TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடிய போகும் ஈழத்திற்காக காத்திருப்போம்

இனிய ஈழம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, புலம்பெயர் தமிழ் உறவுகளே , காலத்தின் கட்டாயமும் நேரத்தின் நெருக்கடியுமே இன்று தமிழ் இனத்தை இந்த நிலைக்கு ஆளாக்கியுருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை, தேசிய தலைவரின் நோக்கமும் செயலும் என்றுமே தோற்றதுமில்லை தோற்க போவதுமில்லை,

இன்று நமது உறவுகள் எதிர் எதிர் அறிக்கைகளை விடுத்து அறிக்கை வீரர்களாக தான் காட்சி அளிக்கிறோம் , இது வேதனையிலும் வேதனையானது , மாவீரர்களின் வீரத்தை விலை பேசமுடியும்மா? நம் யாவராலும் செய்ய முடியா தியாகத்தை செய்து இன்று தமிழரின் எண்ணங்களில் வாழும் மாசற்ற அவர்களின் தியாகத்தை மறந்து செயலற்று தமிழன் ஆகிவிடுவானோ என்று நெஞ்சம் பதைக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருப்பது உண்மை , ஆனால் ஈழம் என்று எண்ணம் எழும்போது இதயத்தில், அதை அடைந்தே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் மட்டுமே எழ வேண்டும்.

என் இனிய உலக தமிழினமே,

இன்னல்களால் அல்லாடும் ஈழ தமிழினம் நல்லதோர் விடிவை பெற உங்களால் ஆனா முயற்சிகளை மேற்கொள்ளும்படி கரம் குவித்து சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன், உலகின் பெரும்பாலான நாடுகளில் வாழும் தமிழினம் தமக்கென தனி நாடை பெற்றிருக்கவில்லை, இன்றும் சிற்றினங்களே தமக்கென தனி நாடை பெற்று ஆண்டுவருகிறது, இந்த சூழ்நிலையை மாற்றி தமிழினத்திற்கு தனி நாடை அமைத்து, சிறந்ததொரு ஆட்சி நிர்வாகத்தை உலகிற்கு காட்டிய ஒரே தலைவன் பிரபாகரன், இவ்வுலகின் கண்ணிற்கு உறுத்தலாக இருந்தது ஈழத்தின் அரசமைப்பு, ஈழத்தின் தலை சிறந்த நிர்வாகம், வல்லரசுகள் என்று வீராப்பு பேசும் நாடுகளுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவிடுமோ என்ற தீராத அச்சத்தின் காரணமாக குறிப்பாக இந்தியாவுக்கு, தரம் தாழ்ந்த இலங்கை ஈனர்களுடன் கரம் கோர்த்து தமிழின அழிப்பை அரங்கேற்றியுள்ளனர்.

தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அம்மையார் அவர்கள் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிடும்போது, பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு ‘வோர் ஹீரோ’ என்பதில் சந்தேகம் இல்லை.

நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள ‘மடு’ தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் “அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல” என்று சொன்னார். உலகில் வாழ்வதற்கு ஈழத்தை போன்ற சிறந்த தேசத்தை தான் கண்டதில்லை என்று கூறியுள்ளார் ,

இவ்வாறாக பலராலும் பாராட்டப்பட்ட ஈழ தேசம் இன்று கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறது, வாழ வேண்டிய இனம் இன்று வளங்களை இழந்து அல்லலில் அழுகிறது, இந்த குரல் இதுவரை ஐக்கிய நாடுகளின் செவிகளில் ஒலித்தும் பாராமுகமாக இருந்து வருகிறதே எதனால் என்று அறிந்துகொள்ளுங்கள், காலகாலமாக தமிழன் அடிமையாகவே வாழவேண்டும் என்று ஆசை கொள்ளும் வட இந்திய ஆளுமையும் இத்தாலி வரவு இந்தியாவின் மருமகள் என்று மார்தட்டி கொள்ளும் சோனியாவின் தணியாத ஆசையுமே இன்று ஈழம் சந்தித்து கொண்ட பேரவலத்திற்கு காரணம் .

