TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள்

யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள், அவர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டார்கள். இப்படிப் பல விடயங்கள் தமிழர்களை இவ்வளவு அழிவுகட்குப்பின் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

31 பாராளுமன்ற ஆசனங்களுக்காக வடக்கு கிழக்கில் 1869 வேட்பாளர்கள் தேர்தலில் குதித்துள்ளனர். இவற்றில் புதிதாக வந்த கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான கஜேந்திரகுமாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்பதாகும்.

கஜேந்திரகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள், விலக்கப்பட்டவர்களிலும் விலகியவர்களிலும் 10 பேர்வரை இருந்தும் பத்மினி, கஜேந்திரன் ஆகியோரோடு மேலும் வேறு சிலரைச் சேர்த்து தனது புதிய கட்சியை அமைத்துள்ளதாக அறியப்படுகின்றது.

இப்புதிய கட்சியின் முக்கிய நோக்கம் புதியதோர் தலைமையை உருவாக்குவதாகும். அதன் காரணமாகவே கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் “நாம் யாழ். மாவட்டத்திலும், திருமலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தோற்கடித்து புதிய தலைமையை உருவாக்கவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், ஒற்றுமையை குலைக்கும் தலைவர்களை தோற்கடிப்போம்” என்றும் கூறியுள்ளார்.

இவரின் கூற்று எல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் ஆரம்பக் கொள்கை கோட்பாடுகளை விட்டுவிட்டது என்பதாகும். அந்தக் கொள்கையின் கோட்பாடுகள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம் – அதற்கு முன்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பம் பற்றி பலவிதமான கதைகள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வரலாற்றை நான் இங்கு ஆராய வரவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை நான் எங்கும் எழுத்துருவில் வாசிக்கவில்லை. கஜேந்திரகுமாரின் கடந்த வார அறிக்கைகள் மூலம் சில விடயங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சிலர் விடுதலைப்புலிகளின் தலைமை தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்ததாகவும், ஒற்றுமையைக் கொண்டு வந்ததாகவும் வானொலிகளில் கதைக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தலைமையின் தலையீட்டுக்கு முன்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுவிட்டது என சில ஊடகவியலாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. அந்த ஆய்வுகள் கூட முற்று முழுதாக சரியானதாக இல்லை என இத்தோடு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. எனவே இது ஓர் ஆய்வுக்கு உரிய விடயமாகும்.

இனி கஜேந்திரகுமாரின் பிரிவுக்கான காரணங்களை அவர் கூறும் விடயங்களை வைத்தே விளங்க முனைவோம்.

சம்பந்தர் அவர்கள் தேசியக் கூட்டமைப்பால் எழுதப்பட்ட தீர்வுத்திட்டம் ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டதாக கூறியிருந்தார். அத் தீர்வுத்திட்டத்தில் உள்ள குறைகளையும், அது எழுதப்பட்ட விடயங்களளையும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் 08-03-2010 ஊடக அறிக்கையில் பார்க்கமுடியும்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தாம் ஒஸ்லோவில் எட்டிய தீர்மானமானது சமஸ்டியைப் பற்றிக் கதைப்போம் என்பதாகும். இது சிங்களப் பக்கத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை விடுதலைப் புலிகளின் தலைவரும் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி தாம் பேசத் தயார் என கடந்த 3 – 4 மாவீரர் நாள் உரைகளில் கூறியுள்ளதையும் நாம் பார்க்கலாம்.

கஜேந்திரகுமார் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் “சம்பந்தர் ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் வரையப்பட்டதாகக் கூறினாலும், இது புலிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – இதை சிவநேசனின் இறுதி நிகழ்வில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒஸ்லோ தீர்மானத்தைக் கைவிடுங்கள் எம்மால் கொண்டுவரப்பட்ட இடைக்கால தன்னாட்சியின் அடிப்படையில் உங்கள் விடயங்களைக் கவனியுங்கள்” என மாவை சேனாதிராசாவிடம் கூறியதாக கூறியிருந்தார்.

