TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்!

முள்ளிவாய்க்கால் பேரவலங்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திய அரசு மீதான அதிருப்திகள் அதிகரித்தே செல்கின்றது. சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழீழ மக்கள் மீது இந்திய அரசு தொடுத்த மனிதாபிமானமற்ற போர் மட்டுமல்ல, அதற்குப் பின்னரான சிங்கள அரசின் அத்தனை கொடூரங்களையும் சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த இந்திய அரசு தொடர்ந்தும் முன்நிற்பது ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு இந்திய அரசு மீது கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனைப் பகிரங்கமாகப் பதிவு செய்தும் வருகின்றார்கள்.

ஈழத் தமிழர்களின் மனங்களில் பெருகி வரும் இந்திய விரோத நிலை குறித்து இந்தியாவும் தற்போது கவலை கொள்ள ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்களின் இந்திய வெறுப்புநிலை உச்சம் பெறும் பட்சத்தில், சிங்கள தேசத்தின்மீதான இந்தியப் பிடி கேள்விக்குறியாகக் கூடிய அபாய நிலை குறித்தும், இதனால் உருவாகக்கூடிய எதிர்கால விளைவுகள் குறித்தும் இந்திய உளவுத் துறைகள் பலமாக ஆராய்ந்துள்ளன. அதற்காக ஈழத் தமிழர்கள் மீது சில உளவியல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர்களால் இந்தியாவைப் பகைத்து, இந்தியாவை மீறி என்னதான் செய்துவிட முடியும்? என்று எம்மில் சிலர் நினைப்பது போலன்றி, இந்தியா இது குறித்து அதிக அக்கறை எடுக்க ஆரம்பித்துள்ளது.

அதிக அக்கறை என்றால். ஏதோ இந்தியா மனம் திருந்தி ஈழத் தமிழர்களுக்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறது என்ற அர்த்தம் அல்ல. ஈழத் தமிழர்களது இந்தியா மீதான கோபத்தையும், வெறுப்பையும் வேறு திசையில் திருப்பிவிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவும், சிறிலங்காவும் எதிர்பார்த்தது போல் முள்ளிவாய்காகலுடன் அத்தனையும் முடிவுக்கு வந்துவிடவில்லை. சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக வெளியிடப்பட்ட செய்திகள், ஆதாரங்கள் அத்தனையையும் தமிழ் மக்கள் நிராகரித்ததுடன், அது குறித்துப் பேசுவதையும் தவிர்த்து வருகின்றனர். தேசியத் தலைவர் அவர்களது மரணத்தை உறுதி செய்து விடுதலைப் புலிகளின் சர்வதேசங்களுக்கான தொடர்பாளர் கே.பி. அவர்கள் வெளியிட்ட அறிக்கையையும் அவர்கள் உதாசீனப்படுத்தியிருந்தார்கள். அதே போல், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் குறித்த இந்த இரு தேசங்களின் அறிவித்தல்களையும் தமிழீழ மக்கள் நிராகரித்தே வருகின்றனர். இது சிங்கள – இந்திய அரசுகளின் இலக்கை நிர்மூலம் செய்து வருகின்றது.

தேசியத் தலைவர் அவர்கள் குறித்த பரப்புரைகளை நிராகரித்த புலம்பெயர் தமிழீழ சமூகம், அவரது பாதையில் தொடர்ந்து பயணித்து இறுதி இலக்கினை அடையும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்கள் பேரவைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்குப்பதிவு, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றது. இது, ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் இந்திய ஆதரவு தளத்திலிருந்து பிரித்து, மேற்குலகை நோக்கிச் சாய வைத்துள்ளது.

ஈழத் தமிழர் தமது கைகளில் இருக்கும்வரை மட்டுமே இலங்கைத் தீவில் தனது நலன் காக்கப்படும் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே புரியும். இதன் காரணமாகவே, ஈழத் தமிழர்கள் தன்னை விட்டு விலகிச் செல்லா வண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆயினும், தற்போதுள்ள அரசியல் கள நிலையும், அந்த மக்களது மனநிலையும் தமக்;குச் சாதகமானதாக இல்லை என்பதை இந்தியா உணர்ந்தே வைத்துள்ளது. அதனால், இந்தியா ஈழத் தமிழர்கள் மீது பல்வேறு உளவியல் யுத்தங்களை மேற்கொண்டுள்ளது.

1) தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை தீவிர தமிழ்த் தேசிய விடுதலை அமைப்பாகத் தமிழீழ மக்களை நம்ப வைப்பது. தேர்தலில் வெற்றிபெற வைப்பது.

2) தமிழீழ மக்கள் மத்தியில் பெருகிவரும் இந்திய எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கும் விதமான செய்திகளை உருவாக்கிப் பரப்புதல்.

3) புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலம் பெற்று வரும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவற்றிற்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைத்தல்.

ஆகிய மூன்று இலக்குக்கள் குறித்த நகர்வுகளை அவதானிக்க முடிகின்றது.

அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேர்ணல் ஹரிகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிலையில் இறுக்கமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதும், தமிழ்த் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையிலான சுயாட்சியை வலியுறுத்தி, வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் கடும் போக்காளர்களான த.தே.கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண வலிந்து தெரிவித்துள்ளதும் இந்த முதலாவது இலக்கை நோக்கிய இந்திய நகர்வாகவே கருதப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து பத்து மாதங்கள் கடந்த நிலையில், இந்திய ஊடகங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் ஆகியோர் குறித்த தகவல்கள் திடீர் முளைப்பும், முக்கியத்தவமும் பெற்றுள்ளன. கடந்த பல மாதங்களாக இந்த இருவரும் ‘இல்லை, இல்லவே இல்லை’ என்ற கோதாவில் தமிழீழ மக்களை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா அரசுக்கு ஒத்தூதிய இந்திய அரசு இப்படி ஒரு தகவலைக் கசிய விட்டதில் நிச்சயம் உள் நோக்கம் இருக்கவே செய்கின்றது. அதுவும், தமிழீழ மக்களது முக்கிய இரு தலைவர்கள் குறித்த செய்தியை இந்தியப் பத்திரிகைகள் அறிந்து கொண்டதும், அதனை முதன்மைப் படுத்தியதும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு உளவியற் போர் வியூகமே. தமிழீழ மக்கள் எதை நம்புவது? எதை நம்ப மறுப்பது? என்ற குழப்பத்தில், தமக்கு முன்பாக உள்ள பெரும் பிரச்சினையிலிருந்து கவனத்தை மாற்றுவதற்கான தந்திரோபாயத்தைக் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. இது இரண்டாவது உளவியல் தாக்குதல்.

மூன்றாவதாக, முள்ளிவாய்க்கால் பேரிழப்பிற்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கான பலமாக உருவாகி வரும் உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகிய இரண்டு அமைப்புக்கள் மீதான தாக்குதல். இது பிரித்தாளும் தந்திரம் ஊடாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றை முதன்மைப்படுத்துவதன் மூலம் இரண்டிற்கிடையேயும் முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைப்பது என்பது இந்தத் தாக்குதலின் இலக்கு. அண்மைக் காலங்களில் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த பிரமிப்பான செய்திகள், கருத்துக்கள் இந்திய, சிங்கள ஊடகங்களில் வருவதை அவதானிக்கலாம். ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற அற்புதமான தமிழ்த் தேசிய போராட்ட வடிவம் தற்போதுதான் செயல்பட ஆரம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து அதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடைக்காது.

அதே போன்றே, ஏற்கனவே உருவாக்கப்பட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பை புலம்பெயர் தேசங்கள் எங்கும் முன்னெடுத்து, வரலாற்றுப் பதிவைப் புதுப்பித்து பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் ஆகியோரை அழைத்து முதலாவது மாநாட்டை நடாத்தி சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, போர்க் களத்தில் நிற்கும் உலகத் தமிழர் பேரவையையும் புறந்தள்ள முடியாது. நாடு கடந்த தமழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களது வார்த்தையில் சொல்வதானால், இந்த இரண்டு அமைப்புக்களும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான இரட்டைக் குழல் துப்பாக்கி. இவற்றிற்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிச் சிதைக்கும் நோக்கோடு மூன்றாவது தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களது விருப்பு வெறுப்புகள்மீது இந்தியா இவ்வளவு அக்கறை கொள்ளுமா? என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயமே. ஆனாலும், இந்திய வல்லாதிக்க நலன் பேண இலங்கையில் கால பதித்திருந்த இந்திய சமாதானப் படை காலத்தில் விடுதலைப் புலிகள் அதிர்ச்சிகரமான ஒரு நகர்வை மேற்கொண்டிருந்தனர். ஈழத் தமிழர்கள் மீதான இந்தியக் கொடுங் கரங்களை அகற்றுவதற்கு விடுதலைப் புலிகள் தமது எதிரியான சிங்கள தேசத்தின் ஜனாதிபதி பிரேமதாசவுடன் சமரசம் செய்து கொண்டதையும், அதன் காரணமாக இந்தியப் படைகள் அவமானத்துடன் வெளியேறிச் சென்றதும் பாடம் படிக்க வேண்டிய வரலாறு.

தற்போதும், ஈழத் தமிழர்களது நிலை அவ்வாறேதான் உள்ளது. இந்தியக் கொடுங் கரங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள அவர்கள் மேற்குலகின் பக்கமோ, அல்லது சிறிலங்காவுடனான நேரடி சமரசங்களிலோ ஈடுபட்டால் நிலமை விபரீதமாகிவிடும் என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. மேற்குலகினதும், சர்வதேச அமைப்புக்களினதும் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிங்கள தேசம் இந்திய நலன்கள் சார்ந்து ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்காமல் தொடர்ந்து பயணிக்க முடியாது. ஒரு புள்ளியில் நின்று நிதானிக்க வேண்டிய நிலை நிச்சயம் உருவாகும். அந்தப் புள்ளியில் இந்திய பிரசன்னம் என்பது தேவையற்றதாகிப் போய்விடும் என்பதே இந்தியக் கவலையாக உள்ளது.

நன்றி:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
  • John says:

    India should be very careful now. You are worried about the neighbours who are unfaithful to you (China, Bhutan, Pakistan, Bangaladesh, the real wolf Srilanka etc.) but now you should worry about the 70 million Tamils whose feelings and sentiments you have hurt incurably by assisting Srilanka to kill over 1,00,000 Tamils. The anger in them is building up and it is evident in the hearts of the youth. Do something good to the Srilankan Tamils and help them establish Eelam before the real war breaks out. I can analyse as I have lived in a few neighbouring countries for more than a couple of decades, you can never stop the war once the Tamils beging ot wage the war, it will lead to catastrophic calamity. It is high time the Inidan govenment regretted its foolishness and started doing something good for the Tamils who are bottling up their anger.

    September 17, 2010 at 07:31

Your email address will not be published. Required fields are marked *

*