TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பசி, பட்டினியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் செயற்றிட்டத்திலும் சிறீலங்கா வெற்றி கண்டுள்ளதாம்

Saniyan Sakadaiபயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, நாட்டு மக்களை பசி, பட்டினியிலிருந்து பாதுகாப்பதை நோக்காகக் கொண்ட “பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனப்படும் மூன்று வருட வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் சிறந்த வெற்றியடைந்திருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலக உணவு நெருக்கடி தொடர்பிலான சிக்கல்களை அறிந்து கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே அதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கிய அரசாங்கம் இன்று விவசாயத்துறையில் எழுச்சி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியாவில் ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியா செயலகத்தில் நிலுவையாக உள்ள பணத்தைத் தாமதமின்றி வழங்குமாறு கோரியே இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

சமைத்த உணவு வழங்கிய வகையில் சுமார் 250 மில்லியன் ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இன்னமும் அவற்றை செலுத்தமுடியாமல் இருக்கும் போது, “பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற வேலைத்திட்டம் வெற்றியடைந்திருப்பதாக மகிந்த சொல்வது கேலிக்கூத்தாக இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்னர்.

தொடர்புபட்ட செய்தி:

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*