என் இனிய தமிழினமே முள்ளிவாய்க்கால் முடிவல்ல மண்ணோடு மண்ணாக இந்திய இலங்கை கூட்டுப்படையினரால் உயிரோடு புதைக்கப்பட்ட தமிழினத்திற்கு தயவு செய்து யாரும் அஞ்சலி செலுத்தவேண்டாம் அப்படி அஞ்சலியோ வீரவணக்கமோ செலுத்த நினைப்பதாக இருந்தால், உண்மையில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் , கொடு வாளையும் எடுக்க வேண்டாம் எடுக்கும் நம் குல வீரர்களுக்கு தோள் கொடுத்தாலே போதுமானது, வீணர்களின் வீண் பேச்சுக்கு விலை போகாமல் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தை உலகின் அத்துணை சமூகத்திற்கும் எடுத்து சொல்ல வேண்டும்,

ஐ நா உயர் பதவியில் இருக்கும் நல்மனம் கொண்டவர்கள் பலரின் விடா முயற்சியால் ஐ நா செயலர் நாயகம் அவர்கள் தற்பொழுது இலங்கையின் கொடுஞ்செயலை கண்டித்ததோடு ஐ நா தூ தூதுவர்களையும் அனுப்பவுள்ளதாக கூறியுள்ளது மகிழ்ச்சி தரும் தகவலே, ஆனால் இன்று இதற்கும் பங்கம் வைக்கும் விதமாக இந்திய வெளியுறவு செயலர் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார், முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் போது இந்திய சர்வதேச கடல் எல்லை பகுதியில் அமெரிக்க கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் ஈழத்தின் அழிவை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை, இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் அவர்கள் இலங்கை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பின்னரே அமெரிக்க பயணம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது,

இதுவரை இந்திய செயலர்களின் இந்திய பயணங்கள் குறித்து உலகம் அறிந்த கருத்து என்னவென்றால் ஒரு முறை கூட போர்நிறுத்தம் பற்றி அவர்கள் பேசவில்லை , போரை எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவந்து பிரபாகரனின் உயிரையும் பறிக்க வேண்டும் இதை தவிர தமிழினத்திற்காக சிறிதளவும் இசைவாக நடக்கவில்லை காரணம் போரை இந்திய உளவு துறையின் துணையோடு நடத்தியவர்கள் இந்திய இராணுவமே, ஈழத்தின் விடிவு இந்தியாவின் கையில் என்று இனியும் ஏமாறவேண்டாம், இன்று இந்தியாவின் நிலைமை கவலைக்கிடமானது, மாயை உலகமாகவே இந்தியா இன்று திகழ்கிறது.

வடக்கே சீனாவின் ஆக்கிரமிப்பு மேற்கே பாகிஸ்தான் , கிழக்கே மாவோயிஸ்ட் மற்றும் பங்களாதேஷ் என்று யாவருமே இந்தியாவை சட்டை செய்வதில்லை எனவேதான் அறிவு சார் சான்றோர்களே போராட்டத்திற்கு வலு சேர்ப்போம் , ஈழத்தை வளமாக்க ஆக்க பூர்வமான செயல்களில் மட்டுமே ஈடுபடுவோம், தமிழகத்தின் தலைவர்களை ஒன்றிணைத்து ஈழபோராட்டத்திற்கு வலு சேர்ப்போம் , அதற்குமுன் ஈழத்தில் அரசியல் தலைவர்களை ஒன்றிணைப்போம் , இல்லையேல் ஈழ அரசியல் தலைவர்களை ஒட்டு மொத்தமாக புறந்தள்ளுவோம்,

தேசிய தலைவன் இருக்கிறார் அதனை மனதில் நிறுத்தி அடுத்த கட்ட ஈழ போராட்டத்தில் பங்கு கொள்ள தயாராவோம், தேசிய தலைவர் இறந்ததாக இலங்கை இந்தியாவுக்கு சான்று வழங்கட்டும் அதுவரை சற்று பொறுத்திருங்கள் , அதற்குப்பின் தமிழ் ஈழத்தின் வரலாறு எப்படி எழுதப்படுகிறது என்று உலகம் தெரிந்து கொள்ளும் .

ஈழத்திற்காக இந்தியாவிலிருந்து ஒரு குரல்

நாம் தமிழர்
ஏ.சேகர்
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
 • Sankiliyan says:

  O.K, if your thalaivar is not dead, what is the use of him. He is a coward. He killed the tamil people backwards. He done nothing to the tamil community.

  March 17, 2010 at 13:02
 • raseendran nadarasa says:

  any time i am ready 00971557339623 00971509667089 i want to make tamil eelam i will kill min 10 army

  March 17, 2010 at 13:06
 • kavi says:

  makal palam enrum undu………….kavi

  March 19, 2010 at 14:47

Your email address will not be published. Required fields are marked *

*