TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“நாடு கடந்த தமிழீழ அரசு” தோள் கொடுப்போம்

ஈழத் தமிழர்களின் “விடிவுக்காக, சுதந்திரத்திற்காக” “நாம் எடுக்கும் இறுதி யாத்திரை” இளையோரே விரைந்து வாருங்கள்…

அன்று போருக்கு இலக்கணத்தைக் கொடுத்தோம் இன்று ஒற்றுமைக்கு அர்த்ததைக் கொடுப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசின் கனடா கிளை அமைப்பாளர் கலாநிதி ராம் சிவலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.

* நாம் நடாத்துவதோ எமது மூன்றாம் கட்டப் போர். இது உலக சட்ட திட்டங்களுக்கு அமைய பிரபல வழக்கறிஞர் உருத்திரா விசுவநாதனினால் வழி நடாத்தப்படும் ஓர் தார்மீகப் போர் ஒரு அறவழிப் போராட்டம். ஈழத் தமிழர்களின் விடிவுக்காக அவர்களின் சுதந்திரத்திற்காக நாம் எடுக்கும் இறுதி யாத்திரை. தமிழுக்கும் தமிழருக்கும் ஆபத்து என்றால் தன் உயிரையே தரத் தயங்காத எம் இளைய சமுதாயம் ஏன் இன்று தடுமாறுகிறது? நிலை குலைந்து நிற்கிறது. வீர இனத்தின் வித்துக்களாகிய நீங்கள் உறுதியோடு உருத்திரகுமாரன் அவர்கள் முன்னெடுக்கும் இம் மாபெரும் பணிக்கு விரைந்து செயற்பட முன்வாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கலாநிதி ராம் சிவலிங்கம் அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு:

நதிகள் ஒன்றாகச் சேர்நது ஆறாக மாறும்போது தானே அது வலிமை பெறுகிறது. இது நமக்கு இயற்கை தந்த பாடம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழியைப் பாருங்கள்.

* இது எமது மூதாதையர் எமக்குக் கற்பித்த உண்மை. இவையெல்லாம் நமக்கு எதைக் கூறுகின்றது?

* எமது ஒற்றுமையின் தேவையை அதன் அவசியத்தை எமக்கு அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் சொல்ல வில்லையா?

* எம்மிடம் ஒற்றுமை இல்லை என்று கூறுகிறார்களே அது உண்மையா?

எப்படி அது உண்மையாகலாம். சற்று சிந்தியுங்கள். புலம்பெயர் தமிழீழ அரசின் நோக்கமும் அதன் செயற்பாடும் ஏதாவது ஒரு தமிழ் அமைப்புக்கோ அதன் செயற்பாட்டிற்கோ தடையாக இருக்கிறதா அல்லது முரணாக உள்ளதா? இல்லவே இல்லை. மாறாக எல்லோரையும் அரவணைத்துச் செல்லவல்ல வாகனமல்லவா இந்தத் தமிழீழ அரசு.

நாம் வேண்டி நிற்பதும் அடைய இருப்பதும் இறமையான சுதந்திரமுள்ள தமிழ் ஈழம். எமது செயற்பாடுகள் யாவும் ஜனநாயக முறையிலானதும் வெளிப்படையானதும் அல்லவா. அது மாத்திரமல்ல இது ஈழத் தமிழர்களுக்காக தமிழரால் அமைக்கப்பட்ட ஓர் கட்சி சார்பற்ற அமைப்பு. இதில் யார் விரும்பினாலும் சேரலாம் எவர் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆதலால் ஒற்றுமையின்மைக்கு இங்கு இடமே இல்லை என்பது என்ன புரியாத புதிரா அல்லது விளங்காத விடயமா.

* நாம் நடாத்துவதோ எமது மூன்றாம் கட்டப் போர். இது உலக சட்ட திட்டங்களுக்கு அமைய பிரபல வழக்கறிஞர் உருத்திரா விசுவநாதனினால் வழி நடாத்தப்படும் ஓர் தார்மீகப் போர் ஒரு அறவழிப் போராட்டம். ஈழத் தமிழர்களின் விடிவுக்காக அவர்களின் சுதந்திரத்திற்காக நாம் எடுக்கும் இறுதி யாத்திரை. அப்படியானால் தமிழுக்கும் தமிழருக்கும் ஆபத்து என்றால் தன் உயிரையே தரத் தயங்காத எம் இளைய சமுதாயம் ஏன் இன்று தடுமாறுகிறது?

நிலை குலைந்து நிற்கிறது. ஆமை வேகத்தில் அசைந்து வருகிறது. தங்கள் பங்கை திறும்பட செய்த எம் தாய் குலம் ஏன் இன்று தயங்கி நிற்கிறது தள்ளாடி நகர்கிறது?

