TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“ஏப்ரல் 9” பலருக்கு விடை பகரும்…….?

களத்திலிருந்து நேரடி அனுபவப்பகிர்வு

* ராஜபக்ஜவின் வெற்றிக்காலம் என்பதைதான் இவை எல்லாவற்றிலும் உணருகின்றேன். இதற்காக இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் ஏறியிருந்து குந்திக் கூத்தாடும் தமிழ் அரசியல்வாதிகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் புலிகள் இருந்தால் வாலையும் கொம்புகளையும் சுருட்டி வைத்திருப்பார்கள் என்பதுதான் எனக்கு தோன்றுகிறது. இதைத்தான் இங்கு பலரும் கூறுகிறார்கள்.

எனக்கு மிகுந்த வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பது யுத்தம் நடந்து முடிந்த இந்தச் சில மாதங்களில் எம்மிடம் இத்தனை மாறாட்டங்களும் நடவடிக்கைகளும் ஏற்பட்டிருப்பதுதான். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பேரதிஷ்ட காலம் ஒன்று நிலவுகிறது. போரிலும் வெற்றி, தமிழ் மக்களின் கட்சிகளை அழிப்பதிலும் வெற்றி. இலவசமாக மகிந்த எதிர்பார்ப்பதை நிறைவேற்ற துடிக்கும் எழுச்சியாளார்கள். நான் அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தை சுற்றிச் சுற்றி வருகிறேன். எனது அனுபவங்களும் அதன் எதிர் வினைகளும் மக்களின் மனநிலைகள்தான். தேர்தல் எமது அரசியல் தலைமைகளை என்ன பாடு படுத்துகின்றது என்பதை பார்க்கும் பொழுது பரிதாமாகவும் இருக்கிறது. அதற்காக அவர்களுக்கு வருணங்களையும் சுவரொட்டிகளையும் வாக்குறுதிகளையும் கண்டு பிடிக்க பல நடவடிக்கைகள் நடக்கின்றன.

யாழ்ப்பாணம் சுவரொட்டிகளின் மயமாகியிருக்கிறது. எல்லாச் சுவர்களும் மதில்களும் சுவரொட்டி ஒட்டி மறைக்கப்பட்டுள்ளன. கடைக்கு மேலே அந்நாந்து கூட பார்க்க முடியாது. நிலத்தில் பார்த்தால் வீதி வீதியாக பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள். இவற்றை பாடம் பண்ணியது போய் பைத்தியம் பிடிக்கும் நிலமைதான் இங்கிருக்கிறது. கிழித்து எறியப்பட்ட சுவரொட்டிகள் கால்களில் மிதிபடுகின்றன. ஒன்றின் மேல் ஒன்றாய் சுவரொட்டி மேடாக சுவர்கள் மாறி விட்டன.

* ராஜபக்ஜவின் வெற்றிக்காலம் என்பதைதான் இவை எல்லாவற்றிலும் உணருகின்றேன். இதற்காக இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் ஏறியிருந்து குந்திக் கூத்தாடும் தமிழ் அரசியல்வாதிகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் புலிகள் இருந்தால் வாலையும் கொம்புகளையும் சுருட்டி வைத்திருப்பார்கள் என்பதுதான் எனக்கு தோன்றுகிறது. இதைத்தான் இங்கு பலரும் கூறுகிறார்கள். யுத்தம் நடந்தது. தமிழ் மக்கள் எந்த வேறபாடுகளும் மனிதாபிமானமும் அற்றபடி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களின் உயிர்களை வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. அழிவின் தடயங்களில் தான் இந்தத் தேர்தல் நடக்கிறது. அந்த அழிவையும் கண்ணீரையும் வைத்துதான் ராஜபக்ஷ தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்கு தேர்தலை நடத்துகிறார். அதை நன்கு புரிந்த நாமும் ராஜபக்ஷ மாதிரி நமக்கான அதிகாரத்தை தக்க வைக்க மிக கச்சிதமாக செயல்படுகிறோம் என நினைக்கிறேன்.