இங்கு முக்கியம் என்னவெனில் ஒஸ்லோத் தீர்மானம் – உள்ளக சுய நிர்ணயம் பற்றியதாகும். அது பற்றி சில தர்க்க வாதங்கள் வந்தபோது, அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உள்ளக சுயநிர்ணய நிலைக்கு விளக்கம் கொடுத்ததோடு, “நாம் வெளியக சுயநிர்ணயம் பற்றியும் கதைக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இப்போ சுதந்திர தமிழீழத்தைப் பிரகடனம் செய்த தந்தை செல்வாவோ, அதற்காக ஆயுதமேந்திப் போராடிய போராளிகளோ அவர்களின் தலைமைகளோ இல்லை. இப்போ வரலாற்றில் நாம் எமது போராட்டப் பாதையில் மூன்றாவது கட்டத்துக்குப் போய் உள்ளோம். அது ஜனநாயக ராஜதந்திரப் போராட்டமாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் நகரத் தொடங்கியுள்ளது. இதை கூடியளவு புலம் பெயர் தமிழ் பேசும் அமைப்புக்கள் செய்ய முனைந்தாலும், இலங்கையில் தற்சமயம் தமிழ் பேசும் மக்களின் ஒரே தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

அவர்களில் திரு சம்பந்தன் அவர்கள் 50 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் அனுபவத்தையுடையவர்கள். அவர் எமது அகிம்சா முறைப் போராட்டங்கள், ஆயுதப் போராட்டங்கள், அதன் அழிவுகளை நேராக அனுபவித்துக் கொண்டிருப்பவர். அவர் இக் காலகட்டத்துக்கு ஏற்ற ஓர் தீர்வை இந்திய அரசின் முன்பும் இலங்கை அரசின் முன்பும் வைக்க முயல்கின்றார்.

அத்தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் ஆலோசனையுடனேயே வரையப்பட்டது. இங்கு நாம் ஜனநாயக முறையைக் கவனித்தோமானால் தொடர்ந்து 3 – 4 தலைமைகள் இவ் விடயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இங்கு ஒருவருக்கு விருப்பமில்லை என்பதால் அத் தீர்மானம் கைவிடப்பட வேண்டும் என்பதல்ல.

கஜேந்திரகுமார் ஜனநாயக முறைப்படி தனக்கு அது ஏற்றுக்கொள்ள முடியாததால் விலகி புதிய கட்சி தொடங்கி அத் தீர்வுத் திட்டத்தை விமர்சிப்பதும் ஜனநாயமானதே. ஆனால் அவரது தர்க்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்பதுதான் கேள்வி.

அவரது கட்சியின் கொள்கை – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய அடிப்படைகளை உடையதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைக் கைவிட்டுவிட்டதாகவே அவரது வாதம் செல்கிறது. அவற்றை ஓரளவு விபரமாகப் பார்ப்போம்.

நான் நினைக்கின்றேன் கஜேந்திரகுமார் “தாயகம்” என்று கூறும் போது அது வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணங்கள் என்றும், “தேசியம்” என்று கூறும் போது தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனம் என்றும், “சுயநிர்ணய உரிமை” என்று கூறும் போது எமக்கு எப்படியான அரசியல் தீர்வு வேண்டுமோ அதை தீர்மானிக்கும் உரிமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும்.

அதன் பின் “தனித்துவமான தேசம்” என்னும் போது அது தமிழ் பேசும் மக்களுக்கான தனிநாட்டைக் குறிக்கின்றதா? அப்படியானால் அத் தனிநாட்டைத்தான் “தாயகம்” என்று குறிப்பிடுகின்றார்களா? அல்லது இத் தாயகம் – தனித்துவமான தேசமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அப்படியானால் நாம் அதை தமிழீழம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அப்படி எடுத்துக் கொண்டால் தான் நாம் எமது தனித்துவமான “இறைமையைப்” பற்றிப் பேசலாம் என நினைக்கின்றேன்.

