TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உரிமைப் போராட்டத்தினை சிறீலங்கா அரசு: சம்பந்தன்

உரிமைப் போராட்டத்தினை சிறீலங்கா அரசு பூண்டோடு அழித்தமைக்கு பாராட்டு: சபையில் சம்பந்தன்.

கடந்த ஏப்பிரல் 08 ம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் போட்டியிட்டு 14 ஆசனங்களைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடந்த 22-4-2010 அன்று 7 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்றது. அன்றய தினம் புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகரை தெரிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது. புதிய சபாநாயகராக மகிந்தராஐபக்சவின் உடன் பிறந்த சகோதரரான சமல்ராஐபக்ச அவர்கள் சபாநாயகராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர். அவ்வாறு உரையாற்றியவர்களில் சம்பந்தன் அவர்களும் அடங்குவார். சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் பொழுது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசாங்கத்திற்குத் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு யுத்தத்தை அரசு முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு சம்பந்தன் வாழ்த்துத் தெரிவித்துள்ளதன் மூலம் தமிழ் மக்களது உரிமைக்காக முப்பது ஆண்டுகளாக போராடிய விடுதலைப் புலிகளை அழித்தமையை ஏற்றுக் கொண்டு அதற்கே சம்பந்தன் வாழ்த்துத் தெரிவித்தள்ளார்.

அத்துடன் புலிகளால் நடாத்தப்பட்ட அந்த போராட்டம் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதப் போராட்டம் என்று ஒப்புக் கொள்ளும் செயலாகவும் சம்பந்தனின் உரை அமைந்துள்ளது. தமிழ்த் தேசத்தின் நடைமுறை அரசு சிங்கள தேசத்தினால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் சிங்கள தேசத்தினால் அடிமையாக்கப்பட்டமையையே சம்பந்தன அகமகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம், இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு அந்த அடிப்படையிலும் ஐரோப்பியர்களிடம் 1505 ல் தனது இறைமையை இழப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆட்சி செய்தவர்கள் என்ற அடிப்படையில் அன்னியர்களிடம் இழந்த இறைமையை மீட்டெடுத்து சுநத்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு ஒன்றினை உருவாக்க இளைஞர்கள் சகல கடுமையான வழிமுறைகளையும் கையாண்டு போராட வேண்டும் என 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேச்த்தின் இறைமைக் கோரிக்கைகளை தாம் கைவிடவில்லை என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் மேடை மேடையாக பிரசாரம் செய்தது கூட்டமைப்பு.அவ்வாறு சுயநிர்ணய, உரிமை, இறைமை என்பவற்றினை வலியுறுத்தி கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில்1977 ம் ஆண்டு மக்களாணையின் பிரகாரம் தமிழ் மக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை என்பவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட தமிழீழ நடைமுறை அரசை சிறீலங்கா அரசு அழித்தமையை தமிழரசுக் கட்சி வழி வந்த அதன் வாரிசு என்று கூறிக் கொள்ளும் சம்பந்தன் எவ்வாறு பாராட்டியிருக்க முடியும்.

சம்பந்தனின் இச் செயல் அவரது கட்சித் தலைமையின் 1976ம் ஆண்டு தீர்மானத்தையும், 1977 ம் ஆண்டு மக்களாணையையும் மீறும் செயல் இல்லையா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற பின்னர் திருகோணமலையில் இடம் பெற்ற அதன் முதலாவது கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டு இவ்வாறு வாழத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டதா?

அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு 14 உறுப்பினர்களும் அங்கீகாரம் வழங்கினரா?

யாரை திருப்பதிப்படுத்த சம்பந்தன் இவ்வாறு பாராட்டினார்?

இதற்காகவா தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தனர்?

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு இவ்வாறு துரோகம் இழைக்கும் என்று உணர்ந்மையினால்த்தான், 80 வீதமான தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தனர்?

சங்கதிக்காக கபிலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*