ராஜபக்ஷ தேவையில்லை நாம் எதிர்ப்பதற்கு. நம்முடைய ஆட்களை நாமே திட்டி தீர்க்கும், வசைபாடும், நகைக்கும், நய்யாண்டி செய்யும் கோட்பாடுகளை அழகாக மகிந்த சிந்தனையைப் போல தயாரித்து விட்டோம். தமிழர்களின் போராட்டம், தமிழ் மக்களின் வாழ்வு என்றெல்லாம் கவலையில்லாத நிலை. பிள்ளை இல்லாத வீட்டில் எலி துள்ளி விளையாடும் என்ற மாதிரிதான் எல்லாவற்றையும் பார்க்க இருக்கிறது. சுவரொட்டிகளும் விளம்பரங்களும் மிகுந்த மனக்காய்ச்சலின் அடிப்படையில் இருந்து வெளியில் புறப்படுகின்றன. யாருக்கு வாக்களிக்க வேணும்? யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை எல்லாம் வேட்பாளர்களாகவே போட்டு உடைக்கிறார்கள். 3500 ரூபா சம்பள உயர்வு தேவை என்றால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு யானைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று விஜயகலா மகேஸ்வரன் பத்திரிகைகளில் விளம்பரம் போட்டிருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு போராட்டம் என்பது பற்றியெல்லாம் இவ்வளவுதான் அவர் புரிந்து கொண்டிருக்கிறார். தேனீர்கடையில் எனக்குப் பக்கத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஓட்டோ ஓடும் தெரிந்த மூதாளர் ஒருவர் இதைப் பாத்து சிரித்தார். இப்ப பத்திரிகைகளில் செய்திகளை விட விளம்பரங்கள் தான் அதிகமாக வருகின்றன. விளம்பரங்களில் எதை வேண்டுமானாலும் பேசலாம் போடலாம் என்பதால் வேட்பாளர்கள் விளங்பரங்களில் போட்டுத் தாக்குகிறார்கள். விஜயகலா பாவம் என்று சில நாட்களின் முன்பு யாரோ கதைத்த ஞாபகம் இருந்தது. அப்பொழுது அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கவில்லை. விளம்பரம் போடவில்லை. இப்ப நிலை கந்தலாகி விட்டதுபோல உள்ளது.

* மற்றவர்கள் எதைப் பேசினாலும் அதை மறுப்பது தான் நம்மட வேலை என்று சில கட்சிகள் செயற்படுகின்றன. பக்கத்தில உள்ள கட்சியில் இருந்து முரண்பாட்டை எடுத்து அதிலிருந்து அரசியலை அவர்கள் தொடங்கி இருக்கின்றன. கஜேந்திரகுமார் அணியினர் இப்பொழுது தான் தானைத் தலைவன் என்றும் தமிழ் தேசியம் அதில் தாகம் கொண்டவன் என்றும் எவ்வளவு மோசமாக தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். தேர்தல் வரும் வரை நோர்வேயில் வாழ்ந்த கஜேந்திரன் இப்பொழுது யாழ்ப்பாணத்திற்கு வந்து வன்னிப் போரில் வாழ்ந்தேன் புலத்தில் போராட்டங்களை நடத்தினேன் என்று பம்மாத்து விடுகிறார். விலைபோகாதவன் விடுதலை வீரன் என்றெல்லாம் கஜேந்திரன் பேசும் பொழுது சரிப்பாகத்தான் இருக்கின்றது. அவரை நாடாளுமன்றம் அனுப்பிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களே இன்று அவரை திட்டித் தீர்பதாகவும் அவருக்கு எதிராக பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். பல மாணவர்களை தெருவுக்கு கொண்டு வந்து பலியாக்கி விட்டு நோர்வேக்கு சென்றது எல்லோருக்குமே தெரிந்தது.