அடுத்து மேலும் அவர் “இரண்டு தேசங்கள் ஒரு நாடு” என்று கூறுகின்றார். அப்படியானால் ”ஈழ தேசம்” “ சிறீலங்கா தேசம்” இலங்கை நாடு என்பதா? அல்லது வேறு கருத்தில் கூறப்பட்டதா?

அப்படி இலங்கைக்குள் இரண்டு தேசமாக இருந்தால் இறைமை எங்கு இருக்கும் தேசங்கட்கா? நாட்டுக்கா? நாம் தமிழர்களா? இலங்கையர்களா?

உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்தோமானால் அங்கு 52 மாநிலங்கள் அல்லது தேசங்கள் (States) உள்ளன. அம்மக்கள் எல்லோரும் அமெரிக்கர்களே. இறைமையும் அமெரிக்க தலைமைகளின் கீழேயுள்ளது. இந்தியா, சுவிற்சிலாந்து, கனடா போன்ற உதாரணங்களை எடுக்க முடியும். எனவே இரு தேசம் ஒரு நாடு என்பது கஜேந்திரகுமார் கூறுவது போல் தமிழர் தாயகம் “தனித்துவமான தேசமாகவும் தனித்துவமான இறைமையுடையதாக இருக்குமா?”

அடுத்து வேறு ஓர் இடத்தில் கஜேந்திரகுமார் அவர்கள் “நாம் சிறீலங்காவின் இறைமையை நிராகரிக்கவில்லை. எமது அடிப்படைக் கொள்கையில் உள்ள விடயங்களான தாயகம், தேசியம் சுயநிர்ணயம், தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டும்” என வலியுறுத்துவதாகக் கூறுகிறார். அப்படியானால் உண்மையில் தனித்துவமான தேசத்தையும் இறைமையும் கோரவில்லையா? இது பேச்சுவார்த்தையில் பேரம் பேசக்கூடியதா? அல்லது அவற்றுக்கு மாற்று இருக்க முடியாதா?

இரண்டு தேசம் ஒரு நாடு என்ற உங்கள் கொள்கையில் இறைமை எங்குள்ளது தேசத்திலா அல்லது நாட்டிலா? தனிநாடு கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். ஈழப்பகுதியே சுடுகாடாகிவிட்டது. இந் நிலையில் அதே தனிநாடு எடுப்பது தான் நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடனாகலாம். ஆனால் நீங்கள் கேட்பது தனி நாடா? இதை நீங்கள் மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த அழிவுகளை உணர்ந்து மக்களை பழைய நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் ஓர் இடைக்காலத் தீர்வை நோக்கிப் போவதாகத் தெரிகிறது.

மரண முகாம்களில் இருந்து மக்கள் தமது மண்ணுக்குப் போகவேண்டும், அவர்கள் திரும்பவும் சுமூகமாக, நிம்மதியாக வாழும் சூழலினை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இராணுவ முற்றுகை எடுக்கப்பட வேண்டும். இவை நடந்து முடிய பல வருடங்களாகலாம். அப்போ அரசியல் மாற்றங்கள் வரலாம். கொள்கை கோட்பாடுகள் மாறலாம்.

ஆனால் மக்கள் மரண முகாம்களில், விடுதலைப் புலிகள் என்ற பெயரில் 12 000 – 13 000 இளம் வயதினர் வதை முகாம்களில், நீங்களோ இறைமையைப் பற்றிய தர்க்கத்தின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைத்தது மட்டுமல்ல உங்கள் நடவடிக்கைகள் மறைமுகமாக மகிந்த ராஜபக்சவுக்கே உதவுகிறது என்பதை உணரமுடியாதவராக இருக்கிறீர்கள்.

அடுத்து இலங்கைச் சட்டத்துள் உங்கள் கொள்கையை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்ய முடியுமா? ஆறாவது திருத்தச் சட்டம் எதைக் கூறுகிறது என்பது மக்களுக்கு தெரியாவிட்டாலும், வேட்பாளர்கள் அனைவர்க்கும் அது பற்றித் தெரியும். எனவே அதுபற்றி நீங்கள் உங்கள் வாக்காளர்கட்கு விளங்கப்படுத்த வேண்டும்.

