தமிழரின் கொள்கைகள் சிலவற்றை நோக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இவற்றை நோக்கும்போது, உண்மையில் போர் முடீவுற்றுவிட்டதா அல்லது அதர்ம நெறியில் வென்ற யுத்தத்தால் வந்த வெறி தொடகிறதா என்ற ஐயப்பாடு நிலவுகின்றது. இந்த சக்திகள் ஒரு திருப்திகரமான முடிவைக் கொண்டுவர முடியாமையால், இன்னும் ஒரு போராட்டத்தை எதிர் நோக்குகின்றனர் என்பதே இவற்றின் அறிகுறி என நினைக்கின்றனர். தமிழ் நாட்டில் நடைபெற்றதுப் போல் தமிழீழத்தின் மேல் ஒர் மறைமுகத் தடை வருவது சாத்தியமெனச் சமிக்ஞைகள் உள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர்.

சில அரசியல் நோக்கர்களின்படி, கொழும்பு, இந்தியா, மேற்கு நாடுகள் ஆகியன ஒரு தீர்வை திணிப்பதற்கு இதுவே தருணம் என நோக்கலாம். இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையாளர்கள் வடக்கு-கிழக்கை இணைப்பதை மறக்கும்படியும், கிழக்கிலுள்ள இனச் சமன்பாடு வடக்கிலும் வித்தியாசமானது என எழுத முற்பட்டுள்ளனர்.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளின் தோல்விகளுக்கு ஈழத் தமிழர்கள் பழிவாங்கப்படலாம். துமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தை ஆதரித்தபின், தமிழ் மக்களை (சிங்களவர்களுடன்) “ஒன்றுசேர” உதவுவதாக எதிர்ப்பார்க்கிறார்கள்.

யுத்தத்தின்பின், அதற்கு முன்பு இருந்த சிறு சலுகைகளையும் வடக்கு-கிழக்கில் இருக்கும் மக்கள் இழந்தனர். விடுதலைப் புலிகள் வன்னியில் இருந்த போது இருந்த பயத்தினால், அந்நேரம் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கவில்லை.

தமிழ் மக்களின் சுதந்திர கோரிக்கையைக் கைவிட்டாலும், சமஷடியையும் பிரிவினை என்ற வாதத்தில் இலங்கை அரசு தடை செய்கிறது. சமஷ்டி கோருவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், அத்தகைய அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு நல்ல படிப்பினையாகும்.

உலக கூட்டமைப்புகள் தற்போது என்ன உணர வேண்டுமெனில், இலங்கை அரசு தானாகவே (தமிழர்கள் ஏற்றகக்கூடிய) தீர்வுக்கு வராவிடின், ஒன்றில் இன்னுமொரு விடுதலைப்புலி அமைப்பு அல்லது உறுதியான தீர்க்க முடிவுள்ள சர்வதேச நடவடிக்கை அமைந்தே ஆகவேண்டும். கொழும்புவை சமாதானப்படுத்தும் பொருட்டு சர்வதேசச் சமூகம் தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதை இனிமேலும் தொடர முடியாது.

இத்தகைய நோக்குடன் புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு கடந்த தமிழ் அரசின் முக்கியதத்துவத்தை உணர்ந்து, எமது தேசியத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்ற அபேட்சகர்களைத் தெரிவுச் செய்ய வேண்டும். ஆதேபோல, தமிழ் நாட்டு மக்கள் எடுக்கும் முயற்சிகளும் முக்கியப் பங்கினை வகுக்கும் என்பது நிச்சயம்.

(இக்கட்டுரை Tamilnet – ல் வெளியான International War Corporatism continues silencing Eealam Tamils என்ற ஆங்கிலக் கட்டுரையினைத் தழுவிய மொழியாக்கம்)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*