* கஜேந்திரனுக்கும் பத்மினிக்கும் ஆசனம் கொடுத்திருந்தால் கஜேந்திரகுமாருக்கு கொள்கையில் பிரச்சினை வந்திருக்காது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். கஜேந்திரகுமார் இந்த தேர்தலை அறிவித்த உடன் அவசர அவசரமாக இலங்கைக்கு பயணம் பயணம் செய்தார். ( இப்படி சொல்லுவது தான் பெருத்தமாக இருக்கும் வெளிநாட்டிலிருந்து அவர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது ) இங்கு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளது என்று தன் கரி அடிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார். நாம் ஒற்றுமையில்லாமல் மாறி மாறி ஆசனங்களில் இருந்ததினால் தான் போர் இன அழிப்பு எல்லாமே மகிந்தவுக்கு சரி சிங்கள அரச தலைவர்களுக்கு சரி மிக இலகுவாக நடத்த முடிந்தது. இதை எல்லாம் தெரிந்தும் கஜேந்திரகுமார் நவீன பிளவொன்றை ஏறபடுத்தியிருக்கிறார். இது ஜி.ஜி பொன்னம்பலம் முதல் குமார் பொன்னம்பலம் என்று வரலாறு முழுக்க அப்படி உடைப்புகள் நடந்தபோல இப்ப அதையே பொன்னம்பலங்களின் வழியில் வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்திருக்கிறார். அப்பா தாத்தாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார். இது சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து.

இன்னொரு பக்கத்தில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு போட்டியாக வெற்றிலைக்குள் வெற்றிலையை நிறுத்தி உள்ளார் மகிந்த. எல்லா பக்கங்களாலும் டக்கிளசுக்கு சங்கடங்கள்தான். இந்த சுவரொட்டி யுத்தத்தில் அங்கஜனும் அமைச்சர் டக்கிளசும்தான் அதிக சுவரொட்டிகளை யாழ்ப்பாணத்தில் ஒட்டியிருக்கிறார்கள். சுவரொட்டிகளை முழுக்க நம்பியிருக்கும் இவர்கள் சந்து பொந்து எல்லாவற்றிலும் ஒட்டி தாராளமாக செலவழிக்கிறார்கள். இந்தப் பணத்தை மக்களுக்காக செலவழித்திருக்கலாம். தங்களில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனும்போது தான் இப்படி செலவு செய்ய வேண்டியுள்ளது. அனால் டக்கிளஸ் இவ்வளவு செய்தும் ஏன் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவரே காட்டுகிறார் இப்படி.. அடையாளம் என்பது அவசியமில்லை. அப்படி பேசக்கூடாது என்றெல்லாம் டக்ளஸ் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார். அவர் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து இன்று எங்கோ போய்விட்டார். ஆனால் எதைப்பெறுவதற்காக இப்படி விட்டுக் கொடுக்கிறார் என்பது நமக்கு தெரியும். எதுவுமே நடைபெறாது என்பதை மகிந்தா காட்டுகிறார். புலிகளை அழிக்கும் வரை யுத்தத்தை நடத்தும்வரை அமைச்சர் டக்ளசும் நல்லா ஒத்துழைப்பு கொடுக்க மகிந்த அதைப் பயன்படுத்தினார்.

* ஆனந்தசங்கரி . அவரே தன்னைத்தான் உடைச்சிட்டார். பாவம் கிழவன். வயது போன நேரத்திலும் பாராளுமன்றம் போய் தமிழர் உரிமைக்காக போராட ஆசைப்படுகிறார். பிரபாகரனுக்கு எழுதின கடிதங்கள் என்று வெளியிடுபவைதான் அவரது விளம்பரங்கள். யுத்தத்தை நல்லா நடத்துங்க, புலியை அழியுங்கள் என்று கூறியவர் இன்று பேராளிகளை காப்பாற்றியிருப்பேன் என்று சொல்லுகிறார். கன பேர் இப்பதான் இப்படி கதைகளை வெளியிடுகிறார்கள். ஞானங்கள் அந்தரங்கங்கள் எல்லாம் வெளி வருகின்றது.