உங்கள் தடுமாற்றத்திற்கு நிலை குலைவிற்கு தயக்கத்திற்கு தாமதத்திற்கு பெயர்தான் ஒற்றுமை இன்மையா?

அல்லது எம்மிடையே உள்ள கருத்து வேறுபடுகள் எமது தமிழ் உணர்வை நாம் இழந்து விட்டதாக பறை சாற்றுகின்றதா?

தாமதம் வேண்டாம் படை எடுத்து வாருங்கள் உருத்திரா தலமையில் அணியாகத் திரண்டு ஈழத்தை வெண்றெடுப்போம்.

நாம் யார்?

* ஈழத்தாயின் இணையற்ற செல்வங்கள் அல்லவா. ஒரு கண்ணியமான இனத்தின் காவலர்கள் அல்லவா. வீர இனத்தின் வித்துக்கள் அலலவா. நாம் எடுத்த பணி என்னும் முடியாத வேளை நாம் பார்த்துக் கொண்டிருப்பது பாவமல்லவா?

* நட்டாற்றில் எமது உறவுகளை விடுவது சரியா? நீங்களும் கைவிட்டால் அவர்கள் எங்கு போவர்கள் என்னதான் செய்வார்கள் என்று ஒருமுறை சிந்தியுங்கள்?

எம இனிய உறவுகளே!

தமிழ் உணர்வை நீங்கள் இழக்கவுமில்லை. உங்கள் உடன் பிறப்புகளை நீங்கள் மறக்கவுமில்லை. எம்மிடம் சிறு கருத்து வேறுபடுகள் இருப்பது இயற்கையும் ஆரோக்கியமானதும் தானே. எமது நோக்கத்திலும் அடைய இருக்கும் குறியிலும் எந்த வித வேறுபாடும் இல்லையே. நாம் வேண்டி நிற்பதும் அடைய இருப்பதும் இறமையான சுதந்திரமுள்ள ஓர் தனி நாடு தானே.

புதுமை மிக்க தமிழீழ அரசின் அரசியலை நாம் நன்றாக அறியவேண்டிய நேரம் இது . இந்த மூன்றாம் கட்டப்போரை அதன் தனித்துவத்தை நாம் புரிய வேண்டிய காலம் இது. பற்றி எரியும் எம் உள்ளக் குமுறலை தணிய வைத்துவிட்டு நாம் எல்லோரும் தமிழீழ அரசு என்ற அந்தத் தார்மீகப் போருக்கு எம்மைத் தயார் செய்ய வேண்டும். இதுவே எம் வேண்டுதலாகும்.

பாட்டுக்கு பரவசத்தையும் ஆடும் கலைக்கு அர்த்தத்தையும் போருக்கு இலக்கணத்தையும் தந்தவர்கள் நாமல்லவா. வானமே எம்மை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து வரும் எம் இனமே!

இராஜபக்சாவின் தேர்வு சீனாவின் இலங்கை வருகை எமக்கு சாதகமாக இருந்தாலும் எமது வெற்றி எமது கையில்த்தான் தங்கியிருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்

* தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமைக்கு அர்த்ததையும் தனித்துவமான எம் முயற்சிக்கு முதல் இடத்தையும் கொடுத்து தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் நாம் எல்லோரும் முழு மனத்துடன் பாடுபட வேண்டும் என்பதே என் அவா. தேர்தல் வேலைகளைக் கவனிக்க தேர்தலில் பங்கு கொள்ள எமக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்களும் பங்காளிகளும் தேவை. தயவுசெய்து எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வேதனைகளின் மத்தியில் வெற்றியை வேண்டிநிற்கும் என் உறவுகளே!

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அர்த்தமுள்ள அறவழிப் போருடன் எம்மை இணைத்து அங்கு முள்ளு வேலிக்குள் முடங்கி இருக்கும் எம் உறவுகளை நடை பிணமாக வாழும் எம் சந்ததியை மீண்டும் வாழவைக்க நாம் எல்லோரும் முன்வர வேண்டும். அவர்களுக்கு ஒரு இறமையான சுதந்திரமுள்ள ஒரு தமிழ் ஈழத்தை அமைக்கும் வரை நாம் உறங்க மாட்டோம் என்று சபதம் எடுத்து செயற்பட வேண்டும்.

தமிழரை அழிக்க எல்லா சிங்கள கட்சிகளும் சிங்களவர்களும் ஒன்ற்றிணைந்து நிற்கும் போது அந்த அப்பாவித் தமிழரை காக்க நாம் ஏன் ஒன்றாக முழு மூச்சுடன் செயற்பட முடியாது? என்று ஒருமுறை உங்களை நீங்களே கேளுங்கள். அதற்கான விடை நிற்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். இது சத்தியம்.

என கலாநிதி ராம் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*