உங்கள் கொள்கையோடு ஆறாவது திருத்தச்சட்டம் ஒத்துப் போகின்றதா? தனித்துவமான தேசம் தனித்துவமான இறைமை, இரு தேசம் ஒரு நாடு எனத் தர்க்கித்து தனிக்கட்சி அமைத்த நீங்கள் ஆறாவது திருத்தச் சட்ட விதிகளை மதித்து இலங்கைப் பிரசையாக வாழ்வதாகச் சத்தியப்பிரமாணம் செய்துதான் வேட்பாளராகப் போகின்றீர்கள்.

பின் பாராளுமன்றம் போகும் போது அதே ஆறாவது திருத்தச் சட்டவிதிகளின்படி தனி நாடு கோரமாட்டோம் என்றும் அது சம்பந்தமாக உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பிரச்சாரம் செய்ய மாட்டோம் எனச் சத்தியப்பிரமாணம் செய்கின்றீர்கள். பின் எப்படி உங்களது கொள்கைக்கு ஓர் முக்கியத்துவம் இருக்க முடியும். இது மக்களை ஏமாற்றும் ஓர் நிலைமை போல்இல்லையா?

புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் தாயகத்தில் உள்ள தமிழர்கள் இடர் தீர சுதந்திர ஈழமே வேண்டும் என்று கூறுகின்றார்கள். நடந்து முடிந்த கருத்துக்கணிப்பு தேர்தல்களிலும் 98 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் அதற்கே வாக்களித்துள்ளனர்.

அதே நிலைமை ஈழப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கமடைந்தபின் சிலகாலம் பிற்போடப்பட்டதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் மேலே கூறியது போல் முழு தமிழர்களுமே அகதிகளான நிலையில் எமது பாதையில் சில மாற்றம் வேண்டும். அப்பாதை புலம் பெயர் மக்களால் ஓர் ஜனநாயக இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் ஈழத்தில் ஜனநாயக முறையிலும், சாத்வீக முறையிலும் மக்களை பழைய நிலைக்கு கொண்டுவர முயலவேண்டும். இவர்களது பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். காலப் போக்கில் நாம் எமது அபிலாசைகளை வென்றெடுப்போம்.

எனவே அன்பார்ந்த ஈழத்தமிழ் பேசும் பெருமக்களே!

எங்கள் உரிமைகளை சிங்களவர்களோடும், இந்தியாவோடும், உலக நாடுகளோடும் பலத்தோடு நின்று பேரம் பேசக்கூடியதாக இருக்க வேண்டுமானால் தமிழர் தரப்பின் பிரதிநிதித்துவம் நிலைநிறுத்தப்பட்டு பலமான சக்தியாக இனங்காட்டப்படவேண்டும். எனவே வாக்குகளை பிரியவிட்டு தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகளுக்கு வாய்ப்பளிக்காமல், தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அணியில் நின்று தமிழ் தேசியத்தை பலப்படுத்துவோம். அதுவே தமிழர்களின் இப்போதைய தெரிவு.தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள், அவர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டார்கள். இப்படிப் பல விடயங்கள் தமிழர்களை இவ்வளவு அழிவுகட்குப்பின் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

எங்கள் உரிமைகளை சிங்களவர்களோடும், இந்தியாவோடும், உலக நாடுகளோடும் பலத்தோடு நின்று பேரம் பேசக்கூடியதாக இருக்க வேண்டுமானால் தமிழர் தரப்பின் பிரதிநிதித்துவம் நிலைநிறுத்தப்பட்டு பலமான சக்தியாக இனங்காட்டப்படவேண்டும். எனவே வாக்குகளை பிரியவிட்டு தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகளுக்கு வாய்ப்பளிக்காமல், தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அணியில் நின்று தமிழ் தேசியத்தை பலப்படுத்துவோம். அதுவே தமிழர்களின் இப்போதைய தெரிவு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*