கஜேந்திகுமார் தலமைப் பதவிக்காக பிரிந்ததாகத்தான் பலர் பேசுகிறார்கள். இப்பொழுது கஜேந்திரகுமாரும் தனித் தலைவர்தானே. அதன் பிறகும் இப்பொழுதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்கள் காப்பாற்ற வேண்டும். 12 வேட்பாளர்களில் யாராவது பிரச்சினையானவர் என்றால் 3 பேரை தவிர்க்கலாம் என கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். கூட்டமைப்பு கடந்த காலங்களில் என்ன செய்தது என்பது முக்கியமல்ல இனி என்ன செய்யப் போகிறது என்பதுதான் முக்கியம். சலுகைகளை தமிழ் மக்கள்; விரும்பவில்லை கௌரவமான, உரிமையுடன் கூடிய வாழ்வை எதிர்காலத்தைதான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அண்மைய தேர்தல் முதல் எல்லா நடவடிக்கைகளிலும் மக்கள் காட்டியுள்ளார்கள். புலிகள் இல்லாத சூழலில் தமது பணி என்ன என்பதனை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களின் மத்தியில் அரசியல் செய்வது என்பது கயிற்றில் நடப்பதைப்போன்றதாகும். எந்த உள் மனநிலைகளையும் தமிழ் மக்கள் கண்டு பிடித்து விடுவார்கள். எங்களின் அரசியல் வாதிகள் எத்தனை விளையாட்டுக்களை காட்டியுள்ளார்கள். அனைத்தும் மக்களது வாய்களில் அடிபடுகின்றன.

கொள்கையில் உறுதியாக இருக்கிறம் அதை யாருக்காகவும் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியதில்லை மக்களுக்கு தெரியும் என்றெல்லாம் கூட்டமைப்பு கூறுகின்றது. கூட்டமைப்புக்கு வரலாற்று பாத்திரத்தை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் தமிழ் நாட்டு அரசியல் மாதிரி அல்ல என்பதுதான் பெரிய வித்தியாசம். ஹெல ஊறுமயக்காரர்களும் கூட்டமைப்புக்கு எதிராக கூச்சல் போடத் தொடங்விட்டார்கள்.

புலிகள் விட்ட இடத்தில் இருந்து கூட்டமைப்பு ஈழ போராட்டத்தை முன்னெடுக்கிறது என்று ஹெல உறுமய சொல்லுகிறது. அதை மாதிரியே விமல்வீரவன்ச சொல்லுகிறார். இதில் ஹெல உறுமய சொல்லுறது உன்மையா? கூட்டமைப்பு சொல்லுறது உன்மையா? கஜேந்திரகுமார் அணி சொல்லுறது உன்மை? அல்லது போனால் அமைச்சர் டக்கிஸ் சொல்லுவதை கேட்பதா? விஜகலா சொல்லுவதைக் கேட்பதா? ஒரு வீடே பத்தாய் பிரிஞ்சு வாக்களிக்கப்போறம் என்று நக்கலாக வடமராட்ச்சி; பள்ளிக்கூட அதிபர் ஒருத்தர் சொன்னார்.

* சுயேட்சை கட்சிகளும் நல்ல வாக்குறுதிகளுடன் கிளம்பி விட்டன. சந்திக்கு சந்தி தெருவுக்கு தெரு என்று ஆட்கள் வெளியில் இறங்கி நிற்கிறார்கள். அவர்களில் சிலர் பேசும் அரசியல் தந்திரேபாயம் என்பன சிரிப்பை தருகின்றன. இதில் ஜனாதிபதியின் கையை பலப்படுத்த அவருடன் நான் இணைந்திருக்கிறேன் என்ற வாசகத்துடன் செங்கை ஆழியானும் புறப்பட்டுள்ளார். இதைவிட நாங்கள் சீரழிந்திருப்பதற்கு வேற என்ன உதாரணத்தை சொல்ல முடியும்? எனக்கு இப்பொழுது 54 வயது ஆகிறது. இந்த மாதிரி ஒரு தேர்தலை நான் பார்க்க இல்லை. இப்படி நாங்கள் சீரழியவில்லை. மகிந்த இறங்கி விளையாட யாரும் மைதானம் அமைத்துக் கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். என்னதான் யார் தான் முறிந்தாலும் அவர்கள் எடுக்கும் முடிவுதான் எல்லாவற்றையும் இனி தீர்மானிக்கும்.

யாழிலிருந்து சீவரத்தினம் மகாலிங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*